தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 januari 2015

மகிந்த கைவிட்ட முன்னாள் “TNA” முக்கியஸ்தர் வீதியில்…..

மைத்திரியிடம் சென்றவர் மீண்டும் மகிந்தவடம்…

ஜனாதிபதியின் வெற்றிக்கு தான் பாடுபடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சேகு இஸ்ஸதீன் பொன்சேகாவுக்கு தனது ஆதரவை வழங்கியிருந்தார்.
ஊடக பிரதியமைச்சராக இருந்த போது தான் வெற்றிலைக்குத் தான் வாக்களிப்பேன். ஆனால் முஸ்லிம்கள் சிந்தித்து வாக்களியுங்கள் என பகிரங்கமாக எதிர்க்கட்சிக்கு தனது ஆதரவை வழங்கியிருந்தமையை நாம் அறிவோம்.
இதன் பிற்பாடு அரசியலிலிருந்து விலகி சிறிது காலம் செயற்பட்டு வந்த சேகு இஸ்ஸதீன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து செயற்பட முன்வந்தார்.
எனினும் முஸ்லிம் காங்கிரஸில் ஏற்பட்ட அதிகாரப் போட்டியினால் அதிலிருந்து விலகி ஒதுங்கியிருந்தார்.
இந்நேரத்தில் முஸ்லிம் காங்கிரஸூக்கு எதிரான கருத்துக்களையும் பலமாக கூறிவந்தார். முட்டுக் கொடுக்க வந்த கம்பு முளைத்துவிடும் என்ற அச்சமோ என முகாவின் தலைமைத்துவம் தொடர்பில் ;விமர்சனங்களை அள்ளி வீசினார் சேகு.
இவரின் அறிக்கைளும் நகர்வுகளும் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயறப்டுவது போல் கட்டியம் கூறியது. ஐதேகவின் தேசியப் பட்டியல் எம்பிப் பதவியையும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெறவுள்ளார் என பலமான செய்திகளும் கிழக்கில் அடிபட்ட நிலையில் சேகு இஸ்ஸதீன் தற்போது தனது ஆதரவை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கியுள்ளார்.
ஓட்டுமொத்த முஸ்லிம்களும் பொதுக் கருத்துக்களின் பின்னால் திரண்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் சேகு இஸ்ஸதீன் மகிந்தவுடன் இணைந்துள்ளார்.
இவர் கடந்த இரண்ட நாட்களுக்கு முன்னர் முகாவின் வெளியேற்றம் தொடர்பில் ஒரு விடயத்தை முன்வைத்திருந்தார் அதாவது மகிந்த முஸ்லிம்களுக்கு மருந்து அதனை பயன்படுத்த தவறிவிட்டனர். என்பதாகும்.
இந்நிலையில் சேகு இஸ்ஸதீன் டிபி ஜாயா கூறிய  எல்லா முட்டைகளையும் ஒரு கூடைக்குள் வைக்கக் கூடாது என்னும் மொன்மொழியை நடைமுறைப்படுத்த துணிந்துள்ளார் .
இங்கு குறிப்பிடக் கூடிய விடயம் என்னவெனில் பாம்பும் கீரியுமாக இருந்த  அமைச்சர் அதாவுல்லாவும்  சேகுவும் ஒரு அணியில், ஒரு கருத்தில்  இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/92418.html

மகிந்த கைவிட்ட முன்னாள் “TNA” முக்கியஸ்தர் வீதியில்…..

மைத்திரி பக்கம் மாறிய அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் நட்பு கொண்டிருந்தமை மற்றும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடாமை ஆகியவற்றின் அடிப்படையில் மஹிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸவினது அறிவுறுத்தலையடுத்தே கனகரத்தினம் கழற்றிவிடப்பட்டுள்ளார்.
இதையடுத்து கனரத்தினம் தனது ஆதரவை மைத்திரிக்கு வழங்குவது பற்றி ஆலோசித்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்களில் முல்லைதீவு மாவட்டத்தினை சேர்ந்த எவரும் மைத்திரிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதில்லையென அறிவித்துள்ள நிலையில் மைத்திரி தரப்பும் கனகரத்தினத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
http://www.jvpnews.com/srilanka/92412.html

Geen opmerkingen:

Een reactie posten