[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 08:11.55 AM GMT ]
திண்டுக்கல் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் குறிப்பிடுகையில்,
191 நாடுகள் உருவான பிறகு தமிழீழம் சாத்தியம் இல்லை என்று சொல்பவர்கள் இன்னும் சிறிது காலத்திற்குள் ஐ.நாவின் முற்றத்தில் தமிழீழ கொடி பறக்கும் என பழ. நெடுமாறன் தெரிவித்தார்.
இலங்கை தமிழர்களுக்கு அரசியல் நீதி கேட்டு மாணவர்கள் நடத்திய போராட்டம் தனிசிறப்பு வாய்ந்தது.
பொதுவாக்கெடுப்பு நடத்தி சுதந்திர ஈழம் அமைவதற்கு சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மார்ச் மாதம் 24-ம் திகதி கோரிக்கை விடுத்தேன். அந்த தீர்மானம் 27-ந் திகதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேபோல பாராளுமன்றத்திலும் இத்தீர்மானம் நிறைவேறும் நாள் விரைவில் வரும். ஆனால் தற்போதைய அரசு அதை செய்யாது. இந்த அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன.
விரைவில் புதிய அரசு அமையும். அப்போது இந்த தீர்மானம் நிறைவேறியே தீரும் என வைகோ தெரிவித்துள்ளார்.
இன்னும் சிறிது காலத்திற்குள் ஐ.நாவின் முற்றத்தில் தமிழீழ கொடி பறக்கும்!- பழ. நெடுமாறன்!
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 08:53.42 AM GMT ]
சென்னையில் நடைபெற்ற சுதந்திர தமிழீழம் பொதுவாக்கெடுப்பு என்ற தலைப்பில் வைகோஅவர்களின் புத்தகம் உரைஒளிப்பட குறுந்தட்டு வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தும் போது பழ.நொடுமாறன் அவர்கள் இதனை தெரிவித்துள்ளார்.
ஐநா சபை அமைக்கப்பட்ட போது 1945ம் ஆண்டு ஐ.நா பேரவையினை உருவாக்கும் முயற்சியில் 49 நாடுகள் தான் அதில் பங்கெடுத்தன.
ஆனால் இன்று 191 நாடுகளுக்கு மேல் ஜ.நா சபையில் அங்கம் வகிக்கின்றன.
இவை எல்லாம் ஆகாயத்தில் இருந்து விழுந்த நாடுகள் இல்லை. இருந்த நாடுகள் இரண்டாக பிரிந்து பலவகையாக பிரிந்து இத்தனை நாடுகள் உருவாகி ஐ.நா சபையில் அங்கம் வகிக்கின்றன.
இத்தனை நாடுகளின் கொடிகள் ஐ.நா முற்றத்தில் பறப்பதை பாக்கலாம்.
191 நாடுகள் உருவான பிறகு தமிழீழம் சாத்தியம் இல்லை என்று சொல்பவர்கள் இன்னும் சிறிது காலத்திற்குள் ஐ.நாவின் முற்றத்தில் தமிழீழ கொடி பறக்கும்.
தலைவர் அவர்களை பயங்கரவாதி என்றெல்லாம் சித்தரித்தவர்கள் அதே தலைவர் அவர்களை ஐ.நாவிற்கு அழைத்து அங்கு பேச்சு நடத்துவார்கள்.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஒப்பற்ற தலைவரும் இவ்வாறு தான் சொன்னார். இவ்வாறு அவர் பேசினார்.http://www.tamilwin.net/show-RUmryESbNalx5.html
Geen opmerkingen:
Een reactie posten