தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 januari 2015

சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக ராஜித- ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து மஹிந்தவை அரசாங்கம் காப்பாற்றாது: அமைச்சர் ராஜித!

மைத்திரியும் சந்திரிக்காவும் இணைந்து மேடைப் பிரச்சாரம்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 06:18.31 AM GMT ]
எதிர்வரும் பாராளுமன்ற பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒன்றாக மேடை பிரச்சரங்களை நடத்தப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்களின் கட்சியின் வெற்றிக்காகவே இவர்கள் ஒன்றாக இணைந்து செயற்படப்போவதாக இன்றைய சிங்கள நாளேடு ஒன்று அதன் பிரதான செய்தியை வெளியிட்டுள்ளது.
இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேடைகளில் ஒன்றாக பிரச்சாரங்களை முன்னெடுத்தால் வெற்றி வாகை சூடும் சந்தர்ப்பம் அதிகமாக ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciu4.html
சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக ராஜித- ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து மஹிந்தவை அரசாங்கம் காப்பாற்றாது: அமைச்சர் ராஜித
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 07:37.00 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை நியமிப்பது குறித்து கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆராய்ந்து வருவதாக தெரியவருகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசாங்கத்தில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விலகி, அவரை ஜனாதிபதித் தேர்தல் வெற்றிப்பெற செய்ய ராஜித சேனாரத்ன பெரும் பங்காற்றினார்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இதற்கு முன்னர் இலங்கை மக்கள் கட்சி, வெகுஜன சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றில் முக்கிய பதவியை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து மஹிந்தவை அரசாங்கம் காப்பாற்றாது: அமைச்சர் ராஜித
ஊழல் குற்றங்களில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் அவரின் குடும்பத்தினரையும் காப்பாற்றுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் எவ்வித உடன்பாடுகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இதனை மறுத்துள்ள ராஜித சேனாரட்ன குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று கூறினார்.
முன்னாள் ஜனாதிபதியும் தற்போது சாதாரண மனிதர் என்ற அடிப்படையில் அவரும் ஏனையவர்கள் போலவே நடத்தப்படுவார் என்றும் அமைச்சர் செய்தித்தாள் ஒன்றுக்கான செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciv1.html

Geen opmerkingen:

Een reactie posten