[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 03:09.50 PM GMT ]
உள்துறை அமைச்சின் செயலாளர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி மேல்மாகாண சிரேஸ்ட உதவி பொலிஸ் அதிபர் அநுர சேனாநாயக்கää கொழும்பு தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வடமாகாண சிரேஸ்ட உதவி பொலிஸ் அதிபர் பூஜித் ஜெயசுந்தர மேல்மாகாணத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாண சிரேஸ்ட உதவி பொலிஸ் அதிபர் லலித் ஜெயசிங்க வடமாகாணத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண உதவி பொலிஸ் அதிபர் நந்தன முனசிங்க ஊவாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தென்மாகாண உதவி பொலிஸ் அதிபர் சி டி விக்கிரமரத்ன சப்ரகமுவவுக்கு மாற்றம் பெற்றுள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தின் உதவி பொலிஸ் அதிபர் ரவி வித்தியாலங்கார பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்றம் பெற்றுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKcix2.html
அடுத்த மாதம் இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 03:48.40 PM GMT ]
ஜனாதிபதி செயலக பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த வாரத்தில் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது இலங்கை ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ அழைப்பை இந்தியா விடுத்திருந்தது.
இந்தநிலையில் மங்கள சமரவீர தற்சமயம் அமெரிக்கா மற்றும் சீன நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKcix3.html
ஏப்ரல் மாதம் 24ம் திகதிக்கு முன்னர் பொதுத் தேர்தல்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 03:51.30 PM GMT ]
அந்த தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போ ஆட்சிக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இரண்டு வருடங்களுக்கு புதிய அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கு முந்தைய அரசினால் செயலிழக்கச் செய்யப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவை மீண்டும் செயற்படுத்துவதற்கும் 100 நாட்களில் எஞ்சியுள்ள 84 நாட்களுக்குள் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றும் அவர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKcix4.html
ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு ரணில் எச்சரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 04:10.22 PM GMT ]
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது கட்சி எடுத்த தீர்மானத்துக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் தமது இணக்கத்தை வெளியிட்டனர். எனினும் சிலர் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டனர்.
இந்தநிலையில் அவர்களை போட்டியிட வைப்பது தொடர்பில் மீள் சிந்திக்க வேண்டியிருக்கும் என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சி பாரிய அர்ப்பணிப்புக்களை செய்தது.
இதன்மூலம் இலங்கையில் புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எதிர்வரும் ஏப்ரலுக்கு பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKcix5.html
ஊழல் குற்றச்சாட்டில் முன்னிலை வகிக்கும் விமல் வீரவன்ச
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 04:21.37 PM GMT ]
விமல் வீரவன்ச, ஜேவிபியில் இருந்த போது கடவத்தையில் உள்ள தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றில் இருந்து வருமானத்தை பெற்றுவந்தார்.
எனினும் 2008ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய பின்னர், அவர் பல்வேறு காரணங்கள் கண்டறியப்படாத வருமானங்களின் மூலம் இலட்சாதிபதியாகினர் என்று கடுவல மேயர் ஜி.எச்.புத்ததாஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன் விமல் வீரவன்ச, தமது மனைவியான சசி வீரவன்சவுக்கும் இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொடுத்துள்ளார்
பொதுவில் அமைச்சர் ஒருவரின் பாரியார் இராஜதந்திர கடவுச்சீட்டுக்கு உரித்துரியவர் அல்லர் என்ற நடைமுறையை மீறியே இந்த கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை தவிர ஆட்பதிவு திணைக்கள அதிகாரிகளை பிழையாக வழி நடத்தி இரண்டு தேசிய அடையாள அட்டைகளையும் சசி வீரவன்ச பெற்றுள்ளார்.
இந்தக்குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கையின் ஊடகம் ஒன்று விமல் வீரவன்சவை தொடர்புக்கொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKcix6.html
Geen opmerkingen:
Een reactie posten