தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 15 april 2013

இலங்கை தமிழர்களுக்கு ராஜபக்ச அரசு அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே! இலங்கை சென்று திரும்பிய திரிணமுல் எம்.பி.!


அவுஸ்திரேலியாவில் 8வது நாளாகத் தொடரும் தமிழர்களின் உண்ணாவிரதம்!
[ திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013, 08:49.38 AM GMT ]
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னினுள்ள புரோட்மெடோஸ் தடுப்பு முகாமில் 25ற்கும் அகதிகமான தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 8ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
தமக்கு புகலிடம் வழங்கவோ அல்லது விடுதலை செய்யும்படி கோரியே இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் ஈடுபட்டவர்களில் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளதுடன் இதுவரை 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு பலர் 3 வருடத்திற்கும் அதிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோர் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பில் அரசு அக்கறை செலுத்த வேண்டுமெனவும் அவ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் இடம்பெற்று வரும் இலங்கை எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் சீ.ஐ.ஏ
[ திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013, 01:02.41 AM GMT ]
தமிழகத்தில் இடம்பெற்று வரும் இலங்கை எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ உளவுப் பிரிவு செயற்பட்டு வருவதாக தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழகத்துடன் அமெரிக்காவிற்கு பிரத்தியேக உறவுகள் காணப்படுகின்றன.
அண்மையில் முன்னாள் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன், ஜெயலலிதாவை சந்தித்து பேசியிருந்தார்.
தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் சாதாரண மக்களினால் முன்னெடுக்கப்படவில்லை.
இலங்கையில் பிளவினை ஏற்படுத்தும் நோக்கில் மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் சூழ்ச்சித் திட்டமாக இதனைக் கருத வேண்டும்.
ஜெயலலிதா சிறந்த நடிகை என்ற போதிலும் புத்தியுடையவரல்ல.
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டவும், தமிழகத்தில் சாதாரண மக்களின் இன உணர்வுகளைத் தூண்டவும் சிலர் முயற்சிக்கின்றனர்.
சீன, இந்திய எழுச்சி காரணமாக அமெரிக்கா வலுவிழந்து செல்கின்றது.
எனவே ஆசிய பிராந்திய வலயத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதனை அமெரிக்கா விரும்புகின்றது.
தமிழகத்தில் தனி ஈழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு குழப்பங்கள் விளைவித்தால் அது அமெரிக்காவிற்கு சாதகமாகவே அமையும் என குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு ராஜபக்ச அரசு அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே! இலங்கை சென்று திரும்பிய திரிணமுல் எம்.பி.
[ திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013, 12:05.20 AM GMT ]
இலங்கை தமிழர்களுக்கு, அதிபர் ராஜபக்ஷே அரசு, அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே. அங்குள்ள தமிழர்கள் எல்லாம் அச்ச உணர்வுடனே உள்ளனர். இந்த விஷயத்தில், இந்தியா தலையிட்டு, ஏதாவது செய்யாதா என, எதிர்பார்க்கின்றனர்,'' என்று, இலங்கை சென்று வந்த, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய் கூறினார்
இந்திய எம்.பி.,க்கள் குழு, சமீபத்தில் இலங்கை சென்றிருந்தது. இந்தக் குழுவில், சந்தீப் தீட்சித் (காங்.,), பிரகாஷ் ஜாவடேகர், அனுராக் சிங் தாக்கூர் (பா.ஜ.,), தனஞ்ஜெய் சிங் (பகுஜன் சமாஜ்) மற்றும் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்., - எம்.பி., சவுகதா ராய் ஆகிய, ஐந்து பேர் இடம் பெற்றிருந்தனர்.
இலங்கை பயணம் முடித்து, நாடு திரும்பியுள்ள இவர்களில், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய், நேற்று முன்தினம் கூறியதாவது:
இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில், கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பொருளாதார நடவடிக்கைகளில், சற்று சுறுசுறுப்பு காணப்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து, சாவகச்சேரி வரை சென்றோம். மார்க்கெட் பகுதிகளில், மக்கள் கூட்டம் இருந்தது. இருப்பினும், அவர்கள் மத்தியில், ஒரு சகஜமான வாழ்க்கை சூழல் இல்லை என்பதை காண முடிந்தது. இன்னமும், ஒருவித அச்ச உணர்வு, அவர்களிடம் உள்ளது.
தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், முன்பிருந்த நிலை தற்போது இல்லை மாறிக் கொண்டே வருகிறது. தமிழர் பகுதிகளில், சிங்களவர்கள் குடியேற்றமும் அதிகமாக உள்ளது. தங்களின் விளை நிலங்களை எல்லாம், சிங்களவர்கள் கைப்பற்றுவதாக, தமிழர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்படும் வீடுகளை பார்த்தோம். ஓரளவு கட்டிக் கொடுத்துள்ளனர். மற்றபடி, சொல்லக் கூடிய அளவுக்கு, சிறப்பாக பணிகள் எதுவும் நடைபெறுவதாக தெரியவில்லை.
இலங்கையில், போர் முடிந்து நான்காண்டுகள் ஆனாலும், தமிழர்கள் பிரச்சினை அப்படியே உள்ளது.
அங்குள்ள நிலைமைகளை பார்க்கும் போது, தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது, முற்றிலும் சந்தேகமே. அதிகாரங்களை அளிக்க, இலங்கை அரசாங்கம் மிகுந்த தயக்கம் காட்டுவதாகவே தெரிகிறது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இந்த மாதம் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. செப்டம்பர் வரை, அந்தத் தேர்தல்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளன.
போலீஸ் அதிகாரம், நில உரிமை அதிகாரம் போன்றவை, தமிழர்களின் பிரச்சினைகளை ஓரளவு தீர்க்க உதவும். ஆனால், இந்த இரண்டையும், இலங்கை அரசு தரவே தராது என்பது, நிதர்சனமாக தெரிகிறது.
தமிழர் பகுதிகளுக்கு, மாகாண அரசியல் அதிகாரம் வழங்குவது குறித்து, பேச்சுவார்த்தை நடத்துவதாக, இலங்கை அரசாங்கம் சொல்கிறது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில், தமிழ் தேசிய முன்னணியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க மறுக்கின்றனர். இலங்கை அரசு காலம் கடத்தும் வேலையை செய்வதாகவும் குறை சொல்கின்றனர்.
அங்கு நடந்த போரின்போது நடந்த அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க, இலங்கை அரசே குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளைக் கூட, நிறைவேற்ற இலங்கை அரசு ஆர்வம் காட்டவில்லை.
இலங்கையில், தமிழர் தலைவர்கள் சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் இந்திய தூதரக அதிகாரி மகாலிங்கம் ஆகியோரை சந்தித்தோம்.
நேரமின்மை காரணமாக, கிழக்குப் பகுதிக்கு செல்ல முடியவில்லை. பசில் ராஜபக்ச, கோத்தபய ராஜபக்ச மற்றும் வெளியுறவு அமைச்சர் பீரிஸ் ஆகியோரையும் சந்தித்தோம்.
இவ்வாறு சவுகதா ராய் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten