தமிழீழ இராச்சியத்தை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இந்தியாவிடம் பேராயர் இராயப்பு ஜோசப் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் தனித் தமிழ் இராச்சியம் அமைக்கப்பட வேண்டுமென மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப்பும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரியுள்ளனர்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகளிடம் இந்தக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
13ம் திருத்தச் சட்டம் அல்லது அதற்கு அப்பாலான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமெனவும் மாற்றுத் தீர்வுத் திட்டங்களை ஏற்றுக்கௌர்ள முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கை ஒன்றிணைத்து தனி இராச்சியமொன்று உருவாக்கப்பட வேண்டுமென கோரியுள்ளதாக வடக்கு புலனாய்வுத் தகவல்களை ஆதாரம் காட்டி, சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கில் வீதிகள் அமைத்து அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் பிரசாரம் செய்த போதிலும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை மன்னார் ஆயரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் குற்றம் சுமத்தியுள்ளதாகக்கு குறிப்பிடப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten