தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 april 2013

பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்: ஆஸி. மாஜி பிரதமர் வலியுறுத்தல் !


எதிர்வரும் நவம்பரில் இலங்கையில் கொமன்வெல்த் நாடுகள் மாநாடு நடக்கவிருக்கின்றது. இந்நிலையில் அவுஸ்திரேலியா முன்னாள் பிரதமர் மால்கம் பிரேஸர், 2700 பேரின் கையெழுத்திட்ட மனு ஒன்றினை அவுஸ்திரேலிய அரசுக்கு அனுப்பியுள்ளார்.
அதில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை கண்டித்து அந்நாட்டில் வரும் நவம்பரில் நடக்கவுள்ள கொமன்வெல்த் நாடுகள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏற்கனவே கனடா புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளது. எனவே பெரும்பாலான நாடுகள் புறக்கணிக்கும்படி வலியுறுத்த வேண்டும். இவ்வாறு மேலும் அந்த மனுவில் கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten