[ திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013, 01:51.42 AM GMT ]
அத்துடன் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை எந்த கண்டனத்தையும் வெளியிடாமை குறித்தும் வருத்தம் வெளியிட்டுள்ளது.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீண்ட காலமாக விசாரணை செய்யப்படாத குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
இலங்கை இறைவரி திணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பிலான எட்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கு இன்டர் போலின் உதவி கோரப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் மூன்றாம் திகதி உதயன் பத்திரிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் இன்னர் சிட்டிபிரஸ் ஐக்கிய நாடுகளின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பி இருந்தது.
எனினும் இதற்கு தம்மிடம் பதில்கள் எவையும் இல்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் உதயன் பத்திரிகை அலுவலகம் தீவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மௌனமாக இருப்பது குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பான விசாரணை ஆரம்பம்
[ திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013, 01:19.37 AM GMT ]
பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோனின் பணிப்புரைக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகள் அடங்கிய ஆவணங்கள் ஏற்கனவே விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு எதிரான 100க்கும் மேற்பட்ட ஊழல் மோசடி முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்ய இன்டர் போலின் உதவி கோரப்படவுள்ளது
[ திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013, 01:56.34 AM GMT ]
2002 - 2004ம் ஆண்டு காலப்பகுதியில் இறை வரி திணைக்களத்தில் சுமார் 400 கோடி ரூபாய் நிதி மோசடி இடம்பெற்றது.
இது தொடர்பில் 14 பேர் சந்தேக நபர்களாக அடையாளப்படுத்தப்பட்டனர் அவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு தொடரப்பட்டது
மூன்று பேர் தங்களின் குற்றங்களை ஒப்பு கொண்ட தண்டனை அனுபவித்து வரும் நிலையில் ஏனைய மூன்று பேர் தொடர்பில் தொடர்ந்து வழக்கு இடம்பெறுகிறது. இந்த வழக்கு இந்த மாதம் 30ம் திகதி மீண்டும் முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை இந்த நிதி மோசடி தொடர்பில் சந்தேக நபர்களாகஅடையாளம் காணப்பட்ட மேலும் எட்டு பேர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்காக இலங்கை குற்றத்தடுப்பு பிரிவினர் இன்டர் போலின் உதவியை நாடியுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten