ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஐ.நா மனித உரிமை ஆணையாளரை சந்திக்க உள்ளார்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 09:10.02 AM GMT ]
அதில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களும் உள்ளக்கப்பட்டுள்ளன.
குறித்த அறிக்கையில் இலங்கையின் மனித உரிமை விசாரணைகள் தொடர்பான முன்னேற்றங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலத்தில் நாட்டின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தி விதம் பற்றி அறிவிக்கையில் விபரிக்கப்பட உள்ளது.
இதனிடையே வெளிநாட்டு விவகாரங்கள் சம்பந்தமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஜயந்த தனபால ஜெனிவா மனித உரிமை ஆணையாளரை சந்திக்க உள்ளார்.
மனித உரிமை ஆணைக்குழு இலங்கை தொடர்பாக நடத்தும் விசாரணைகள் தொடர்பான கருத்துக்களை ஆணையாளருடன் தனபால பரிமாறிக்கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciv7.html
இராணுவ முகாமுக்குள் சென்ற பந்து! குடும்பஸ்தர் மீது இராணுவத்தினர் தாக்குதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 09:17.10 AM GMT ]
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
எள்ளங்குளம் பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் இளைஞர் குழுவினர் உதைப்பந்தாட்டம் விளையாடியுள்ளனர்.
உதைப்பந்தாட்டம் விளையாடியவர்களின் பந்து அருகில் இருந்த இராணுவ முகாமிற்குள் விழுந்துள்ளது.
இதனை எடுப்பதற்காக இராணுவ முகாமுக்குள் சென்ற குடும்பஸ்தர் மீது அங்கு நின்ற இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் இருந்து ஒருவாறு தப்பிய அவர் வீட்டுக்கு ஓடியுள்ளார். நண்பர்களும் ஓடித் தப்பிவிட்டனர்.
தனது மோட்டார் சைக்கிளை மைதானத்தில் நிறுத்தியிருந்த அவர் அதை எடுக்க மீண்டும் சென்றுள்ளார். இதன்போது அவரை பிடித்த இராணுவத்தினர் சரமாரியாக மீண்டும் தாக்கியுள்ளனர்.
இராணுவத்தினரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் குறித்த நபர் ஊறணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதே பகுதியைச் நேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராஜா ஜெகன் (வயது- 29) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் வைத்தியசாலைக்கு சென்ற இராணுவ புலனாய்வாளர்கள் குறித்த நபரை மிரட்டியதுடன், பொலிஸ் முறைப்பாட்டை மீளப்பெற வேண்டுமென எச்சரிக்கை விடுத்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciwy.html
ஆட்சியை கைப்பற்றுமாறு கோத்தபாய இராணுவத்திற்கு உத்தரவிட்டார்: மேர்வின் சில்வா
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 09:22.45 AM GMT ]
எனினும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான தினம் இரவு அலரி மாளிகைக்கு சென்றிருந்தவர்களில் சிலர் கோத்தபாயவின் அந்த உத்தரவை ஏற்க மறுத்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது பற்றி பேசியதாக உதய கம்மன்பில கூறுகிறார். தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நேரத்தில் ஏன் அவசரமாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். ஏன் இந்த குழப்பம்.
மட்டக்குளி ரொக் ஹவுஸ் முகாமிற்கு 3 ஆயிரம் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர். நியூன்ஹெல்ல என்பவரும் புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஒருவரும் அங்கு இருந்தனர்.
சீருடையில் உள்ள பெஜ் மற்றும் தொப்பில் உள்ள பெஜ்களை அகற்றுமாறு இராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அவை இருந்தால், எந்த படைப் பிரிவு என்பதை அடையாளம் கண்டு விடலாம் என்பதே இதற்கு காரணம்.
எனினும் அலரி மாளிகையில் அந்த நேரத்தில் இருந்த சிலர் இராணுவ சதித்திட்டத்தை ஏற்க மறுத்தனர். இந்த சம்பவத்தை உறுதிப்படுத்த சாட்சியங்கள் இருக்கின்றன எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciwz.html
Geen opmerkingen:
Een reactie posten