தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 april 2013

மலேசிய அரசியல்வாதி மீது தாக்குதல்!- இரு இலங்கையர்கள் கைது


மட்டு.கொக்கட்டிச்சோலையில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 08:02.42 AM GMT ]
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை பகுதியில் அழுகிய நிலையில் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை பகுதியில் நேற்று காணி துப்புரவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோர் காணியில் குழியொன்று உள்ளதைக்கண்டு அதனைத் தோண்டியபோது சடலம் புதைக்கப்பட்டுள்ளதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அப்பகுதிக்கு சென்ற பொலிஸார், சடலம் உள்ள பகுதியில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலத்தை தோண்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, கொக்கட்டிச்சோலை 10ம் வட்டாரத்தில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையாக மாரிமுத்து இராஜேந்திரன் (45வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டதாகவும் குடும்ப பிரச்சினை காரணமாகவே இவர் தற்கொலை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலான விசாரணையை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மலேசிய அரசியல்வாதி மீது தாக்குதல்!- இரு இலங்கையர்கள் கைது
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 07:42.42 AM GMT ]
மலேசியாவின் பெராக் பகுதி பிடோர் ( Bidor) நகரில் மலேசிய அரசியல்வாதி ஒருவர் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் ஒரு இந்தியரும் இரு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் மே 5ம் திகதி இடம்பெறவுள்ள தேர்தல் விவகாரத்தில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக மலேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று பிடோர் நகருக்கு சென்று கொண்டிருந்த 32 வயதுடைய அரசியல்வாதி ஒருவரின் காரை வழிமறித்த மேலும் இரண்டு கார்களில் வந்தவர்கள் இத்தாக்குதலை நடாத்தியுள்ளதாக பெரக் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான அரசியல்வாதி டபா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பெரக் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் பொலிஸார் ஒரு இந்தியர் மற்றும் இரு இலங்கையர்கள் உள்ளிட்ட அறுவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டோர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இதேவேளை, தாக்குதலுக்கு இலக்கான அரசியல்வாதி இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை என மலேசிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten