[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 03:17.15 PM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலில் போட்டியிட்ட போது தமது தாயை சிறைப்படுத்தியதாக கூறி சிறுவன் ஒருவரின் காணொளியை ஒளிபரப்பியமை தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தினத்தன்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்துக்கு வந்து சென்றதாக கூறப்படுவதை தேர்தல்கள் ஆணையாளர் மறுத்துள்ளார்.
இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வை காண்பதற்கு தாம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுவன் தொடர்பில் காணொளியை கையளித்த சிறுவனின் தந்தை என்று கூறப்படுபவரின் பெயரை வெளியிடுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இந்த காணொளி தேர்தல் பிரசாரமாக ஒளிபரப்பப்பட்டது.
தமது தாய் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறித்த சிறுவன் கூறும் வகையில் அந்த காணொளி தயாரிக்கப்பட்டிருந்தது.
தமக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தாய் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறித்த சிறுவன் காணொளியில் தெரிவித்திருந்தார்.
எனினும் இந்த காணொளிக்காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த சிறுவனின் தாயார், பொலிஸாருக்கு முறையிட்டார்.
தமது மகனை தமது கணவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் அழைத்துச் சென்றதாகவும் பின்னர் தொலைக்காட்சியிலேயே மகனை கண்டதாகவும் குறித்த தாய் தமது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்தே இது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcjw1.html
தேர்தலன்று கோத்தபாய அலுவலகத்துக்கு வரவில்லை: மஹிந்த தேசப்பிரிய
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 03:40.27 PM GMT ]
தமது நினைவுப்படி கோத்தபாய ராஜபக்ச, இறுதியாக 2010 ஆம் ஆண்டிலேயே தேர்தல்கள் திணைக்களத்துக்கு வந்து சென்றதாக ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய செய்தியாளர்கள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், ராஜகிரிய தேர்தல்கள் திணைக்களம் மற்றும் வாக்குகள் கணக்கிடும் நிலையமான டி.எஸ்.சேனாநாயக்க ஆகியவற்றை இராணுவம் சுற்றி வளைத்ததாக வெளியான தகவலையும் தேசப்பிரிய நிராகரித்துள்ளார்.
எனினும் தேர்தல் தினத்தன்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதாக புரட்சி ஒன்றுக்கு முயற்சிக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து தேசப்பிரிய எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
வன்முறைகள் ஏற்பட்டால், நிலைமையை கட்டுப்படுத்த இராணுவம் தயார் நிலையில் சில இடங்களில் நிறுத்தப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் தினத்தன்று எவரும் முடிவுகள் தொடர்பில் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என்று கூறிய தேசப்பிரிய, அதிக ஆவண ஏற்றம் காரணமாக கனணிகளின் இயக்கம் தாமதமானதன் காரணமாகவே சிலவேளைகளில் முடிவுகள் தாமதமானதாக தேசப்பிரிய கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcjw2.html
இனப்பிரச்சினையை தீர்க்க திடசங்கற்பம்! சவால்கள் காத்திருக்கின்றன: ரணில்
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 04:24.09 PM GMT ]
இந்த தகவலை தெ வோல் ஸ்ரீட் ஜேனல் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பலமான மனிதனாக கருதப்பட்ட மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்து இரண்டு கிழமைகள் சென்றுள்ள நிலையில் புதிய அரசாங்க தலைவர்கள் ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் அரசியல் யாப்பையும் மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தநிலையில் பாரிய சவால்கள் நாட்டில் காத்திருப்பதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
தெ வோல் ஸ்ரீட் ஜேனலுக்கு செவ்வி ஒன்றை வழங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்கää பொலிஸ் துறையை அரசியல் மயத்தில் இருந்து விலக்குவதே தமது பிரதான கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.
முடிவடைந்த ஜனாதிபதி தேர்தல், மாற்றத்துக்காக இடம்பெற்றது. இதில் நல்லிணக்கத்துக்கான மாற்றமும்; உள்ளடங்குகிறது என்று ரணில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcjw3.html
Geen opmerkingen:
Een reactie posten