[ செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2013, 02:43.46 AM GMT ]
இலங்கைக் கடற்படையினர் அத்துமீறலால் இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரைக்கு திரும்பினர்.
16 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குப் பிறகு இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்றிரவு 10 மணிக்கு கடலுக்குச் சென்றனர். 500 விசைப்படகுளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர்.
அமைச்சர் விமல் வீரவன்ச இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். யாழ். குருநகர் பகுதியில் மகிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள தொடர்மாடி வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக அவர் அங்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது இராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், அவர்களது மீன் பிடி சாதனங்களை சேதப்படுத்தி மீன்பிடிக்க விடாமல் தடுத்துள்ளனர்.
இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறலால் ஒவ்வொரு படகுக்கும் ரூ.60,000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 13ம்திகதி இராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தடை விதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்தியதாகவும், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகவும் கூறி 53 மீனவர்களை சிறைபிடித்து சென்றனர்.
இதனையடுத்து, இந்திய மத்திய-மாநில அரசுகள் எடுத்த முயற்சியின் விளைவாக இலங்கை அரசு 34 மீனவர்களை மட்டும் இலங்கை அரசாங்கம் விடுதலை செய்தது.
ஏனைய 19 மீனவர்களை தலைமன்னார் நீதிமன்றில் இலங்கை கடற்படை ஆஜர்படுத்தி அனுராதபுரம் சிறையில் அடைத்தது.
இதை கண்டித்தும், சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 19 மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் 15 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது
ஜெனிவாவில் இருப்பவர்கள் தமிழ் பிள்ளைகளுக்கு சைனற் குப்பிகளை அணிவிக்கவே விரும்புகின்றனர்!- யாழில் விமல் வீரவன்ஸ
[ செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2013, 02:47.09 AM GMT ]
1986ம் ஆண்டு இந்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 5 மாடிகளை கொண்ட வீட்டுத்திட்டம், யுத்தத்தில் முற்றாக சேதமடைந்தது.
இந்த நிலையில் 77 மில்லியன் ரூபாய் செலவில் மீண்டும் அங்கு புதிய தொடர்மாடி வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.
ஒன்பது மாதக்காலப்பகுதியினுள் இந்த வீட்டுத்திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெனிவாவில் இருப்பவர்கள் தமிழ் பிள்ளைகளில் கழுத்துக்களில் மீண்டும் சைனற் குப்பிகளை அணிவிக்கவே விரும்புகின்றனர்!- விமல் வீரவன்ஸ
ஜெனிவாவில் இருப்பவர்கள் தமிழ் பிள்ளைகளில் கழுத்துக்களில் மீண்டும் சைனற் குப்பிகளை அணிவிக்கவே விரும்புகின்றனர் என வீடமைப்பு மற்றும் பொறியல்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகர் தொடர்மாடி வீட்டுத்திட்டத்தின் புனர்நிர்மானப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உங்கள் குழந்தைகளின் கழுத்துக்களில் தங்க மாலை அணிவதையா அல்லது சைனற் குப்பிகளை அணிவதையா விரும்புகின்றீர்கள் என தமிழ் மக்களிடம் நான் கேட்க விரும்புகின்றேன்.
தென்னிந்தியாவில் இருப்பவர்கள் மீண்டும் யுத்ததை விரும்புகிறனர். அங்கு ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலமைக்கு காரணம் தனி நாடு கோருகின்றனர்.
இவர்களின் பகல் கனவு ஏதுவும் நிறைவேறாது இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில் கூட இல்லாத கொந்தளிப்பு தென்னிந்தியாவில் இப்போது ஏற்படக் காரணம் பொருமளவான புலம் பெயந்த தமிழ்ர்களின் பணத்திலேயே இந்த ஆர்பாட்டங்கள் நடைபெறுகின்றது.
உண்மையில் தமிழ் மக்களில் அக்கறையற்று இருப்பவர்கள் தமிழ் நாட்டில் இருக்கின்றார்கள். அவர்கள் பிரிவினை வாதத்தை விரும்புகின்றனர். இதையே இங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்து கொண்டு இருக்கின்றது.
சம்பந்தன் நாடாளுமன்றத்திற்கு வரும் நாட்களை விட வெளிநாடுகளிலேயே அதிக காலத்தை கழிக்கின்றார். அவருக்கு திருகோணமாலையில் எங்கு தமிழ் குடியிருப்புக்கள் இருக்கிறது என்பது தெரிகிறது.
கடந்த கால யுத்தில் ஏற்பட்ட சூழலை மாற்றுவதற்கே நாம் விரும்புகின்றோம். யுத்தம் தந்த வடுக்கள் தற்போது தமிழ் மக்களின் இதயங்களிலிருந்து அகற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அதேபோல் இடிந்த சிதைந்த கட்டிடங்களை நாங்கள் புனரமைத்து வருகின்றோம்.
யுத்தின் போது இழக்கப்பட்ட இரு தரப்பு உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் எங்களினால் பெற்றுக் கொடுக்க முடியும். யுத்ததின் போது மாண்டு போன குடியிருப்புக்களுக்கு தற்போது உயிர் கொடுத்து வருக்கின்றோம் என்றார்.
யாழ். குருநகர் தொடர்மாடி வீட்டுத்திட்டத்தின் புனர்நிர்மாணப் பணிகளை அமைச்சர் விமல் வீரவன்ஸ ஆரம்பித்து வைத்தார்
யாழ். குருநகர் தொடர்மாடி வீட்டுத்திட்டத்தின் புனர்நிர்மாணப் பணிகள் இன்று செவ்வாய் கிழமை வீடமைப்பு மற்றும் பொறியியல் துறை அமைச்சர் விமல் வீரவன்ஸவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுமார் 100 மில்லியன் ரூபா செலவில் 9 மாதத்தில் இந்த புனரமைப்பு வேலைத்திட்டம் நிறைவடையவுள்ளது.
கடந்த காலத்தில் யுத்ததின் போது யாழ்ப்பாணத்தில் குரநகரில் 5 மாடிகளைக் கொண்ட 160 குடியிருப்புக்களைக் கொண்ட வீட்டுத்திட்டத் தொகுதி வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது.
இவ்வீட்டுத்திட்டத்தில் உள்ள கட்டிடங்கள், அடிப்படை வசதிகள் முற்று முழுதாகப் பாதிப்படைந்துள்ளது. இவற்றைப் புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கையே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளநரின் செயலளர், யாழ்.மாவட்டச் செயலர், யாழ்.மாநகர முதல்வர், வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten