தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 januari 2015

இசைப் பிரியா -பாலச்சந்திரன் தொடக்கம் அனைத்து கொலைகளும் விசாரிக்கப்படவேண்டும் !

குண்டு துளைக்காத வாகனங்களே அதிகம் மீட்க்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது !

[ Jan 24, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 21125 ]
முன்னைய அரசாங்கத்தின் தோல்விக்கு பின்னர் மீள ஓப்படைக்கப்படாத 50 ற்கும் மேற்பட்ட வாகனங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் குண்டுதுளைக்காத வாகனங்களும் உள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 53 வாகனங்கள் கொழும்பின் வெற்றுக் காணி ஒன்றிலிருந்து மீடகப்பட்டு உள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
128 வாகனங்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் காணமற் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 53 வாகனங்களும் எவ்வாறு அந்த இடத்திற்கு வந்தன என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றோம் எனவும் பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/2068.html

இசைப் பிரியா -பாலச்சந்திரன் தொடக்கம் அனைத்து கொலைகளும் விசாரிக்கப்படவேண்டும் !

[ Jan 24, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 31955 ]
இறுதி யுத்தத்தின் கடைசி நாட்களில் நடந்த படுகொலைகள் தொடர்பாக விசாரிக்கப்படவேண்டும் என்று புலம்பெயர் தமிழர்கள், கோரிக்கை விடுத்துள்ளார்கள். கிறீஸ்தவபாதிரியாருடன் சென்று இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த எழிலன், புதுவை ரத்தினதுரை, ஈரோஸ் முக்கியஸ்தர் பாலகுமார், புலிகளின் குரல்பொறுப்பாளர் தமிழ் அன்பன், மற்றும் நிர்வாக சேவை உதவிப் பொறுப்பாளர் பிரியன் ஆகியோருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் பதில்கூறவேண்டும். அவர்கள் தொடர்ந்து ரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தால், அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று புலம்பெயர் தமிழர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இதேவேளை கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் கொலைசெய்யப்பட்ட புலிகள் உறுப்பினர்கள், இசைப்பிரியாவுடன் கொலையுண்ட நபர்கள், பாலச்சந்திரனுடன் கொல்லப்பட்ட பாதுகாவலர்கள் என்று இறுதி தினத்தில் நடந்த அனைத்து கொலைகளும் விசாரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரின் கொலைகளை விசாரிக்க தற்போது இலங்கை அரசு இணங்கியுள்ளது. ஆனால் அது போதாது. கொலையுண்ட அனைத்து நபர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் முறைப்படி நடக்கவேண்டும் என்பதே புலம்பெயர் மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது.
இதில் சர்வதேச தலையீடு இருக்கவேண்டும். அவர்கள் மத்தியஸ்த்தம் வகிக்கும் பட்சத்திலேயே விசாரணைகள் முறையாக நடைபெறும். இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதனை தற்போதுள்ள இலங்கை அரசு ஏற்குமா ?
http://www.athirvu.com/newsdetail/2069.html


Geen opmerkingen:

Een reactie posten