அரசியல் அநாதையாகியுள்ள மஹிந்தவிற்கு புதிய கட்சியை விமல் பரிசளிக்கிறார் !
[ Jan 23, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 25620 ]
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஸவை செயற்பாட்டு அரசியலுக்கு கொண்டுவர தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கடும் முயற்சிகளை எடுத்து வருகிறார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து மஹிந்தவிற்கு ஆதரவான சக்திகளை ஒன்றுதிரட்டி நாட்டின் மீது அன்பு செலுத்தும் பிரிவினராக இனங்காட்டி புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் நோக்கம் விமலிடம் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆர்.ஏ.சிறிசேன என்ற ஜோக்கர் போட்டியிட்ட, பியசிறி விஜேநாயக்க பொதுச் செயலாளராக உள்ள 'தேசப்பிரேமி ஜனதா பெரமுன' என்ற கட்சியின் தலைமை பதவியை வழங்க விமல் தீர்மானித்துள்ளார். அதன்படி எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான இந்த கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட விமல் வீரவன்ச எதிர்பார்த்துள்ளார்.
எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தற்போதைய நோக்கம் தனக்கும் தனது மகன்மார்கள் மீதும் சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்களை ஏதாவது ஒப்பந்தம் செய்தாவது இல்லாது செய்து கொள்வதே அன்றி செயற்பாட்டு அரசியலில் இறங்குவது அல்ல என அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.
http://www.athirvu.com/newsdetail/2049.htmlதமிழ் கைதிகளின் பெயர்களை தாருங்கள் அவர்களை விடுதலை செய்கிறேன்: மைத்திரி !
[ Jan 23, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 35285 ]
நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரகாரம் சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளினதும் விடுதலை தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தக் கைதிகளின் முழுவிபரங்களையும் சமர்ப்பிக்குமாறு கேட்டிருக்கிறார் என அதிர்வு இணையம் அறிகிறது. இவர்கள் தேவையற்ற காரணத்திற்காக அல்லது அரசியல் ரீதியில் கைதுசெய்யப்பட்டு இருந்தால் அவர்களை விடுவிப்பது தொடர்பாக உடனே ஆராய்கிறேன் என்று அவர் கூறியுள்ளார் என்று மேலும் அறியப்படுகிறது.
இதன்பிரகாரம் தமிழ்க் கைதிகள் அனைவரினதும் பெயர் மற்றும் வழக்கு விபரங்களையும் நிறைவேற்று சபைக்கு சமர்பித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்திட்டத்தை ஆரம்பிக்கும்படி நிறைவேற்று சபையின் செயலாளர் திலக் ரணவிராஜாவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்திருக்கிறார். எனவே புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களே, உங்கள் உறவினர்கள் யாராவது இதுபோல மகிந்தரது ஆட்சிக் காலத்தில் கைதாகி விடுதலையாகாமல் இருந்தால், அவர்களின் பெயர்களை நீங்கள் மனோகனேசனிடம் கையளிப்பது நல்லது. இதனை உடனே நீங்கள் செய்யவேண்டும். அப்படி என்றால் வீணாக வக்கீலுக்கு காசு கொடுக்காமல் மிகவிரைவாக , கைதிகள் விடுதலையாவார்கள்.
http://www.athirvu.com/newsdetail/2051.htmlசீஷெல் நாடு அதிரடி அறிவிப்பு: ராஜபக்ஷவின் கருப்பு பணம் தொடர்பாக உதவ தயார் !
[ Jan 23, 2015 04:44:03 PM | வாசித்தோர் : 29480 ]
இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் சொத்துக்களை கண்டுபிடிப்பதற்கு இலங்கைக்கு உதவ தயார் என சீசல்ஸ் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே அது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்களது நாட்டின் நிதிச்சேவை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதராமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையர்களால் தனது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையுடன் சிறந்த உறவுகளை பேணுவதே தனது நாட்டின் நோக்கம் என்றும குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் -
எந்தவொரு விடயத்தையும் பற்றியும் மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது என சீசெல்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. மஹிந்த ராபஜக்ஸ குடும்பத்தினர் பாரியளவில் சொத்துக்களை சீசெல்ஸில் மறைத்து வைத்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சீசெல்ஸ் ஊடாக சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான எந்தவொரு விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என சீசெல்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜேன் போல் அடெம்ஸ் தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/2055.htmlதமிழர்கள் ISIS தீவிரவாதிகளோடு இணைந்தனராம்: "ரா" வின் தமிழர் எதிர்ப்பு சிந்தனை !
[ Jan 24, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 28655 ]
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்திய குடியரசு தினக் கொண்டாட்டங்களை காண டெல்லி சென்றுள்ளார். இந்திய தலைநரில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன் நிலையில், ஈழத் தமிழர்கள் ISIS தீவிரவாதிகளுடன் இணைந்து அமெரிக்க அதிபரை போட்டு தள்ள திட்டம் தீட்டியுள்ளதாக இந்திய புலனாய்வு துறை அறிவித்துள்ளது. ISIS தீவிரவாதிகள் அமெரிக்க அதிபர் ஓபாமாவை இந்தியாவில் வைத்து கொலைசெய்ய முயல்வதாகவும். இதற்கு இலங்கை தமிழர்கள் மற்றும் மொரீஷஸ் நாட்டு பிரஜைகளை பயன்படுத்த இருக்கிறார்கள் என்றும் "ரா" அமைப்பு அறிவித்தல் வெளியிட்டுள்ளது.
இதனால் மும்பை, மற்றும் டெல்லி பகுதிகளில் வெளிநாட்டவர்களையும், இலங்கையர்களையும் குறிவைத்து கண்காணிப்பில் இந்தியப் பொலிசார்ஈடுபட்டுள்ளனர். ஈழத் தமிழர் விரோதப் போக்கை இந்திய புலனாய்வுப் பிரிவான "ரா" அமைப்பு நீண்ட நாட்களாக கொண்டுள்ளது என்பது வருந்தத்தக்க விடையம் ஆகும். தற்போது இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையால், இந்தியாவில் ஈழத் தமிழர்களுக்கு மேலும் பாதுகாப்பற்ற சூழல் ஒன்று உருவாகியுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/2067.html
Geen opmerkingen:
Een reactie posten