[ சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013, 03:09.47 AM GMT ]
மலரும் தமிழ் சிங்கள புதுவருடத்திலாவது இலங்கை அரச தரப்பினர் தமது காடைத்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் தமிழருக்குத் தீர்வை வழங்க முன்வரவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அதேவேளை, தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவும், இறைவன் ஒருபோதும் தமிழரைக் கைவிடமாட்டார் எனவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் சம்பந்தன் எம்.பி. தெரிவித்தவை வருமாறு:
இலங்கை அரசிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பில் நியாயமான கோரிக்கைகளையே நாம் முன்வைத்துள்ளோம். இந்நாட்டில் நாம் சுதந்திரமாக தமிழ்ப் பிரஜைகளாக வாழ விரும்புகின்றோம். வன்முறைகளை நாம் ஒருபோதும் விரும்பியதில்லை.
ஆனால், எமது கோரிக்கைகளை விருப்பங்களை முறியடிக்க பல்வேறு சதி வேலைகளில் இந்த அரசு ஈடுபட்டு வருகின்றது.
காடையர் கும்பல்களைக் களமிறக்கி தமிழ் மக்கள் மீதும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும், தமிழருக்காகக் குரல் கொடுக்கும் ஊடகங்கள் மீதும் காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
தமிழர்களை இந்த அரசு வலிந்து வன்முறைக்கு இழுக்கின்றது. ஆனால், நாம் பொறுமையுடன் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நிற்கின்றோம்.
கடந்த வருடங்களில் இலங்கை அரசு தமிழர்களின் கோரிக்கைகளை செவிசாய்க்காமல் காடைத்தனத்தில் ஈடுபட்டதனால்தான் சர்வதேச வலைக்குள் சிக்கித் தவிக்கின்றது.
எனவே, மலரும் தமிழ் சிங்கள புது வருடத்திலாவது இலங்கை அரச தரப்பினர் தமது காடைத்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் தமிழருக்குத் தீர்வை வழங்க முன்வர வேண்டும்.
அதேவேளை, தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க அரசின் அடிவருடிகளினால் மேற்கொள்ளப்பட்டும் சதி வேலைகளுக்குள் எமது மக்கள் சிக்கக்கூடாது.
தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும்.
இறைவன் எமக்கு உதவி செய்வார். இறைவன் ஒருபோதும் தமிழரைக் கைவிட மாட்டார் என்று தெரிவித்தார் சம்பந்தன் எம்.பி.
மரண தண்டனையை ரத்து செய்து, மகனை என்னிடம் ஒப்படையுங்கள்!- ஜெயலலிதாவுக்கு பேரறிவாளனின் தாய் வேண்டுகோள்
[ சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013, 04:11.20 AM GMT ]
தமிழகத்தில் மரண தண்டனையை ரத்து செய்து, தனது மகனை தன்னிடம் ஒப்படைக்குமாறு ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் தாயார் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையிலே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். நேற்றிரவு மீண்டும் காரைக்கால் மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
உச்சநீதிமன்றத்தில் புல்லர் வழக்கில் அவருக்கு மரண தண்டனை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது தனக்கு பயத்தையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளில் மரண தண்டனைக்கு தடை விதித்துள்ள நிலையில், அகிம்சாவாதியான காந்தியடிகள் பிறந்த இந்தியாவில் தடை விதிக்காதது வேதனையளிக்கிறது.
தமிழகத்திலேயாவது மரண தண்டனையை ஒழிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டு, இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக ஆக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சட்டப்பேரவையை கூட்டி மரண தண்டனையை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரிடம் மனு அளித்து தனது மகனை தன்னிடம் ஒப்படைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காரைக்கால் மீனவர்கள் மீது சிங்கள கடற்படை நேற்றிரவும் கோடரியால் வெட்டி தாக்குதல்!- 7பேர் காயம்
[ சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013, 04:47.36 AM GMT ]
இது குறித்து தெரியவருவதாவது:
புதுவை மாநிலம் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை பகுதியில் மீன்பிடிப்பது வழக்கம். இவ்வாறு மீன்பிடிக்கும் மீனவர்களை சிங்களபடையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்றிரவு மீண்டும் காரைக்கால் மீனவர்கள் மீது சிங்கள படையினர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
காரைக்கால் கிழிஞ்சல்மேட்டை சேர்ந்த ராஜ் (வயது 30) என்பவருக்கு சொந்தமான விசைபடகில் ரமேஷ் (32), செல்வம் (29), வேதநாயகம் (30), வீரபாகு (45), சத்தியநாதன் (25) காரைக்கால் மேட்டை சேர்ந்த வீரப்பன்(39) ஆகிய 7 பேர் மீன்பிடிக்க சென்றனர்.
கோடியகரையில் இருந்து 28 கடல் மைல் தூரத்தில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது மீன்பிடி படகில் சாதாரண உடையணிந்த சிங்கள கடற்படையினர் வந்தனர். அவர்கள் பெட்ரோல் குண்டுகளை மீன்பிடி படகை நோக்கி வீசினார்கள். எனவே மீனவர்கள் படகை நிறுத்தினார்கள்.
உடனே சிங்கள கடற்படையினர் படகு அருகே வந்து உள்ளே ஏறினார்கள். அங்கிருந்த 7 மீனவர்களையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
கோடாரி, அரிவாள், இரும்பு குழாய், பனிக்கட்டிகளை அள்ளிபோட பயன்படுத்தும் சவுல் ஆகியவற்றால் தாக்கினார்கள்.
இதில் வேதநாயகம், வீரபாகு ஆகியோருக்கு கோடாரி வெட்டு விழுந்தது. சத்தியநாதனுக்கு கண் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. மற்றவர்களும் பலத்த காயம் அடைந்தனர்.
பின்னர் மீனவர்கள் வைத்திருந்த மீன்பிடி வலைகள், வாக்கி டோக்கி, ஜி.பி.ஸ். கருவி ஆகியவற்றை கடலில் வீசும்படி எச்சரித்தனர். இதனால் அவற்றை மீனவர்கள் கடலில் வீசினார்கள்.
அதைதொடர்ந்து அவர்களை மிரட்டி விட்டு சிங்கள கடற்படையினர் அங்கிருந்து சென்றனர். படுகாயம் அடைந்த நிலையில் படகை ஓட்டிகொண்டு மீனவர்கள் காரைக்கால் வந்தனர்.
இன்று காலை 6 மணிக்கு படகு காரைக்கால் வந்து சேர்ந்தது. 7 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Geen opmerkingen:
Een reactie posten