தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 januari 2015

மகிந்த அரசாங்கத்தில் ஊழலில் ஈடுபட்டவர்களின் ஆதாரங்களைக் கோருகிறார் அரியம் எம்.பி!

இலங்கைக்கு எதிரான மீன்பிடித்தடையை நீக்க மங்கல சிசெல்ஸ் செல்கிறார்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 07:26.07 AM GMT ]
வெளியுறவு அமைச்சர் மங்கல சமரவீர எதிர்வரும் வாரத்தில் சிசெல்சுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கையில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 15ஆம் திகதி முலம் இலங்கையில் இருந்து மீன்களின் இறக்குமதியை தடைசெய்துள்ளது.
சர்வதேச கடற்பரப்பில் இலங்கையின் அத்துமீறல்கள் காரணமாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பிரச்சினையை கையாண்டு தீர்வை காண்பதற்காக ஏற்பாட்டாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் தேவா ஆதித்யாவை நியமித்துள்ளார்.
அவர் ஏற்கனவே தமது பணிகளையும் ஆரம்பித்துள்ளார். இதற்கு மத்தியிலேயே மங்கல சமரவீரவும் சிசெல்க்கு செல்கிறார்.
2013ஆம் ஆண்டில் மாத்தில் ஐரோப்பியாவுக்கான மீன் ஏற்றுமதியின் மூலம் இலங்கைக்கு 74 மில்லியன் யூரோக்கள் வருமானமாக கிடைத்தன.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciv0.html
கோத்தபாயவின் பெயரில் இருந்த வங்கி கணக்கு அரசியலமைப்புக்கு முரணானது: முன்னாள் கணக்காய்வாளர்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 07:53.20 AM GMT ]
நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தனது பெயரில் வங்கி கணக்கொன்றில் அரசாங்கத்திற்கு கிடைத்த பணத்தை அதில் வைப்புச் செய்திருந்தால், அது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணான செயல் என முன்னாள் அரச கணக்காய்வாளர் எஸ்.சீ. மாயதுன்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை வங்கியின் தப்ரபேன் கிளையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் வைத்திருந்த வங்கி கணக்கு சட்டவிரோமானது எனவும் அது அரச பொது நிதியத்திற்கு சேர வேண்டியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த வங்கி கணக்கு அமைச்சரவையின் அனுமதியுடன் தொடங்கப்பட்ட முன்னெடுக்கப்பட்டது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் கோத்தபாயவின் பெயரில் இருந்த வங்கி கணக்கில் வைப்புச் செய்யப்பட்டிருந்த 8 பில்லியன் பணத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அரச பொது நிதிய கணக்கிற்கு மாற்றம் செய்துள்ளார்.
அரசியலமைப்பின் 149 (1) இன் அடிப்படையில் நிதியமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக முன்னாள் கணக்காய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
யோஷித்த ராஜபக்ஷவே எனது மகனை தாக்கினார்: மேர்வின் சில்வா
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 08:01.00 AM GMT ]
கொழும்பு ஒடேல் ஆடை விற்பனை நிலையம் மற்றும் இரவு நேர களியாட்ட விடுதி ஆகியவற்றில் தனது மகன் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவுக்கு தொடர்பிருப்பதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வெளியாகும் வாராந்த செய்தி பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
தனது மகனான மாலக்க சில்வா, யோஷித ராஜபக்ஷவின் பாதுகாப்பாளர் ஒருவருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இதன் காரணமாகவே யோஷித ராஜபக்ஷ தனது மகனை தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தாமதமாக அறிந்து கொண்டதாகவும் செயதியை அறிந்த முன்னாள் ஜனாதிபதி, தனது மகனை பார்க்க அவர் 45 நிமிடத்திற்குள் வைத்தியசாலைக்கு வந்தாகவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்த கண்காணிப்பு கெமராக்களில் பதிவாக காட்சிகள் அழிக்கப்பட்டிருந்தன எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciv3.html

மகிந்த அரசாங்கத்தில் ஊழலில் ஈடுபட்டவர்களின் ஆதாரங்களைக் கோருகிறார் அரியம் எம்.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 08:42.48 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த அரசாங்கத்துடன் சேர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் இருப்பின் எமக்கு இரகசியமாகவோ அல்லது பகிரங்கமாகவோ தந்து உதவுக்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் நோக்கோடு இலங்கை தமிழரசிக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் உப தலைவர் கிருபானந்த சிவம் தலமையில் கூட்டம் ஒன்று அரசடித்தீவில் இடம் பெற்றுள்ளது.
இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழரசிக் கட்சியின் செயலாளர் நாயகமுமான துரைராஜசிங்கம் மற்றும் த.அ.கட்சியின் தொண்டர்கள், கிளை, உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அவர் மேலும் உரையாற்றுகையில்.
தற்பொழுது முன்னாள் ஜனாதிபதியைப் பற்றியும் அவருடன் சார்ந்தவர்கள் பற்றியும் பல்வேறுபட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.
இந்த ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக சுமந்திரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய அரசியல்வாதிகளாக இருக்கலாம், அமைச்சர்களாக இருக்கலாம், அதிகாரிகளாக இருக்கலாம் நீங்கள் அறிந்த வகையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் இருந்தால் எங்களிடம் இரகசியமாகவோ அல்லது வெளிப்படையாகவோ தாருங்கள்.
அவ்வாறான விடயங்களை வைத்துக் கொண்டு கடந்தகால ஆட்சி எவ்வாறு இடம் பெற்றுள்ளது என்பதனை வெளிச்சத்திற்கு கொண்டு வரமுடியும்.
இனிவருங் காலங்களில் நல்ல ஆட்சி நடக்கவேண்டும் என்பதற்காகத்தான் இதனை மேற்கொள்ளுகின்றோம்.
மற்றும் யாராவது காணாமல் போயிருந்தால் அல்லது சிறையில் தடுத்து வைத்து பார்க்க முடியாமல் இருந்தால் அதனையும் அறியத் தாருங்கள்.
சிலவேளைகளில் அதனை நாங்கள் கண்டு பிடிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக இருக்கும். கூட்டமைப்பை நிச்சயமாக முழுமையாக ஆதரிக்க வேண்டும். இதனால் மாத்திரம் தான் இந்த மாற்றத்தினை நாங்கள் தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்.
ஐனாதிபதித் தேர்தலில் பின்னர் மக்களை தெளிவுபடுத்தி இடம் பெறும் முதலாவது  கூட்டமாகத்தான் இதனை நான் பார்க்கின்றேன். உண்மையில் தற்போது இடம் பெற்றுள்ள அரசியல் மாற்றம் பற்றி நீங்கள் தெளிவாக அறிந்திருப்பீர்கள்.
தற்போது தற்செயலாக ஆட்சி மாற்றம் என்பது இடம் பெற்றிருக்கின்றது. பல்வேறுபட்ட தடயங்கள், பிரச்சினைகள், அடாவடித்தனங்களுக்கு மத்தியில்தான் இந்த ஆட்சிமாற்றம் என்பது இடம் பெற்றிருக்கின்றது.
கடந்த ஒன்பதாம் திகதி ஜனாதிபதி பதவியேற்ற பின்பு வெளிநாட்டில் இருந்து என்னிடம் ஒரு ஊடகவியலாளர் தொலைபேசி ஊடாக,
தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி அவர்கள் ஆட்சி மாற்றத்தினை ஏற்றுக் கொண்டு தானாகவே வெளியேறி இருக்கின்றார்.
இது சம்மந்தமாக தங்கள் கருத்து என்ன? என்று வினாவி இருந்தார்.
அலரிமாளிகையில் இடம்பெற்ற விடயம் தெரியாத நிலையில் இதற்கு நான் பதிலளிக்கையில், இவர்  ஒரு நல்ல ஜனாதிபதி எனவும்  பதவிக்காலம் முடியும் முன்பு தேர்தல் நடாத்தி இவ்வாறு வெளியேறியமை மக்களின் நன்மதிப்பினை பெறுவதற்காக இவ்வாறு நடந்திருக்கின்றார். இவரை நாங்கள் மதிக்கத்தக்க ஜனாதிபதியாக நாங்கள் பார்க்கவேண்டிய தேவை இருக்கின்றது என்ற கருத்தினை நான் கூறியிருந்தேன்.
பின்னார் அடுத்த நாள் பத்தாம் திகதிதான் அலரிமாளிகையில் இடம் பெற்ற விடயத்தினை அறியக் கூடியதாக இருந்தது.
இதனை நினைத்து மனவேதனை அடைந்தேன் நிச்சயமாக தற்போது இடம் பெற்றுள்ள ஆட்சி மாற்றங் காரணமாக தற்போதைய ஜனாதிபதி அவர்களின் ராஜதந்திரம், கூட்டுச்சேர்ந்துள்ள அணிகளின் பலம் அவர்களின் நடவடிக்கை காரணமாகத்தான் அவர் அங்கிருந்து வெளியேறி இருந்தாரே தவிர, அவர் திட்டமிட்டு அந்த பதவியில் இருந்து விலகவில்லை என்பது உண்மை.
எனவே இதனை வைத்துக் கொண்டு எமக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என எவாரும் நினைக்கக் கூடாது.
இது தற்காலிகம் மாந்திரம் தான். இதனை நிரந்தரமாக மாற்ற வேண்டுமாக இருந்தால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிரந்தரமாக ஆதரிக்க வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciv6.html

Geen opmerkingen:

Een reactie posten