தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 januari 2015

KP யை மகிந்த கட்டிப் பிடித்த போஸ்டர்: சிங்களவர் மத்தியில் பெரும் சர்சையை ஏற்படுத்தி உள்ளது !

கடந்த 2 தினங்களுக்கு முன்னர், KP யை மகிந்த கட்டிப் பிடிப்பது போன்ற பாரிய போஸ்டர் ஒன்று அச்சடிக்கப்பட்டு பல இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தது. அத்தோடு பரவலாக எல்லா இணையங்களிலும் இந்த புகைப்படம் வெளியாகி இருந்தது. புலிகளின் உண்மையான நண்பன் மகிந்த தான், என்று பரப்புரை மேற்கொள்ளும் வகையில் இந்த புகைப்படம் இருந்தது. இதனால் பாமர சிங்கள மக்கள் மத்தியில் பெரும் சர்சை தோன்றியுள்ளது. உண்மையில் KP யை மகிந்தர் ஒன்றும் கட்டிப்பிடிக்கவில்லை. குறித்த புகைப்படம் போட்டோ ஷாப்பில் உறுமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், வழமையாக மகிந்த தரப்பு தான் இப்படியான தில்லு முல்லு வேலைகளைச் செய்யும். ஆனால் இம் முறை மகிந்த தரப்பில் உள்ள பல புள்ளிகள் எதிர் அணியில் உள்ளார்களே. அவர்களில் சிலர் தாம், மகிந்த பக்கம் இருக்கும்போது எதைச் செய்தார்களோ அதனை இப்ப செய்ய ஆரம்பித்துள்ளார்கள். மகிந்த ராஜபக்ஷ ஜேம்ஸ் பீரிஸ் என்னும் நபரை சந்தித்தவேளை எடுக்கப்பட்ட புகைப்படம் அது. அதில் உள்ள நபர் கிட்டத்தட்ட பார்க KP போல இருப்பார். அதனை பாவித்தே, கே.பி படத்தை இணைத்து போஸ்டராக வெளியிட்டு விட்டார்கள்.
இதனை அரசாங்க தரப்பு மீட்டிங் போட்டு ஊடகவியலாளர்களுக்கு சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஏன் என்றால் இது தேர்தல் காலம் அல்லவா. ஒரு வோட்டு சறுக்கினால் கூட ஆபத்து தான். நாளுக்கு நாள் மகிந்தர் பாடு திண்டாட்டமாகவே இருந்து வருகிறது. 
http://www.athirvu.com/newsdetail/1785.html

Geen opmerkingen:

Een reactie posten