தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 13 april 2013

இலங்கையர்களுக்கான புதிய குடிவரவு சட்டங்கள் குறித்து புதுவருட நிகழ்வுகளில் அவுஸ்திரேலியா அறிவிப்பு !


இலங்கையர்களுக்கான புதிய குடிவரவு சட்டங்கள் குறித்து அவுஸ்திரேலியா அறிவிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வார இறுதியில் நடைபெறவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வுகளின் போது மெல்பேர்ன் மற்றும் சிட்னி நகரங்களில் இந்த புதிய நடைமுறைகள் குறித்த அறிவிப்பு விடுக்கப்பட உள்ளது.
மெல்பேர்ன் மற்றும் பிறிஸ்பேர்ன் நகரங்களில் நடைபெறவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு இப் புதியநடைமுறைகள் குறித்து அறிவிக்கப்  போவதாக அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் குடியுரிமை திணைக்களம் அறிவித்துள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளின் ஆபத்து குறித்தும், சரியான வழிகளில் அவுஸ்திரேலியாவிற்குள் குடியேறுவது குறித்தும் இந்த நிகழ்வுகளின் போது இலங்கை சமூகத்திற்கு விளக்கமளிக்கப்பட உள்ளது.
அத்துடன், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழையும் இலங்கையர்களுக்கு புகலிடம் வழங்குவது குறித்த நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு அட்டைகள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
இலவசமாக வழங்கப்படவுள்ள 5 டொலர் பெறுமதியான இந்த சர்வதேச தொலைபேசி அழைப்பு அட்டையைப் பயன்படுத்தி தாய்நாட்டில் உள்ள தமது உறவுகளுடன் தொடர்புகொண்டு புதிய நடைமுறைகளை அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியா பல்கலாச்சாரங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய நாடு எனவும், நியாயமான வழிகளில் நாட்டுக்குள் பிரவேசிக்கும் அனைவரையும் வரவேற்பதாகவும் அந்நாட்டு குடிவரவுப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten