[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 04:24.46 PM GMT ]
இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர்கள் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.
திம்புலாகல, மிஹிந்தல, தலாவ, திரிப்பனே, மினுவங்கொட மற்றும் மீரிகம ஆகிய பிரதேச சபைகளின் உறுப்பினர்களே இவ்வாறு மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்.
இக்குழுவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் நகரசபை உறுப்பினர் ஒருவரும் அடங்குகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmq2.html
படையினரை பயன்படுத்தி வாக்களிப்பை தடுக்க முயற்சி: மைத்திரிபால
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 04:46.39 PM GMT ]
எதிர்வரும் ஜனவரி 8ம் திகதியன்று இராணுவத்தை பயன்படுத்தி நாட்டின் சில இடங்களில் வாக்களிப்பதை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிரணி இன்று எச்சரித்துள்ளது.
ஏற்கனவே இந்த நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் பொலநறுவை மற்றும் ஏனைய இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.
அனுப்பப்பட்ட படையினர் சில மாவட்டங்களில் நிலை கொள்ளச் செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை சாதாரண உடையில் படையினரை ஈடுபடுத்தி வடக்கில் வாக்களிப்பை தடுக்கும் முயற்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மைத்திரிபால தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmq3.html
மஹிந்தவின் பரப்புரைக்கு கருப்பொருள்- சந்திரிக்காவின் “மிஸ்டர் பிரபாகரன்”
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 05:00.22 PM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா யாழ்ப்பாணத்தில் வைத்து விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விளிக்கும் போது “மிஸ்டர் பிரபாகரன்” என்று கூறியமை தற்போது மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரையில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
கண்டியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,முன்னொருபோதும் சந்திரிக்கா, மிஸ்டர் பிரபாகரன் என்ற சொல்லை உச்சரித்ததில்லை.
தம்மைக்கூட அவர் மஹிந்த என்றே கூறுவார் என்றும் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
தாம் ஆட்சிக்கு வந்ததும் பிரிந்து போயிருந்த நாட்டை ஒன்றுபடுத்தியதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார் .
இந்தநிலையில் நாட்டை மீண்டும் காட்டிக்கொடுக்க இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmq4.html
Geen opmerkingen:
Een reactie posten