தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 januari 2015

ஆனந்தியை பாவிக்க கூட மகிந்த கூட்டணி தயங்கவில்லை: மகிந்தருக்கான வாக்குகளாக மாற்ற முயற்ச்சி !

சமீபத்தில் வட மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தெரிவித்த கருத்துக்களை கூட மகிந்தரின் கூட்டணி விட்டுவைக்கவில்லை. அதனை பயன்படுத்தி ஒரு 100 வாக்குகளையாவது வென்றுவிடவேண்டும் என்று அவர்கள் பார்கிறார்கள். சமீபத்தில் ஆனந்தி தனது கருத்துக்களை தெரிவித்தார். தாம் இரண்டு பேரையும் ஆதரரிக்கவில்லை என்று அவர் தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். இனப்படுகொலை நடந்தவேளை பிரதி பாதுகாப்பு அமைச்சராக மைத்திரி இருந்தார் என்றும், அவர் இனப்படுகொலை நடப்பதை தடுக்கவில்லை என்றும் ஆனந்தி தெரிவித்தார். இக் கருத்தை உடனே மகிந்தரருக்கு ஆதரவான சிங்கள இணையங்கள் பிரசுரிக்க ஆரம்பித்து விட்டது.
மகிந்தருக்கு ஆதரவாக “சங்கு ஊதும்” சில தமிழ் இணையங்கள், ஆனந்தியின் கருத்தை பாவித்து, தமிழ் மக்கள் மைத்திரியை எதிர்க்கவேண்டும் என்ற கருத்தை கொழும்பிலும் யாழிலும் பரப்பி வருகிறார்கள். தேர்தல் காலங்களில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கும் அரசியல்வாதிகள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்பதற்கு இதுவே நல்லதொரு உதாரணம் ஆகும். ஆனந்தி தெரிவித்துள்ள கருத்துக்கள் மைத்திரிக்கு ஆதரவை தராமல் போகலாம். ஆனால் அதற்காக அவை மகிந்தருக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது அல்லவா ? எனவே இனியாவது சற்று பொறுப்பான வகையில் கருத்துக்களை வெளியிடுவது நல்லது.
http://www.athirvu.com/newsdetail/1786.html

Geen opmerkingen:

Een reactie posten