[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 10:49.53 AM GMT ]
கடந்த அரசாங்கத்தில் உயிர்களைப் பலிகொடுத்தும் நியாயமான தீர்வைப் பெற முடியாமல் போனதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அம்மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சியனப் பிரதேச குடி நீர் பாதுகாப்பு மக்கள் எழுச்சி அமைப்பின் ஏற்பாட்டாளர் பிரமித ஹெட்டியாராச்சி இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அந்த நேரத்தில் கடமையில் இருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர், அப்பொழுது கடமையில் இருந்த இராணுவத் தளபதி அல்லது பதில் இராணுவத் தளபதி ஆகியோரை உடன் அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும்.
கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து எமது மக்கள் திருப்திப்படப் போவதில்லை.
இது தொடர்பிலான விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் நாம் முறைப்பாடொன்றை கையளித்துள்ளோம்.
எதிர்வரும் மூன்று மாத காலத்துக்குள் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்துக்கு வலியுறுத்தியே இன்று மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
குடிநீர் கேட்டு வீதியில் இறங்கிப் போராடிய மக்கள் மீது மகிந்த அரசாங்கம் துப்பாக்கியால் பதில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரச சேவை உள்ளீர்ப்பில் புறக்கணிக்கப்படும் அம்பாறை மாவட்டத் தமிழர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 11:06.26 AM GMT ]
இது தொடர்பா அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அண்மையில் கிழக்கு மாகாண பொதுச் சேவையில் வெற்றிடமாகவுள்ள சமூக சேவை உத்தியோகத்தர் தரம்-II இற்கு மாவட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்காக திறந்த அல்லது மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு தகைமையுடைய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இவ்விண்ணப்பம் கோரலில் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் விண்ணப்பிக்க முடியாது எனவும் காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறாக காட்டப்பட்டுள்ளதன் நோக்கம் என்ன?
அம்பாறை மாவட்டமானது சுமார் தொண்ணூறாயிரம் தமிழ் வாக்காளர்களைக் கொண்டுள்ளதுடன் ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களைக் கொண்டதொரு மாவட்டமாகும்.
இம்மாவட்டத்தில் இவ்வாறான அரச தொழில்கள் வழங்கும்போது ஏன் இவ்வாறான பாகுபாடு காட்டப்படவேண்டும்?
கடந்த காலங்களில் கூட முகாமைத்துவ உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சாரதிகள் மற்றும் சிற்றூழியர்கள் நியமனங்கள் என்பனவும் எழுத்துப் பரீட்சைகள் மற்றும் நேர்முகப் பரீட்சைகளில் தெரிவு செய்யப்பட்டும் தமிழர்கள் என்றபடியால் நியமனங்கள் மறுக்கப்பட்டு சகோதர இனத்தவர்களுக்கு வழங்கப்பட்டது.
அவ்வாறு மறுக்கப்பட்ட பின்னர் இம்முறை பகிரங்கமாகவே இவ்வாறு ஒரு இனம் தாம் விரும்பிய ஒரு தொழிலினை செய்யாமல் தடுப்பதென்பது மிகவும் பாரியதொரு அப்பட்டமான மனித உரிமையை மீறும் செயலாகும்.
தமிழினமானது கடந்தகால யுத்தத்தின் பின்னர் தம்மிடமுள்ள கல்வியினை மாத்திரம் மூலதனமாக வைத்து தமது முன்னேற்றத்தினை ஏற்படுத்த நினைக்கும் காலத்தில் இவ்வாறு அதனையும் திட்டமிட்டு ஒருமாவட்டத்தினுள் புறக்கணிப்பது நியாயமானதா?
சகோதர இனங்கள் வியாபாரத்தில் முன்னேறும் அதே தறுவாயில் சிறியளவிலான கல்வியினை மாத்திரம் வைத்துக்கொண்டு பலத்த அரசியல் பின்ணணியில் இவ்வாறாக மாகாண சபையின் அதிகாரத்தினைப் பயன்படுத்தி அவர்கள் மாத்திரமே அரச தொழில் பெறவேண்டுமென்று செயற்படுதலானது முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டிய விடயமே.
ஏனெனில் போட்டிப் பரீட்சையில் சிறந்த மதிப்பெண்ணை பெறும் ஒரு பரீட்சார்த்தியினை தேர்ந்தெடுப்பின் அப்பரீட்சையில் தமிழர்கள் முதன்நிலையில் இருப்பதால் இவர்களின் இயலாமை வெளிப்படும் என்னதனை நன்கு உணர்ந்தே இவ்வாறான தந்திரங்களை பாவித்து தமிழர்களை புறக்கணிக்கின்ற செயற்பாட்டினை முன்னெடுக்கின்றனர்.
இதனைப் போன்று பல அபிவிருத்தித் திட்டங்களிலும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றமையும், திட்டமிட்டு சகோதர அரசியல் தலமைகளால் தமிழர்களின் காணிகள் பறிக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வருவதனையும் பிரதேசத்தின் அபிவிருத்திகளை நிர்வாகச் செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டிய பிரதேச செயலகங்களுக்கு வழங்கி நிதிகளை வீணடித்த நிகழ்வுகளையுமே இதுவரையில் நடந்தேறிய நிதர்சனமான உண்மையாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, முன்னைய உள்ளூராட்சி அமைச்சரின் மிகத்திட்டமிட்ட ரீதியில் அம்பாரைமாவட்ட தமிழ் பிரதேச சபைகளின் செயற்பாட்டை முடக்குவதற்காக அவற்றிற்கு தேவைகளாக இருந்த பல வாகனங்களினை வழங்காமல் தேவைக்கு அதிகமாக உள்ள மற்றைய சபைகளுக்கே வழங்கியமையானது எம் தமிழ் மக்கள் மீது எவ்வளவு பாகுபாட்டிடை காட்டும் செயற்பாடு என்பதனை எம்மக்கள் நன்கு அறிவர்.
இவ்வாறாக தொடர்ந்தும் தமிழர்கள் நசுக்கப்படுவதனை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. இச்செயற்பாடுகளை உடன்நிறுத்தி மாவட்டத்தினுள் பாகுபாட்டினை ஏற்படுத்தும் இச்செயற்றிட்டமானது புதிய ஜனாதிபதியின் தலையீட்டாலும் புதிய கிழக்குமாகாண ஆளுனராலும் ஏனைய அரசியல் தலமைகளினாலும் உடன் நிறுத்தப்பட்டு கடந்த கால ஆட்சியில் இவ்வாறு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான வேலைவாய்ப்பினை வழங்க சிறந்ததொரு சமிக்கையினை காட்டவேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடருமானல் எதிர்காலத்திலும் மீண'டுமோர் ஓர் ஆயுதக் கலாச்சாரம் தோன்றக் கூடிய சூழ்நிலை ஏற்படலாம் என்பதனையும் கருத்தில் கொண்டு செயற்பட அனைத்து தலமைகளும் முன்வர வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciw6.html
வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு சிறைத் தண்டனை
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 11:56.07 AM GMT ]
வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்றிலேயே அவருக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
2009ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் திகதி ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் அனுமதியின்றி நுழைந்தமை மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.
இதேவேளை இந்த வழக்கு விசாரணைகளில் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆஜராகாமையால் அவர் இன்றி வழக்கு விசாரணைகள் முடிவுற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அவரை விரைந்து கைது செய்யுமாறும் பிடியாணை பிறப்பித்த நீதவான் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு நீதிமன்றத்தை புறக்கணிப்பது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
குற்றவாளியான வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரசிக அமரசிங்க ஜனவரி 19ம் திகதி விடுமுறையில் சிங்கப்பூர் சென்றிருக்கும் நிலையில் அவருக்கு இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றவாளியான வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரசிக அமரசிங்க ஜனவரி 19ம் திகதி விடுமுறையில் சிங்கப்பூர் சென்றிருக்கும் நிலையில் அவருக்கு இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciw7.html
மகேஸ்வரி நிதியத்திற்குப் பதிலான மண் அகழ மாற்று நடவடிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 02:17.28 PM GMT ]
மேற்படி மகேஸ்வரி நிதியத்தினர் மணல் அகழ்விற்குப் பயன்படுத்திய அனுமதிப்பத்திரம் முறையற்ற வகையில் பெறப்பட்டதென அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நிதியம் மணல் அகழ்வதற்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் குடாநாட்டில் பெருமளவு கட்டட வேலைகள் பின்னடைவு கண்டுள்ளதுடன், 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டட நிர்மாண தொழிலாளர்கள் மற்றும் மணல் அகழந்தெடுக்கும் தொழிலாளர்கள், பாராவூர்தி தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அவர்,
ஐ.தே.கட் சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர், துவாரகேஸ்வரனுக்கு குறித்த விடயம் தொடர்பிலான ஆய்வினை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார்.
இதற்கமைய அவர் இன்றைய தினம் குறித்த பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது வடமாகாண கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி 2 மாதங்களுக்கு மணல் அகழ்வினை, மருதங்கேணி கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக நடத்துவதற்கு மக்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
மேலும் 2 மாதங்களின் பின்னர் நாகர்கோவில், அம்பன், குடாரப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கள் இணைந்து மணல் அகழ்வு தொடர்பில் அரசியல் தலையீடுகள் இல்லமல் தாங்களே மேற்கொள்ளும், பொறிமுறை ஒன்றை உருவாக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக இன்றைய தினம் தான் பிரதமருக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் அதனடிப்படையில் விரைவுபடுத்தி இந்த மணல் அகழ்வு விடயத்தில் ஒரு தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர் தரப்பை ஏமாற்றுமா ஜெனீவா?
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 02:42.21 PM GMT ]
அடுத்த மாத இறுதிக்குள்ளாக இந்த விசாரணை அறிக்கை ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டால் தான், அடுத்த கட்டமாக மார்ச் 25ம் திகதி அதனை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் சமர்ப்பிக்க முடியும்.
இலங்கையில் நடந்தேறியுள்ள ஆட்சி மாற்றங்கள் குறித்த கவலைகள் ஏதுமின்றி, இதற்கான பணிகள் வேகமாக முன்னெடுக்கப்படுவதாகவே தெரியவருகிறது.
அதேவேளை, இந்த விசாரணை அறிக்கையும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யின் அடுத்த கூட்டத் தொடரும் இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு சவால்கள் மிக்க விடயமாகவே இருக்கப் போகின்றன.
ஏனென்றால், முன்னைய மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் ஜெனீவா தீர்மானங்கள் மற்றும் ஐ.நா. விசாரணை போன்ற விடயங்களில், கடைப்பிடித்த முரண்போக்கு அணுகுமுறையை இப்போதைய அரசாங்கத்தினால் கடைப்பிடிக்க முடியாது.
அதேவேளை, முன்னைய அரசாங்கம் அத்தகைய அணுகுமுறையின் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் தனது இமேஜை உயர்த்திக் கொண்டது.
எனவே, முன்னைய அரசாங்கத்துக்கு பலம் சேர்க்கும் வகையில், தமது நகர்வு அமைந்துவிடக்கூடாது என்பதுவும், இப்போதைய அரசாங்கத்தின் கரிசனைக்குரிய விவகாரமாகவும் இருக்கிறது.
இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளப் போகின்ற நிலையில், தற்போதைய அரசாங்கம் சிங்கள மக்களை விரோதிக்கும் எந்தக்காரியத்திலும் ஈடுபடாது.
எனவே, ஜெனீவா கூட்டத்தொடர் விவகாரத்தில், விட்டுக்கொடுக்கவும் முடியாத அதேவேளை, சர்வதேசத்துடன் முரண்டு பிடிக்கவும் முடியாத ஒரு சூழ்நிலை புதிய அரசாங்கத்துக்கு உருவாகியுள்ளது.
மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் 100 நாள் செயற்றிட்டத்தை முன்வைத்தே தற்போது ஆட்சியை நடத்தினாலும், அவ்வப்போது அதற்கு வெளியே செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.
ஜெனீவா விவகாரமும் அவ்வாறானதொன்று தான். ஏனென்றால், அந்த 100 நாட்களுக்குள் தான் ஜெனீவாவில் இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. விவாதம் நடக்கப் போகிறது. அடுத்து என்ன செய்வது என்று தீர்மானிக்கப்படப் போகிறது.
எனவே, புதிய அரசாங்கம் ஜெனீவாவை எவ்வாறு அணுகுவது-, ஐ.நா. விசாரணையை எப்படிக் கையாள்வது என்பதற்கான தயார்படுத்தல்களில் எப்படியும் ஈடுபட்டேயாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் சமர்ப்பிக்கப் போகும் விசாரணை அறிக்கை, குற்றங்கள் நடந்ததா இல்லையா என்பதைத் தான் கூறுமே தவிர, அது எவரையும் குற்றவியல் நீதிமன்றத்து க்கு கொண்டு செல்வதற்கான அதிகாரம் பெற்றதாக இருக்காது என்றும், அந்த அறிக்கை வெளியானதும் அதுகுறித்து அரசாங்கம் முடிவு செய்யும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.
எவ்வாறாயினும், குற்றங்கள் நிகழவில்லை என்று ஐ.நா. விசாரணை அறிக்கை வரப் போவதில்லை. எனவே, அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது.
அதனால்தான், கடந்தவாரம் புதுடில்லி சென்றிருந்தபோது, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியாவின் உதவியை கோரியிருந்தார்.
அதுபற்றிய தகவல்களை இரு நாடுகளும் பகிரங்கப்படுத்தாத போதிலும், இந் திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் நடந்த மூன்று மணிநேரப் பேச்சில் அதுவும் முக்கியமாக ஆராயப்பட்டிருக்கிறது.
புதுடில்லிப் பயணத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த மங்கள சமரவீர, ஐ.நா.வின் உதவியுடன் இலங்கை அரசாங்கம் உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத் தும் என்று தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே, தேர்தல் பிரசாரங்களின் போதும் கூட, சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க மாட்டோம் என்றும், ஆனால் உள்நாட்டுச் சட்டங்களுக்கு அமைய, உள்நாட்டு விசாரணை நடத்துவோம் என்றும் தான் தற்போதைய அரசாங்கம் கூறியிருந்தது.
எனவே, 100 நாள் செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் சரி இல்லாது போனாலும் சரி, போரின் இறுதிக்கட்ட சம்பவங்கள் குறித்து உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத்தும் நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
அதற்குக் காரணம், வரும் மார்ச் மாதம், ஜெனீவாவில் வெளியாகப் போகும் அறி க்கை மற்றும் அதன் மீதான ஐ.நா.வின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு முன்னதாகவே இதனைச் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.
இலங்கைக்கு எதிராக, 2012ஆம் ஆண்டு தீர்மானத்தைக் கொண்டு வர முன்னரும் சரி, முதல் இரண்டு தீர்மானங்களின் போதும் சரி, அமெரிக்கா தலைமையிலான நாடுகள் நம்பகமான உள்நாட்டு விசாரணையையே வலியுறுத்தின.
ஆனால், சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப, சர்வதேச சமூகத்தின் நம்பகத்தைப் பெறக்கூடிய விசாரணைகளை நடத்த இலங்கை அரசாங்கம் மறுத்திருந்தது. அதனால் தான், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா.வின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இப்போது கூட, நம்பகமான விசாரணைகளை ஐ.நா.வின் உதவியுடன் ஆரம்பிப்பதன் மூலம், ஜெனீவா நகர்வுகளுக்கு தற்காலிக தடை ஒன்றைப் போடலாம் என்று இப்போதைய அரசாங்கம் கருதுகிறது.
இந்தியாவும் கூட இதற்கு நிச்சயம் ஆதரவளிக்கும். ஏனென்றால் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்குத்தான் இந்தியா எதிர்ப்புத் தெரிவித்ததே தவிர, ஒரு போதும் உள்நாட்டு விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
அதைவிட, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் இந்தியா ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது.
அதனால் தான், ஜெனீவாவில் இலங்கை க்கு ஆதரவு வழங்கக் கோரிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு, உடனடியாக உள்நாட்டு விசாரணையை ஆரம்பிக்குமாறு இந்தியத் தரப்பில் ஆலோ சனை கூறப்பட்டுள்ளதாகத் தகவல்.
அவ்வாறு நம்பகமான ஒரு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டால், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அடுத்த கட்டம் குறித்து சற்று நிதானமாகவே முடிவெடுக்கும்.
ஏனென்றால், அவர்கள் தரப்பிலும் பலவீ னங்கள் உள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை வைத்து இலங்கைக்கு எதிராக உடனடியாக எந்த நடவடிக்கையை யும் மேற்கொள்ள முடியாது.
அதற்குப் பாதுகாப்புச் சபையின் அனுமதி தேவை. பாதுகாப்புச் சபையிலோ, சீனாவும், ரஷ்யாவும் வீட்டோ அதிகாரங்களால் அதனைத் தடுத்து விடும்.
எனவே, இலங்கையுடன் இணக்கமானதொரு நிலையை ஏற்படுத்தக் கூடிய நம்பகமான உள்நாட்டு விசாரணை மூலமே இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பது அமெரிக்காவுக்கும் நன்றாகவே தெரியும்.
ஆட்சிமாற்றத்துக்கு அமெரிக்கா உந்துதல் கொடுத்தமைக்கு இதுவும் ஒரு காரணம். இது இலங்கையின் புதிய அரசாங்கத்துக்குச் சாதகமான விடயம்.
இதனைக் கருத்தில் கொண்டு தான், உள்நாட்டு விசாரணை என்ற கவசத்தை இப்போதைக்குப் பயன்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது இலங்கை அரசு.
இதுபற்றிக் கலந்துரையாடுவதற்காக கடந்த வாரம் வாஷிங்டன், நியூயோர்க், ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவர்கள் வெளிவிவகார அமைச்சினால் கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அதேவேளை, ஐ.நா.வின் உதவியுடன் நம்பகமானதொரு விசாரணைக் குழுவை நியமிக்க முன்னர், புதிய அரசாங்கத்துக்கு இன்னும் சில சிக்கல்களும் இருக்கின்றன.
ஏற்கனவே நியமிக்கப்பட்ட காணமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு ஒன்று உள்ளது.
போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.
இவற்றினால் முன்னெடுக்கப்படும் விசா ரணைகள் குறித்தும் முடிவெடுக்க வேண்டும்.
புதிய விசாரணைகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். இவற்றைச் செய்தால் மட்டும் போதாது, சிங்கள மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆக, இது கல்லில் நார் உரிக்கும் காரியம் தான். என்றாலும் அதைச் செய்தேயாக வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை அரசுக்கு உள்ளது.
இலங்கை அரசாங்கம் உள்நாட்டு விசாரணைகளை நடத்துவதற்கு வசதியாக, அதன் போக்கை மதிப்பிடுவதற்காக, ஐ.நா.வும் அமெரிக்காவும் கூட குறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்க முன்வரலாம்.
ஏனென்றால், அதைவிட வேறு தெரிவு அவர்களுக்கும் இல்லை.
ஆனால், அத்தகைய தீர்மானம் தமிழர் தரப்புக்கு ஏமாற்றமளிப்பதாகவே அமையும். தமிழர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்ததன் விளைவே இது என்று, தீவிர கருத்துடையோரால், குற்றம் சாட்டப்படும் நிலையையும் இது ஏற்படுத்தக் கூடும்.
என்.கண்ணன்
http://www.tamilwin.com/show-RUmtyBRZKcix1.html
Geen opmerkingen:
Een reactie posten