[ திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013, 07:03.18 AM GMT ]
இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் உதவிகளை 20 சதவீதத்தால் குறைக்க வேண்டுமென அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி யோசனை முன்வைத்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் மீள்கட்டுமான நிலைமைகளை முன் வைத்தே இலங்கைக்கான அமெரிக்காவின் உதவியில் குறைப்பினை மேற்கொள்ள வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆலோசனையில் தென் ஆசிய நாடொன்றுக்கான ஆகவும் கூடிய உதவி குறைப்பாக இது அமைவதாகவும் இலங்கைக்கு 11 மில்லியன் டொலர் உதவி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளில் நம்பிக்கை இல்லை: அமீர் அலி
[ திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013, 07:56.39 AM GMT ]
கிழக்கு மாகாண சபையின் செயற்பாட்டில் நம்பிக்கை இழந்து விட்டதாகவும் இதனால் அரசியலில் திடீர் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் நிலவுவதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலயத்தில் இருமாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சின்னாபின்னப்பட்ட மக்களைக் கொண்ட பகுதியில் பல்வேறு எதிர்ப்புக்களுடன் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் அனைத்தும் நம்பிக்கை இழந்துவிட்டது.
இந்த சபையினூடாக எந்தவித வேலைத்திட்டங்களும் நடைபெறுவதில்லை. நடக்கும் என்ற நம்பிக்கையும் இழந்து வருகின்றது. இதனால் கிழக்கு மாகாண அரசியலில் திடீர் மாற்றங்கள் ஏற்படக்கூடிய சாத்திக்கூறுகள் நிலவுகின்றன.
கிழக்கு மாகாண சபையில் ஏற்படும் மாற்றம் தேசிய அரசியலையும் பாதிக்கலாம். இதற்கான முஸ்தீபுகள் அவசரமாக நடந்து வருவதை உணர முடிகின்றது.
நாங்கள் இந்த அரசின் மீது நம்பிக்கை வைத்து அரசியலில் களமிறங்கியவர்கள். அரசின் மீது நம்பிக்கை கொண்ட எம்மில் அரசு கவனம் செலுத்தியிருந்தால் கிழக்கு மாகாண சபையின் செயற்பாட்டில் எமக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்.
முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட கிழக்கு மாகாண சபை ஊடாக தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள இனத்தைச் சேர்ந்த மூவின மக்களுக்கும் எந்தவிதமான பயனும் இல்லாத சூழ்நிலை காணப்படுகின்றது.
கிழக்கு மாகாண சபை ஊடாக எதுவுமே சாத்தியப்படாது என்ற நிலமையே இன்று மேலோங்கி இருக்கின்றது.அதனால், கிழக்கு மாகாணத்தின் செயற்பாடுகள் இவ்வாறே தொடருமாக இருந்தால் மிக விரைவில் திடீர் அரசியல் மாற்றம் நிகழ்வது நிச்சயம் எனத் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten