தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 14 april 2013

தம்மைத் தாமே தாக்கிக் கொள்கிறார்கள்!- உதயன் தாக்குதல் பற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!


வெளிவிவகார, பாதுகாப்பு அமைச்சுக்கள் புத்தியுடன் செயற்பட வேண்டும்: டியூ.குணசேகர
[ ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2013, 01:51.59 AM GMT ]
வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கள் புத்தியுடன் செயற்பட வேண்டுமென அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அமைச்சின் பேச்சாளர்கள் எதிர்காலத்தை கவனத்திற் கொண்டு கருத்து வெளியிட வேண்டும். பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்தக் கூடாது.
உலகப் பொருளாதார முறைமை காணப்படும் நிலையில் சர்வதேச நாடுகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.
குறிப்பாக இந்தியாவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது.
ஆர்.பிரேமதாச, ஜே.ஆர்.ஜயவர்தன போன்ற ஜனாதிபதிகள் இந்தியாவை பகைத்துக் கொண்டதனால் ஏற்பட்ட விளைவுகளை கவனத்திற்கொள்ள வேண்டும்.
சில அடைப்படைவாத சக்திகள் தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் பகைமைப்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
சிங்கள தமிழ், சிங்கள முஸ்லிம் பிளவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயற்சிக்கப்படுகின்றது.
இதன் மூலம் வெளிநாட்டு சக்திகள் நாட்டின் விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடிய சாத்தியம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


உதயன் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2013, 02:13.43 AM GMT ]
யாழ். கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள  உதயன் பத்திரிகையின் பிரதான அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துள்ள அமெரிக்கா, இந்தச் சம்பவம் தொடர்பாக நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக பொதுசன விவகார தலைமை அதிகாரி கிறிஸ்தோபர் ரீல்ஸ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவல் ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
உதயன் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா கவலையடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஊடக சுதந்திரத்தை பாதுகாக்குமாறு இலங்கை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ள அவர், இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
2ம் இணைப்பு
உதயன் மீதான தாக்குதல் குறித்த உண்மை விசாரணை அவசியம் - அமெரிக்கா
உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டமை தொடர்பில் உண்மையான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
உதயன் பத்திரிகை மீது தொடர்;ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் இலங்கையில் பத்திரிகை சுதந்திரத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்காவின் இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த காலங்களிலும் உதயன் பத்திரிகையின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதன் காரணமாக இருவர் உயிரிழந்த சம்பவமும் இடம்பெற்றது.
இந்தநிலையில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் பத்திரிகை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் தொடர்வதை உறுதிப்படுத்துவதாக அமெரிக்கத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தம்மைத் தாமே தாக்கிக் கொள்கிறார்கள்!- உதயன் தாக்குதல் பற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
[ ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2013, 06:24.07 AM GMT ]
யாழ். உதயன் தமிழ்ப் பத்திரிகை அலுவலகம் மீதும் அதன் விநியோகஸ்தர்கள் மீதும் கடந்த காலங்களில் நடந்துள்ள தாக்குதல்கள் அரசாங்கத்தின் மீது அவதூறு ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது குற்றஞ்சாட்டிய அமைச்சர் டக்ளஸ், அரசியல் தஞ்சம் கோருவதற்காகவும் மக்களிடம் அனுதாபம் பெறுவதற்காகவுமே இப்படியான தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழோசைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரித கதியில் நடாத்துமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளும் உதயன் பத்திரிகையின் செயற்பாடுகளும் கடந்த கால வன்முறைகளுக்கு துணைபோவது போல் அமைந்துள்ளதென அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வட மாகாணத்தில் தேர்தல் நடாத்தப்பட இருப்பதால் சிலர் தங்களுக்கு தாங்களே தாக்குதல் நடாத்தி அனுதாபம் தேடிக் கொள்ளும் முயற்சியாகவும், இது இருக்கலாம் எனவும் வரலாற்று அனுபவத்தில் தாம் இதை கண்டிருப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வடக்கில் வன்முறைகளற்ற தனிநபர் சுதந்திரத்தை பேணக்கூடிய சமூகமொன்று உருவாக வேண்டும் என்பதே தங்களுடைய விருப்பம் என அவர் கூறியுள்ளார்.
எனினும் பிபிசி தமிழோசை நிருபரின் சில கேள்விகளுக்கு மழுப்பலான, திசை திருப்பும் விதத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பதில்கள் அமைந்திருந்தன என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten