1983ம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற கலவரத்தை மீண்டும் உருவாக்கும் செயற்பாடுகளே தற்போது இலங்கையில் இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பி;ன் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையின் நிலைமை படு மோசகமாக உள்ளது.
எந்த தருணத்திலும் இலங்கையில் மீண்டும் இனக்கலவரம் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
மீண்டும் 1983ம் ஆண்டு கலவரத்தை போல புதிய ஒரு கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தற்போது இடம்பெறுகின்றன
இந்த விடயத்தில் தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten