தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 17 april 2013

இலங்கை பிரச்சினையில் தி.மு.க., அ.தி.மு.க.வை போல சந்தர்ப்பவாத அரசியல் செய்யாது: திருச்சி சிவா!!


அரசாங்கம் உண்மையை மூடிமறைக்க முயற்சிக்கின்றது: ஜே.வி.பி
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 02:58.25 PM GMT ]
அரசாங்கம் உண்மையை மூடிமறைக்க முயற்சிப்பதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
உதயன் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் வெற்று வார்த்தைகளை வெளியிட்டு வருகின்றது. உதயன் பத்திரிகை உள்ளிட்ட தமிழ் ஊடகங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணை நடாத்தத் தவறியுள்ளது. 
 எனினும், அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்த உதயன் பத்திரிகையே அலுவலகத்திற்கு தீயிட்டதாக, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மக்கள் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த தேர்தல் நடத்துவதாகத் தெரிவிக்கும் அரசாங்கம், மறுபுறத்தில் வடக்கு மக்களின் தகவல் அறிந்து கொள்ளும் உரிமையை முடக்குவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
ஜே.வி.பி.யின் அரசியல் செயற்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள எங்களுக்குத் தெரியும்!- சுசில் பிரேமஜயந்த
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 03:02.48 PM GMT ]
உள்நாட்டு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள எங்களுக்குத் தெரியும் என பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை இல்லாதொழித்தமைக்கு எதிராக உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் அணி திரண்டுள்ளன.  பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றி மற்றும் பொருளாதார அபிவிருத்தியை தடுக்க சில சக்திகள் முயற்சிக்கின்றன.
நாட்டுக்கு எதிரான சூழ்ச்சித் திட்டங்களை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நல்லிணக்கத்தை விரும்பும் மக்களே இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர்.
இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரச்சினையில் தி.மு.க., அ.தி.மு.க.வை போல சந்தர்ப்பவாத அரசியல் செய்யாது: திருச்சி சிவா
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 12:36.49 AM GMT ]
இலங்கை பிரச்சினையில் தி.மு.க. எப்போதும் உறுதியான நிலைபாட்டை கொண்டுள்ளது. அ.தி.மு.க.வை போல சந்தர்ப்பவாத அரசியல் செய்யாது. இவ்வாறு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார்.
தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஸ்டாலின் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே திருச்சி சிவா எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில்,
திராவிட பாரம்பரிய வளர்ச்சியை பெரியார், அண்ணாவை விட்டு விட்டு எழுத முடியாது. தி.மு.க தேர்தலில் தோற்றதால் அது அழிவை நோக்கி பயணிக்கிறது எனக்கூற முடியாது. தமிழகத்தின் பெரும்பாலான உள்கட்டமைப்பு வசதிகள் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் செய்யப்பட்டவை என்பதை யாரும் மறுக்க முடியாது.
உணர்வுப்பூர்வமான விஷயமான இலங்கை பிரச்சினையில் தி.மு.க. எப்போதும் உறுதியான நிலைபாட்டை கொண்டுள்ளது. அ.தி.மு.க.வை போல சந்தர்ப்பவாத அரசியல் செய்யாது.
இலங்கை சுதந்திரத்திற்கு வன்முறை தீர்வாகாது என தி.மு.க. பலமுறை வலியுறுத்தியுள்ளது. இப்பிரச்சினை தீர தி.மு.க. பல போராட்டங்களை நடத்தியுள்ளது.
மீனவர் பிரச்சினை, ஈழப்பிரசனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பலமுறை நான் பேசியுள்ளேன். தனி நபர் மசோதாக்களை கொண்டு வந்துள்ளேன்.
நட்பா? உறவா? என்ற இறுதிக்கட்ட போராட்டத்தின் போது தான் அமெரிக்க தீர்மானத்தை நீர்த்துப்போக செய்ய இந்தியா தான் வலிமையாக முயன்றுள்ளது என்பதை அறிந்த போது அதிர்ச்சியுடன் நாம் ஆதரவை விலக்கிக்கொண்டோம்.
கேரளாவை சேர்ந்த இரு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து இத்தாலியுடன் ராஜ்ய உறவுகளை துண்டிக்க பிரதமர் தயாரானார். ஆனால் தமிழக மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதற்கு அவரிடம் பதிலில்லை.
இலங்கை எப்போதும் இந்தியாவை நட்பு நாடாக கருதியதில்லை. அதன் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்தியாவிற்கு எதிராகவே இருந்துள்ளது. ஆனால் இந்தியா இதற்கு உதவுகிறது.
நட்பு நாடாக இலங்கையை கருதக்கூடாது என தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உண்மையான நோக்கமுடையதாக இருப்பின் அதனை தி.மு.க. எப்போதும் ஆதரிக்கும்.
ஆட்சிக்காகவோ, சுய லாபத்திற்காகவோ தி.மு.க, கொள்கையில் சமரசம் செய்து கொள்வதில்லை.
தனி மாநிலத்தாலோ, தனி மனிதனாலோ தீர்க்கக்கூடிய பிரச்சினையல்ல ஈழம். மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இது தான் இன்றைய தேவை.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன:  வைகோ பேட்டி
திண்டுக்கல் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,
இலங்கை தமிழர்களுக்கு அரசியல் நீதி கேட்டு மாணவர்கள் நடத்திய போராட்டம் தனிசிறப்பு வாய்ந்தது. உலக நாடுகளின் பிடியிலிருந்து இலங்கை இனியும் தப்பிக்க முடியாது. இதன்மூலம் சுதந்திர தனிஈழம் விரைவில் நனவாகும் வாய்ப்புள்ளது.
பொதுவாக்கெடுப்பு நடத்தி சுதந்திர ஈழம் அமைவதற்கு சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மார்ச் மாதம் 24-ம் தேதி கோரிக்கை விடுத்தேன். அந்த தீர்மானம் 27-ந்தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேபோல நாடாளுமன்றத்திலும் இத்தீர்மானம் நிறைவேறும் நாள் விரைவில் வரும். ஆனால் தற்போதைய அரசு அதை செய்யாது. இந்த அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. விரைவில் புதிய அரசு அமையும். அப்போது இந்த தீர்மானம் நிறைவேறியே தீரும். என்றார் வைகோ.

Geen opmerkingen:

Een reactie posten