தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 april 2013

அச்சுறுத்தல்களையும் கடுமையான எதிர்ப்புக்களையும் தாண்டி வலி.வடக்கு மக்களின் போராட்டம்


இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக சென்னையில் வர்த்தகம் பாதிப்பு! வர்த்தக சமூகம்
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 02:01.49 PM GMT ]
தென் இந்தியாவில் சில தரப்பினரால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மாறுபட்ட நடவடிக்கைகள் காரணமாக தமது வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை வர்த்தக சமூகம் தெரிவித்துள்ளது
இதன் காரணமாக இலங்கையர்கள் தமிழகத்திற்கு வருவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த விடயத்தில் எழும்பூர் மகா போதி மடத்தை சேர்ந்த கலவான மஹானாம தேரர் தலையிட்டு, இலங்கையில் இருந்து அதிகளவிலானவர்களை தமிழகத்திற்கு விஜயம் செய்வதற்கான, அழைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வர்த்தக சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தவிர, விசேட மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தமிழ்நாடு வரும் இலங்கையர்கள் தற்போது, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு செல்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அச்சுறுத்தல்களையும் கடுமையான எதிர்ப்புக்களையும் தாண்டி வலி.வடக்கு மக்களின் போராட்டம்
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 12:36.31 PM GMT ]
கடுமையான எதிர்ப்புக்களையும் தாண்டி வலி. வடக்கு மக்களின் போராட்டம் வெற்றிகரமாகவும் அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் முகத்தில் உமிழ்ந்து விடும் வகையில் இன்று நடைபெற்றுள்ளது
அச்சுறுத்தல்களையும் கடுமையான எதிர்ப்புக்களையும் தாண்டி வலி. வடக்கு மக்களின் போராட்டம்  வெற்றிகரமாகவும் அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் முகத்தில் உமிழ்ந்து விடும் வகையில் இன்று நடைபெற்றுள்ள நிலையில் அடுத்தகட்டப் போராட்டத்திற்கும் நில ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் தொடர்ந்து போராட்டம் நடத்துவதற்குமாக எதிர்வரும் 2ம் 3ம் திகதிகளில் விசேட கூட்டங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தல் என்ற தீர்மானத்துடன் நிறைவுக்கு வந்துள்ளது.
காலை 7:00 மணிக்கே தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக கூடிய மக்கள் 11:00 மணியை அண்மித்த போது பல மடங்காக மாறியினர்.
ஒரு கட்டத்தில் எதிர்ப்புக்களையும் மீறி மக்கள் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் நுழையவும் முற்பட்டு நில ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுள்ளதென எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.
இந்நிலையில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆராய்வதற்கும் அது தொடர்பில் தீர்மானங்களை வகுப்பதற்கும் எதிர்வரும் 2ம் 3ம் திகதிகளில் மீளவும் ஒன்று கூடுவது என்ற தீர்மானத்துடன் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதுடன், போராட்டத்தின் நிறைவில் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக சர்வதேசத்தின் கவனத்தையீர்க்கும் வகையில் உச்சநீதிமன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்வதற்காக பெருமளவு மக்கள் வழக்கு தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் தொடர் போராட்டங்கள் அடுத்த மாதத்தின் ஆரம்பத்தில் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் பொலிஸாரினதும் இராணுவத்தினரதும் கெடுபிடிகள் இன்று அதியுச்சக் கட்டத்தை எட்டியிருந்ததை காணமுடிந்தது.

Geen opmerkingen:

Een reactie posten