தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 januari 2015

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை அவுஸ்திரேலியா உன்னிப்பாக அவதானிக்கிறது!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை அவுஸ்திரேலிய அதிகாரிகள் மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். இத்தகவலை அந்நாட்டு இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது
புதிய அரசாங்கம் அமையுமானால் அது இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான படகு பயணிகளை தடுக்கும் உடன்படிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற சந்தேகம் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
எனினும் மனித உரிமை மீறல் விடயங்களில் அபோட்டின் அரசாங்கம் இலங்கையின் மஹிந்த அரசாங்கத்துக்கு ஆதரவு தருகின்றமையை அவுஸ்திரேலிய மனித உரிமை அமைப்புக்கள் கண்டித்துள்ளன.
இந்தநிலையில் மஹிந்த ராஜபக்சவுக்கும் மைத்திரிக்கும் இடையிலான போட்டி எதிர்பாராத வகையில் கடும்நிலையை காட்டிநிற்கிறது.
முஸ்லிம் கட்சிகள் பெரும்பாலும் எதிரணிக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
எனினும் போர் வெற்றியை கொண்டு சிங்கள வாக்குகளை தாம் பெறமுடியும் என்று மஹிந்த நம்பிக்கை கொண்டுள்ளார் என்று குறித்த அவுஸ்திரேலிய இணையத்தளம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா 2009ம் ஆண்டு முதலே இலங்கையுடன் நெருங்கிய உறவை பேணி வருகிறது.
ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணை கோரப்பட்ட போதும் இலங்கைக்கு ஆதரவாகவே அவுஸ்திரேலியா செயற்பட்டது.
இந்தநிலையில் இலங்கையில் தேர்தல் நீதிநேர்மையுடன் நடத்தப்பட்டால், மைத்;திரிபால வெற்றி பெறுவார் என்று தென்னாசிய அரசியல் பிரச்சினை தொடர்பான ஆய்வாளர் சுதா இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே மஹிந்த ராஜபக்ச தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டார் என்றும் கருத்துரைக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmq5.html

Geen opmerkingen:

Een reactie posten