[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 01:03.06 AM GMT ]
பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக ஒவ்வொரு இடத்தில் சென்று சொல்லிப் புலம்புவதில் பயனில்லை. பாதுகாப்பு குறைக்கப்படவில்லை.
முன்னாள் பிரதி நீதி அமைச்சருக்கு 15 – 20 வரையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
எனக்கு ஆறு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கப்பட்டுள்ளனர். அதிலும் இரண்டு பேர் மட்டுமெ என்னுடன் இருக்கின்றார்கள்.
பாதுகாப்பு உத்தியோகத்தர்களை எனக்கு பணி விடை செய்யும் சேவகர்களாக்க முடியாது.
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் புடைசூழ பொய் பகட்டுக்காக பயணம் செய்யும் காலம் முடிவடைந்து விட்டது.
மக்களின் பணமும் சேமிக்கப்பட்டுள்ளதுடன், நல்லாட்சியில் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
புலிகளினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் தமக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிள்ளையான் முறைப்பாடு செய்கின்றாரே இது பற்றி உங்களது கருத்து என்ன என சுஜீவ சேனசிங்கவிடம் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKcjxy.html
சவுதி மன்னரின் ஜனாசா நல்லடக்கம் - இலங்கை அமைச்சர்களும் பங்கேற்பு
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 01:44.21 AM GMT ]
சவுதி அரேபிய மன்னர் அப்துல் பின் அசீஸின் ஜனாசா நல்லடக்கத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்கள் சிலர் அங்கு சென்றுள்ளனர்.
அமைச்சர்களான ரிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், அப்துல் ஹலீம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி ஆகியோர் சவுதி பயணமாகினர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இவர்கள் சவுதி சென்றனர்.
சவுதி மன்னரின் அனுதாபச் செய்தியைக் கேள்வியுற்றதும் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பிலுள்ள சவுதி தூதரகத்துக்குச் சென்று தூதுவரைச் சந்தித்து தனது அனுதாபங்களைத் தெரிவித்திருந்தார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த அனுதாபக் குறிப்பிலும் ஜனாதிபதி கையெழுத்திட்டிருந்தார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீமும் சவுதி தூதரகத்துக்கு நேற்றையதினம் சென்றிருந்தார்.
தொடர்புபட்ட செய்தி
http://www.tamilwin.com/show-RUmtyBRYKcjx3.html
சிங்கள மக்களின் ஆதரவுடன் இனப்பிரச்சினை தீர்வை முன்னெடுக்க அரசாங்கமும் கூட்டமைப்பும் முனைப்பு: ஆய்வு
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 02:06.49 AM GMT ]
இதன் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புதிய அரசாங்கமும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
தற்போதைய சூழ்நிலையில் சிங்கள மக்களை தூண்டிவிடக்கூடிய எந்தவொரு அறிவித்தல்களையும் வெளியிடுவது புதிய அரசாங்கத்துக்கு பாதகமாக முடிந்துவிடும் என்பதற்காக கருத்துக்கள் கவனமாக வெளியிடுப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
போர்க்குற்ற விசாரணைகளை பொறுத்தவரை புதிய அரசாங்கத்தினால் உடனடியாக தீர்மானம் ஒன்றை எடுக்க முடியாது.
இது எதிர்வரும் ஏப்பரலில் நடைபெறும் பொதுத்தேர்தலில் பாதகமான விளைவை புதிய அரசாங்கத்துக்கு ஏற்படுத்திவிடும். எனவே இனப்பிரச்சினை தீர்வு, போர்க்குற்ற விசாரணை போன்ற விடயங்களை ஏப்ரலுக்கு பின்னர் கையாளும் நடவடிக்கைகளையே புதிய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
இதன் அடிப்படையிலேயே போர்க்குற்றங்களை விசாரணை செய்ய புதிய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும் இதனை உடனடியாக ஆதரித்தால் காலதாமதங்களுக்கு தாமும் உடன்பட்டவர்களாக கருதப்படுவோம் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய ஆணைக்குழு விடயத்தை நிராகரித்துள்ளது.
அதேநேரம் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் எதிர்வரும் மார்ச்சில் ஐக்கிய நாடுகளின் அறிக்கை வெளியாகவுள்ளது. இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சு நடத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஐக்கிய நாடுகள் பக்கத்தில் இருந்து கடுமையான நடவடிக்கைகள் தவிர்க்கப்படுமானால் அது, தென்னிலங்கையில் பொதுத் தேர்தலின்போது தமக்கு சாதகமாக இருக்கும் என்று ரணில் நம்பிக்கை கொண்டுள்ளார்.
இதற்கிடையில் 13வது அரசியல் அமைப்பு திருத்தத்தை அமுல்செய்வது தொடர்பில் புதிய அரசாங்கம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு சமாந்தரமாக ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்ற விடயத்தை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முயற்சிக்கிறது. இதனையே புதிய அரசாங்கமும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
சிங்கள மக்களையும் தீர்வு ஒன்றுக்கு இணங்க வைப்பதே இதன்நோக்கமாக கருதப்படுகிறது.
இந்தநிலையில் 13வது அரசியலமைப்புக்கு அப்பால் செல்லத்தேவையில்லை என்று இந்தியா ஆலோசனை தெரிவித்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தென்பகுதி தெனியாயவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர், இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 13ஆம் அரசியல் அமைப்புக்குள் தீர்வு என்ற விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கையில் தேசிய பிரச்சினைக்கான தீர்வு பேச்சுவார்த்தை அல்லது போர்க்குற்றம் தொடர்பான விடயங்கள் யாவும் ஏப்ரலில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு பின்னரே முன்னெடுக்கப்படும் என்பது உறுதி.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKcjx4.html
Geen opmerkingen:
Een reactie posten