தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 april 2013

மனோ கணேசன் மீதான தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்


தந்தை செல்வாவின் 36ம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு
 தந்தை செல்வா. 
தமிழர்களுக்காக?? ஜனனம் மார்ச் 31, 1898. 
தமிழீழ மண்ணில் மரணம் ஏப்ரல் 26, 1977. 

[ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013, 08:05.22 AM GMT ]
தந்தை செல்வாவின் 33 ம் ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9.00 மணிக்கு தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பேராயர் ஜெபநேசன் தலைமையில் தந்தை செல்வா சதுக்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில், தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், இந்திய துணைத்தூதுவர் வே.மகாலிங்கம் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


மனோ கணேசன் மீதான தாக்குதலை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்
[ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013, 09:05.01 AM GMT ]
கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக மலையக தொழிற்சங்க கூட்டமைப்பினர் கொட்டகலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் அமைச்சர் ஆறுமுகனின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் அமைச்சர் ஆறுமுகனின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக மலையக தொழிற்சங்க கூட்டமைப்பினர் கொட்டகலையில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது மனோ கணேசன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
ஜனநாயக மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை, நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் பிரதான அங்கத்தவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது,
மோதாதே மோதாதே மனோவுடன் மோதாதே”
“மலையகம் ஆறுமுகனின் பாட்டன் சொத்தா?”
“கூத்து ஒப்பந்தம் செய்து பெற்றது எவ்வளவு?”
“மலையக மக்களை விலைபேசி விற்காதே”
“ஆறுமுகத்துக்கு மதுவிலக்கு இல்லையா”
போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்ததுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
ஐந்துலாம்பு சந்தியின் முதலாம் சுற்றுவட்டத்துக்கு அருகில் மதியம் 12 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக இரண்டாம் சுற்றுவட்டத்தினூடாக வந்து கட்சியின் பிரதான அங்கத்தவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததுடன் சுமார் ஒரு மணியளவில் ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு வந்தது.
இன்றைய மனோ மீதான தாக்குதல் எதிர்ப்புப் போராட்டம் மனித மலையக வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாள்
இன்று கொழும்பு ஐந்துமுலாச் சந்தியில் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன் மீதான தாக்குதலைக் கண்டித்து நடாத்தப்பட்ட அகிம்சை போராட்டமானது மலையக வரலாற்றில் இனி வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளாக அமையும் என ஜனநாயக மக்கள் முன்னணித் ஊடகச் செயலாளரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்க்கரா தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்குக் கிழக்கு தெற்கு மலையகம் என தமிழர்கள் எங்கு துன்பப்படினும் குரல்கொடுக்கும் முறைக்கமைய கடின உழைப்பில் தமது இரத்தத்தை தாரைவார்த்து தொழில் செய்து வாழ வழியில்லாமல் அடிப்படை வசதிகள் அற்று வாழும் மலையக மக்களின் சம்பள உயர்வுக்காக இரகசிய ஒப்பந்தத்தை எதிர்த்து அகிம்சை வழியில் போராடிய எமது தலைவர் மீது தமது பிழையை மூடிமறைக்கவும் பிழையை ஒத்துக்கொள்ள வழியில்லாமலும்,
ஆறுமுகம் தொண்டமானால் ஏவப்பட்ட ஏவல் பேய்களின் வன்முறை மதுவெறி ஆட்டத்தில் எமது தலைவர் காயமடைந்ததைக் கண்டித்து நடாத்தப்பட்ட இப்போராட்டத்தில் பல கட்சி அங்கத்தவர்கள் கலந்து கொண்டதுடன் இனியும் மலையகத்தில் வன்முறைக்கு இடமில்லையென்பதை போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெளிவாக இன்றைய அகிம்சைப் போராட்டத்தில் கூறியுள்ளனர்.
அதேவேளை சட்டம் எல்லோருக்கும் சமம் என்று கூறப்பட்டாலும் அடையாளம் காணப்பட்ட தாக்குதல் நடாத்தியோர் கைது செய்யப்படாதது சட்டம் மீதான சந்தேகத்தை வலுப்படுத்துகிநது. சட்டம் தன் வேலையைச் செய்ய அரசு ஆவண செய்யவேண்டும். தாக்குதல் நடத்தியோர் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என பாஸ்க்கரா தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten