தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 10 april 2013

இறுதிப் போரின் போது பொது மக்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளவில்லை! இராணுவம் அறிக்கை !


மனிதாபிமான நடவடிக்கைகளின் போது, இலங்கை இராணுவத்தினர் பொது மக்களை இலக்கு வைத்து எந்தவித தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவத தளபதி ஜகத் ஜயசூரியவினால் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் இன்று காலை கையளிக்கப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், கூறப்பட்டுள்ள ஷெல் தாக்குதல் சம்பவங்கள் இலங்கை இராணுவத்தால் உண்டாகவில்லை. கட்டளை அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்பு தரப்பினர் பொது மக்களை பாதுகாத்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு உண்டான பாதகங்கள் தமிழீழ விடுதலை புலிகளின் சட்ட விரோத செயற்பாடுகளால் உண்டாகியிருக்க வேண்டும்' என்று அந்த அறிக்கையில்  இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு பாதுகாப்புக்காக ஓடி வந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை, போதிய பயிற்சி இல்லாத தமிழீழ விடுதலை புலிகள் ஏவிய பீரங்கி குண்டுகள் பொதுமக்கள் குவிந்திருந்த இடங்களில் விழுந்தமை, சிறுவர் முதியோர் உட்பட பொதுமக்களை கட்டாயப்படுத்தி அவர்களை யுத்த நடவக்கையில் இணைத்தமை உட்பட இந்த செயற்பாடுகள் காணப்பட்டன' என்றும் இராணுவம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சமூகம் தமிழீழ விடுதலை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்த குற்றங்களை நிறுத்த வேண்டிய தமது கடமையில் தவறிட்டதாகவும் இலங்கை இராணுவம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten