தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 april 2013

கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முயற்சித்தால் அதற்கு அரசாங்கம் தடை ஏற்படுத்தும்!- சம்பந்தன்


பவித்ரா வன்னியாரச்சி இந்த ஆண்டுக்கான சிறந்த நகைச்சுவைக் கருத்தை வெளியிட்டுள்ளார்!– ஐ.தே.க
[ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013, 02:54.11 AM GMT ]
மின்சக்தி மற்றும் சக்திவலு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, வருடத்தின் சிறந்த நகைச்சுவை செய்தியை வெளியிட்டிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று அலரி மாளிகையில் ஊடக பிரதானிகளுக்கு இடையிலான சந்திப்பின் போது, மின்சார கட்டண அதிகரிப்பானது சாதாரண மக்களை பாதிக்காது என்று குறிப்பிட்டார்.
அத்துடன் விரைவில் மின்சார கட்டணம் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும் இதனை ஒரு சிறந்த நகைச்சுவை என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்தன, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நாட்டு நடப்பு தெரியாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முயற்சித்தால் அதற்கு அரசாங்கம் தடை ஏற்படுத்தும்!- சம்பந்தன்
[ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013, 04:03.47 AM GMT ]
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முற்பட்டால், அரசாங்கம் சட்டப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட கத்தோலிக்க பேராயரை அண்மையில் சந்தித்த சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் முன்னாள் போராட்டக் குழுக்களும் காணப்படுகின்றன.
இந்த நிலையில் அதனை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முற்படும் போது, முன்னாள் போராட்டக் குழுக்களின் செயற்பாடுகளின் பதிவுகளை வைத்துள்ள அரசாங்கம் சட்ட சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் சிக்கல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten