தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 januari 2015

"போர் குற்றம்" இடம்பெற்றது பிரச்சார மேடைகளில் அவர்களே அதனை ஒத்துக்கொண்டு நிரூபிக்கிறார்கள் !

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் கடுமையாக சூடு பிடித்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக போர்க்குற்றம் இனப்படுகொலையை ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைக்கு தற்போதைய அரசு தள்ளப்பட்டுள்ளது. நான்தான் ஒரு பிசாசு என்பதை மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் ஒப்புக் கொண்டிருந்தார். இதன் மூலம் தனது தமிழ் மக்கள்மீதான ஒடுக்குமுறையை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதேவேளை ராஜபக்சவின் அரசின் இரண்டு அமைச்சர்கள் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றத்தை நேற்று ஒப்புக்கொண்டுள்ளனர்.

யுத்த வெற்றிக்கு உரிமை கோரும் சந்திரிக்கா மற்றும் சரத்பொன்சேகா ஆகியோர் தமிழ் மக்களின் உயிரிழப்புக்களுக்கு பொறுப்புக் கோருவார்களா? எனக்கூறியதன் மூலம் டக்ளஸ் தேவானந்த மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை ஏற்றுக் கொண்டுள்ளார். அத்துடன் கிழக்கில் பேசிய பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா, விடுதலைப் புலிகளை மகிந்த ராஜபக்ச பூண்டோடு 'படுகொலை' செய்தார் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் அழுத்தங்களுக்கு அஞ்சாமல் விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் ஒட்டுமொத்த விடுதலைப் புலிகளையும மகிந்த அழித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்பிற்கு இரண்டு நாட்களாக, மகிந்த பதில் அளிக்கவில்லை. அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்திருப்பது இறுதிப்போரின்போது நடைபெற்ற சில சம்பவங்களுடன் தொடர்புடுகின்றது. அத்துடன் தெற்கில் கூட்டம் ஒன்றில் பேசிய சரத்பொன்சேகா விடுதலைப் புலிகளை நந்திக்கடலில் முற்றாக அழித்து துடைத்தெறிந்துவிட்டதாக கூறினார். இந்த ஆதாரங்களை உரிய வகையில் ஆவணப்படுத்துவதுடன் இவற்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்திற்கு அனுப்புவதன் மூலம் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலையார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு கிடைக்க உதவும் என அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
http://www.athirvu.com/newsdetail/1784.html

Geen opmerkingen:

Een reactie posten