[ திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013, 12:42.37 AM GMT ]
எனினும் ரோந்து சென்ற படையினரை தாக்கியதாக பின்னர் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ள 29 வயதுடைய ஜெ.காண்டீபன் எனும் குறித்த பொதுமகன் தற்போது படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
கடந்த சனிக்கிழமை இரவு குறித்த பொதுமகனது வீட்டிற்குள்ளே அடாத்தாக புகுந்த கடற்படை சிப்பாய் ஒருவர் வீட்டில் தனித்திருந்த பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
அவ்வேளை தொழில் முடிந்து வீடு திரும்பியிருந்த ஜெ.காண்டீபன் எனப்படும் குறித்த குடும்ப தலைவர் அச்சிப்பாயை அடித்து விரட்டியுள்ளார்.
தப்பியோடிய குறித்த சிப்பாய் பின்னர் தனது சகபாடிகளுடன் சென்று காண்டீபனை முகாமிற்கு கடத்தி சென்று தாக்குதல் நடத்தியுள்ளார்.
பின்னர் ரோந்து சென்ற கடற்படையினரை தாக்கியதாக கூறி அவரை மண்டைதீவு பொலிஸாரிடம் கையளித்துமுள்ளனர்.
இந்நிலையில் காயங்களுக்கு சிகிச்சை பெறவென யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காண்டீபன் பத்திரிகையாளர்களிடம் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
தீவகப் பகுதிகளிலும் அதே போன்று குடாக்கடலை அண்டிய பகுதிகளிலும் இரவு வேளைகளில் தொழிலுக்கு ஆண்கள் கடலுக்கு சென்றுவிடும் நிலையில் தனித்திருக்கும் பெண்களை இலக்கு வைத்து இவ்வாறான பாலியல் துஸ்பிரயோகங்கள் கடற்படையினால் அரங்கேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
சரத் பொன்சேகாவிற்கு பொருளியல் குறித்த அறிவு கிடையாது என அமெரிக்கா கருதியது!– விக்கிலீக்ஸ்
[ திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013, 01:10.21 AM GMT ]
சரத் பொன்சேகாவுக்கு பொருளியல் குறித்த அறிவு இல்லை என்று, அமெரிக்கா கருதியதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
2010ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது சரத் பொன்சேகா ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டிருந்தார்
இன மத பேதங்களை தடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டுமென இலங்கையின் தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதன் போது கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கும், பிரதான இராஜாங்க செயலகத்துக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்தை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சரத் பொன்சேகா ஒரு இராணுவ அதிகாரி.
அவருக்கு பொருளாதாரம் குறித்து அறிவு போதுமான மட்டத்தில் இல்லை.
எனினும் அவர் மீது அதிக ஊழல் குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன என்று அமெரிக்க தூதகரம் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்துள்ளது.
2ம் இணைப்பு
அரசியல் அமைப்பு உடனடியாக திருத்தியமைக்கப்பட வேண்டும்!- சரத் பொன்சேகா
இலங்கையில் அரசில் அமைப்பு உடனடியாக திருத்தியமைக்கப்பட வேண்டுமெனவும், மாதுலுவே சோபித தேரரினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தங்களை அமுல் செய்ய வேண்டும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட முக்கியமான சில பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல், விருப்பு வாக்கு முறைமையை இல்லாதொழித்தல் ஆகிய பரிந்துரைகளுக்கு முழு அளவில் ஆதரவளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரனை இராணுவத்தினர் கைது செய்யவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், பிரபாகரனின் மனைவி, மகள் மற்றும் இளைய மகன் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இன மத பேதங்களை தடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்!- வாசுதேவ நாணயக்கார
[ திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013, 01:16.37 AM GMT ]
எந்த மதத்தை என பார்க்காது வேறு மதங்களை இழிவுபடுத்தக் கூடிய வகையிலான சொற் பிரயோகங்களை தடுக்கும் வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தவிர்க்கவும், சுதந்திரமாக உரிமைகளை அனுபவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு மட்டுமன்றின் சகல மக்களினதும் பிரச்சினைக்கு தீர்வு காணக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
குறிப்பிட்ட இன சமூகமொன்றை எதிர்க்கும், மதமொன்றை இழிவுபடுத்தும் நடவடிக்கைகளை தடுப்பதற்காகவே சட்டங்கள் இயற்றப்பட உள்ளன.
எந்தவொரு மதத்தையோ அல்லது இன சமூகத்தையோ கண்டிக்க சட்டங்கள் இயற்றப்படவில்லை.
சகல இன மத மக்களிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
2ம் இணைப்பு
வாசுதேவவின் பிரேரணைக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள கருத்து வெளியிடல் குறித்த பிரேரணைக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
கருத்து வெளியிடும் போது, இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் மற்றும் மற்றைய இனங்களை புண்படுத்தும் வகையிலான வார்த்தைகளை தடை செய்வது தொடர்பிலான பிரேரணை ஒன்றை தயாரித்து வருவதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தார்
இந்த பிரேரணைக்கு அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகியோர் ஆதரவை வெளியிட்டுள்ளனர்
அத்துடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இந்த பிரேரணைக்கு ஆதரவை தெரிவித்துள்ளது.
தற்போது சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற கடுமையான வன்முறைகள் மற்றும் இனபுறக்கணிப்பு செயற்பாடுகளுக்குமத்தியில் இவ்வாறான பிரேரணை ஒன்று அவசியப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten