தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 april 2013

பெசன் பக் தாக்குதலுடன் தொடர்புடைய மூன்று பௌத்த பிக்குகள் கைது!


பெப்பிலியான பெசன் பக் வியாபார நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் மூன்று பௌத்த பிக்குகள் சரணடைந்திருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மூவரும் பாணந்துறை பகுதியில் உள்ள பொது பல சேனா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் சம்பவம் வியாபார நிலையத்தில் பொறுத்தப்பட்டிருந்த சீ.சீ.டிவி கெமராக்கலில் பதிவாகி இருந்தது.
இதில் குறித்த மூன்று பௌத்த பிக்குகளும் அடையாளம் காணப்பட்டனர்.
அவர்களை நேற்று நண்பகலுக்கு முன்னதாக சரணடையுமாறு காவற்துறையினர் அறிவித்திருந்த போதும் நேற்று மாலையே அவர்கள் சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 18 பேர் தற்போது பொலிஸ் தடுப்பில் உள்ளனர்.
அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten