ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை கேட்டு தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகின்றது. பேரறிவாளன் நேரில் கேள்வி கேட்கிறார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற பேரறிவாளன் மனு மீது மத்திய தகவல் ஆணையம் இன்று விசாரணை மேற்கொள்கிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு தகவல் ஆணையத்துக்கு பேரறிவாளன் மனு தாக்கல் செய்திருந்தார்.
பேரறிவாளன் கருணை மனுவை 2012ல் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்தார்.
ராஜீவ் காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் வேலூர் சிறையில் உள்ளார். காணொளிக் காட்சி மூலம் பேரறிவானிடம் விளக்கம் அளிக்க தகவல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்த அமர்வில் டெல்லியில் தகவல் ஆணைய அதிகாரிகள், உள்துறை அமைச்சகத்தை சார்ந்த அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஏற்கனவே பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனு நிராகரித்தது தொடர்பான மறுசீராய்வு மனு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனு நிராகரித்தது தொடர்பான மறுசீராய்வு மனு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
பேரறிவாளன் மேல்முறையீடு விசாரணை ஒத்திவைப்பு
தூக்குத் தண்டனையை குறைக்கக் கோரிய கருணை மனுவை நிராகரித்ததன் காரணங்களை வழங்குமாறு, மத்திய தகவல் ஆணையத்தில் ராஜிவ் கொலைக் குற்றவாளி பேரறிவாளான் தாக்கல் செய்த மனு தொடர்பாக இன்று நடைபெற இருந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மத்திய சிறையில் இருக்கும் பேரறிவாளனுடன் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் டெல்லியில் உள்ள மத்திய தகவல் ஆணையர் விசாரணை நடத்துவதாக இருந்தார்.
ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விசாரணை ஒருவார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten