தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 17 april 2013

அமெரிக்காவின் பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டி மீதான தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்! இலங்கையருக்கு காயமில்லை


இலங்கை அரசின் மூன்று இணையதளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல்
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 01:00.07 AM GMT ]
இலங்கை அரசாங்கத்தின் மூன்று இணையத்தளங்கள் மீது மீண்டும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தம்மை “பங்களாதேஸ் கிறே ஹட் ஹக்கேர்ஸ்“ என்று அறிமுகம் செய்துள்ளவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த சைபர் தாக்குதலால், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இணையத்தளம், நாடாளுமன்ற சபை முதல்வரின் இணையத்தளம், தயட்ட குருள்ள கண்காட்சி இணையத்தளம் என்பன முடக்கப்பட்டன.
இஸ்லாம் மதத்தை  அவமதிக்கப்படுவதற்கு எதிராகவே இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக, சைபர் தாக்குதலை நடத்தியவர்கள் அறிவித்துள்ளனர்.
இஸ்லாம் அவமதிக்கப்படுவதை நான் எதிர்க்கிறேன். உங்கள் மதத்தை அவமதிக்காத போது, இஸ்லாமை ஏன் இகழ்கிறீர்கள்? இலங்கை அரசாங்கத்துக்கு கடைசி எச்சரிக்கை. இதை நிறுத்துங்கள். என்று சைபர் தாக்குதல் நடத்தியவர்கள் எச்சரித்துள்ளனர்.

எனினும் சைபர் தாக்குதலுக்கு இலக்கான மூன்று இணையத்தளங்களும் மீள இயங்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிரச தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்?
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 01:47.31 AM GMT ]
சிரச தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது,
கெப்பிட்டல் மஹாராஜ குழும நிறுவனத்தின் எம்.ரீ.வீ. மற்றும் எம்.பி.சீ ஊடக நிறுவனங்களும் தெரிவு செய்யப்பட்ட சில ஊடகவியலாளர்களுக்கும் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களிலும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும் இவற்றை சாதாரணமாக கருத முடியாது எனவும் ஊடக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
எம்.ரீ.வீ. மற்றும் எம்.பி.சீ வலையமைப்பின் சிரேஸ்ட பணிப்பாளர்களான ஷெவாக் டேனியல் மற்றும் சுசில் கிந்தல்பிட்டிய ஆகியோர் இந்த முறைப்பாட்டை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்டிருந்தனர்.

அமெரிக்காவின் பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டி மீதான தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்! இலங்கையருக்கு காயமில்லை
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 02:01.16 AM GMT ]
அமெரிக்காவின் பொஸ்டன் மதரன் ஓட்டப் போட்டி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கண்டனம் வெளியிட்டுள்ளார்.
குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.  இது ஓர் கோழைத்தனமான தாக்குதலாகும்.
2008ம் ஆண்டு இதேபோன்றதொரு பயங்கரவாதத் தாக்குதலில் இலங்கை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உயிரிழந்தார்.
பயங்கரவாதத்தின் கொடூரங்களை இலங்கை தெளிவாக புரிந்து கொண்டுள்ளது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாவிற்கு அனுப்பி வைத்துள்ள இரங்கல் செய்தியில் ஜனாதிபதி ராஜபக்ச இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொஸ்டன் குண்டு வெடிப்பில் இலங்கையர்களுக்கு காயமில்லை
பொஸ்ட்டனில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் இலங்கையர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
நேற்று பொஸ்ட்டன் மரதன் ஓட்டப் போட்டியின்போது இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
எவ்வாறியினும் இலங்கையர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தொடர்சியாக அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகரம் மற்றும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பில் இருப்பதாகவும், வெளிவிவகார அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten