தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 april 2013

மீண்டுமொரு பாரிய இனப்போருக்குள் இந்த நாடு தள்ளப்படும் நிலை உருவாகும்!- மாவை சேனாதிராஜா


நீங்கள் எங்களை நாடு கடத்தலாம்!, ஆனல் எங்கள் தாய் தமிழீழத்தை எங்கள் மனதில் இருந்து நாடு கடத்த முடியாது!- நாதியற்ற தமிழன்
[ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013, 06:11.09 AM GMT ]
ஈழத்தமிழன் என்றாலே அவனை அடையாளப்படுத்தும் முக்கியமான ஒரு சொல் தான் அகதி. அவன் இல்லாத நாடு ஒன்று இந்த உலகத்தில் இல்லை.
ஏனோ ஈழத்தமிழர்களாகிய எஙகளை எவருக்கும் பிடிப்பதில்லை. நாங்கள் கதைத்தால் அது தீவிரவாதம் என்கிறார்கள். இதே எங்களை தினம் தினம் கொன்று குவித்தால் அது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்கிறார்கள்.
நாங்கள் என்ன பாவம் செய்தோம் இப்படி நாடு நாடாக அலைவதற்கு. நாங்களும் மனிதர்கள் தான் என்பதை இந்த உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் போலிருக்கிறது.
ஈழத்தமிழர் சிங்களவர் மீதுள்ள கோபம் அதே அளவு சர்வதேசத்தின் மத்தியில் வைத்திருக்கிறார்கள். உங்கள் பூகோள அரசியல் புண்ணாக்கு அரசியல் எதுவும் எங்களுக்கு தெரியாது. ஆனால் எங்களுக்கு எப்படி கேட்டால் நியாயம் கிடைக்கும் என்பது தெரியும்.
உலகமே போர்தான் ஓய்ந்திருக்கிறது போரட்டம் என்னும் ஓயவில்லை. நாங்கள் நீங்கள் செய்வதை எல்லாம் தாங்குவதற்கு காந்தியும் அல்ல, புத்தனும் அல்ல. நாங்கள் சாதரண மனிதர்கள் தான்.
நீ எங்களை நாடு கடத்து, இலங்கை அரசாங்கம் வெள்ளை வானில் எங்களை கடத்தும். பின் ஏதோ ஒரு கிணற்றில் சடலம் கிடக்கும்.சிங்கள பொலிஸ் விசாரணை நடத்தும் பின் சிங்களத்தில் ஒரு கடிதம் எழுதி கையெழுத்து வாங்குவார்கள். பின் சிறிது காலம் செல்ல மரண அறிக்கை நோயால் மரணம் என.
பின் ஒரு ஐநா மாநாடு வரும். அதில் தீர்மானம் எனும் பெயரில் ஒரு வாழ்த்து மடல் இலங்கை அரசுக்கு வாசிக்கப்படும். அதற்குள் எங்களை ஏமாற்றுவதற்கு இந்தியா எதிர்ப்பு அது இது என பத்து செய்தி. பின் மீண்டும் இந்த படலம் தொடரும்.
போர் நடந்த போது இவ்வளவு பேர் புலம் பெயரவில்லை என்கிறீர்களே. போர் நடந்த காலத்தில் எங்களுக்கு ஏதாவது நடந்தால் இயக்கம் கேட்டது. அதை விட போர் நடந்து கொண்டிருந்தாலும் நாங்கள் நிம்மதியாக இருந்தோம்.
ஆனால் இப்பொழுது அப்படியில்லை, அப்போது மரணபயம் தான், ஆனால் இப்பொழுது இராணுவத்திடம் படப்போகும் சித்திரவதையை நினைத்தே சாகவேண்டி உள்ளது.
உலக நியாயம் பேசம் நாடுகளே!
நீங்கள் ஒன்றை அறிந்து கொள்ளுங்கள் நாங்கள் நாதியற்றவர்கள் இல்லை, நாதியற்றவர்கள் ஆக்கப்பட்டவர்கள். நாங்கள் அகதிகள் இல்லை, அகதிகள் ஆக்கப்பட்டவர்கள். நாங்கள்
நாதியற்றவர்கள் ஆக இருக்கலாம், ஆனால் நாணமற்றவர்கள் அல்ல.
நாங்கள் எங்களை கொன்ற சிங்களவரை திருப்பி கொல்ல தெரியாது என்றும் இல்லை, அப்படி நாங்கள் நினைத்திருந்தால் இலங்கை எப்பொழுதொ சுடுகாடு ஆகியிருக்கும்.
எங்களுக்கு ஆயுதத்தில் எந்த விருப்பம் இல்லை, நீஙகள் ஆயுதம் ஏந்த வைத்தீர்கள். இப்பொழுதும் எங்களுக்கு ஆயுதம் ஏந்த தெரியாது என்றும் இல்லை.
முடிந்தால் நீங்கள் எங்கள் ஈழத்தை பெற்று தாருங்கள், இல்லையெனில் சொல்லி விடுங்கள், நாங்கள் ஈழத்தை பெற்று கொள்கிறோம்.
நீங்கள் எங்களை நாடு கடத்தலாம், ஆனால் எங்கள் தாய் தமிழீழத்தை எங்கள் மனதில் இருந்து நாடு கடத்த முடியாது.

-ஈழத்து நிலவன்-

மீண்டுமொரு பாரிய இனப்போருக்குள் இந்த நாடு தள்ளப்படும் நிலை உருவாகும்!- மாவை சேனாதிராஜா
[ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013, 06:19.17 AM GMT ]
அப்பாவித் தமிழ் மக்கள் மீது இனத்துவேசத்துடன் செயற்படும் குழுக்கள் இன அழிப்பு அடடூழியங்களை கட்டவிழ்த்துவிட ஆரம்பித்துள்ளன. இதன் ஆரம்ப கட்டமாகவே முள்ளியவளையில் மக்களின் தற்காலிக குடியிருப்புகள் மீது இனத்துவேசிகளால் தீ வைப்பு சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. 
தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய வாழ்வைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த காலங்களில் பல இன்னல்களை அனுபவத்து போராட்டங்களை நடத்தி வந்ததுடன் தற்போதும் அதற்காக ஜனநாயக வழியில் போராடி வருகின்றார்கள்.
இந்த நிலையில் வன்னியில் தமது இரண்டாவது வாழ்க்கையை வாழத் தொடங்கும் அப்பாவித் தமிழ் மக்கள் மீது இனத்துவேசத்துடன் செயற்படும் குழுக்கள் இன அழிப்பு அடடூழியங்களை கட்டவிழ்த்துவிட ஆரம்பித்துள்ளன. இதன் ஆரம்ப கட்டமாகவே முள்ளியவளையில் மக்களின் தற்காலிக குடியிருப்புகள் மீது இனத்துவேசிகளால் தீ வைப்பு சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பல துன்பங்களை அனுபவத்து தற்போது தமது சொந்த நிலங்களில் குடியிருக்க ஆயத்தமாகி வரும் வன்னி மக்கள் மீதான இத்தாக்குதல் மனிதாபமிக்கவர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழ் மக்கள் மீதான இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.
இத்தகைய வீடழிப்பு மற்றும் நில அபகரிப்புகள்; ழூலம் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை முழுமையாக அபகரிக்க அபகரிப்பாளர்கள் எண்ணியுள்ளனர். இதற்காக இனவாதப் போக்குடன் செயற்படும் குழுக்கள் தமிழ் மக்களின் இருப்பிடங்களை இலக்கு வைத்து தாக்குவதற்காக தமிழர் பகுதிகளில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
இதன் முதற்கட்டமாக முள்ளியவளையில் மீளக்குடியேறிய மக்கள் குடியிருந்த குடிசை வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அத்துடன் இச்சம்பவம் இடம்பெற்ற குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த இருப்பிட உரிமைக்காக ஜனநாயக ரீதியில் போராடிவரும் தமிழ்ப் பெண்கள் இரவு வேளையில் தொலைபேசி மூலம் இனந்தெரியாதோரால் அச்சுறுத்தப்பட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமளவுக்கு அங்கு வன்முறைகள் ஆரம்பித்துள்ளன. இத்தகையோர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
துன்பியல் வாழ்விலிருந்து இன்னமும் விடுபடாதிருக்கும் வன்னி மக்களின் வாழ்க்கை சிதைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோரை அரசாங்கம் இனங்கண்டு; சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இனத்துவேசத்துடன் செயற்படுவோரை அரசாங்கம் வேரறுக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் நிலங்களை அடாத்தாக அபகரிக்கும் நடவடிக்கைகளை ஒருபுறத்தில் முன்னெடுத்துக் கொண்டு மறுபுறத்தில் அவர்களை என்றுமே அச்சத்துடனான வாழ்க்கைக்குள் வாழவைக்கும் நோக்குடனும் அச்சுறுத்தும் செயற்பாடுகளையும் இனத்துவேசக் குழுக்கள் அரங்கேற்றி வருகின்றன.
தமிழ் மக்கள் மீதான இத்தகைய அடக்குமுறைச் செயற்பாடுகள் தொடர்ந்து அதிகரித்துச் செல்வதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்காது. ஜனநாயக ரீதியில் தமது சுயநிர்ணய உரிமையைக் கேட்டுப் போராட்டம் நடத்திவரும் மக்கள் மீது இனியும் இவ்வாறான சீண்டிப் பார்க்கும் மிலேச்சத்தனமான சம்பவங்கள் தொடர்ந்தால் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலை உருவாகும்.
இந்நாட்டிலுள்ள பல்லின மக்களின் ஒற்றுமையை குலைக்கும் நோக்குடன் செயற்படும் இனவாதக் குழுக்களின் இச்செயற்பாடுகளுக்கு இந்த நாட்டின் அரசாங்கம் விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையேல் மீண்டுமொரு பாரிய இனப்போருக்குள் இந்த நாடு தள்ளப்படும் நிலை உருவாகும்.

Geen opmerkingen:

Een reactie posten