தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 januari 2015

ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் தேர்தலில் போட்டியிட தடை! பிரதான கட்சிகள் தீர்மானம்

முதலில் பொதுமக்களுக்கு நிவாரணம்! பின்னர் மோசடிக்காரர்கள் கைது! ரணில் தெரிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 01:16.50 AM GMT ]
முதலில் பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்கியதன் பின்னர் முன்னைய அரசாங்கத்தின் மோசடிக்காரர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தெனியாய, பல்லேகம பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிகளை அதிகரித்து கடந்த அரசாங்கம் பொதுமக்கள் மீது பொருளாதாரச் சுமையொன்றை ஏற்றியிருந்தது. ஆனால் அது ஒரு பாரிய தவறான பொருளாதார நடைமுறையாகும்.
அதற்குப் பதிலாக கிராமப்புறங்களின் பொருளாதார பலத்தை அதிகரிக்கும் வகையிலான திட்டங்களின் மூலம் வர்த்தக முயற்சிகளை அதிகரிக்கலாம். இதன் போது அரசாங்கத்துக்கான வரி வருமானம் அதிகரிக்கும். மறுபுறத்தில் நாட்டு மக்களுக்கும் நன்மை கிடைக்கும். இதுதான் இன்றைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையாக உள்ளது.
தற்போதைய நிலையில் நாட்டு மக்களின் பொருளாதாரம் கடந்த அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக சீரழிந்துள்ளது. அதனை முதலில் நிவர்த்தி செய்ய வேண்டும்.
தற்போதைக்கு எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு நேரடியான நன்மைகளை ஏற்படுத்தி உள்ளது. எதிர்வரும் நாட்களில் மேலும் பல பொருட்கள் மீதான வரிகள் நீக்கப்பட்டு, விலைகள் குறைக்கப்படும். அதன் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும்.
அதன் பின்னரே முன்னைய அரசாங்கத்தின் மோசடிக்காரர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKcis1.html
கே.பிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்: அமைச்சர் ராஜித சேனாரத்ன
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 01:27.35 AM GMT ]
ஊழல், மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மோசடி செய்த எவரேனும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருப்பார்களாயின், இனியும் செல்வார்களாயின் அவர்களைக் கைது செய்வது ஒன்றும் கடினமான விடயமல்ல.
சர்வதேச பொலிஸாருக்கு அறிவித்த பின்னர், அவர்கள், அத்தகைய மோசடிக்காரர்களை கைது செய்து நாட்டுக்கு அனுப்பிவைப்பார்கள்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பின் பொறுப்பாளராக இருந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
கே.பிக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர் பல கடவுச்சீட்டுகளை வைத்திருந்தார் என்றும், பத்துக்கு மேற்பட்ட பெயர்களில் நடமாடியுள்ளார் என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKcis2.html
பௌத்த தீவிரவாதமே மஹிந்தவின் தோல்விக்கு காரணம்: நியோமல் பெரேரா
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 01:42.51 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கு பௌத்த தீவிரவாதமே காரணம் என்று முன்னாள் வெளியுறவுத்துறை பிரதியமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச, மூன்றாம் முறையாகவும் தெரிவு செய்யப்பட்டால் பொதுபல சேனா மற்றும் ஏனைய பௌத்த தீவிரவாத அமைப்புக்களால் தமது பாதிப்பு ஏற்படும் என்று சிறுபான்மையினர் பீதிகொண்டிருந்ததாகவும் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போருக்கு பின்னர் அமைதியான வாழ்க்கையையே அனைவரும் எதிர்பார்த்தனர்.எனினும் சிறுபான்மையினர் மத்தியில் தொடர்ந்தும் பீதி நிலை உருவாக்கப்பட்டு வந்தது என்று பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKcis4.html
1200 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த மஹிந்த அரசாங்கம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 02:34.18 AM GMT ]
கடந்த அரசாங்கம் 1200 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக புதிய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த நான்கு ஆண்டு காலத்தில் அரசாங்கம் இவ்வாறு பாரியளவில் பணத்தை மோடி செய்துள்ளதாக புதிய அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளினால் இவ்வாறு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவினை சரியான முறையில் செயற்படுத்தி குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்து தற்போதைய அரசாங்கத்திலும் பதவிகள் வகிக்கும் அமைச்சர்கள் அதிகாரிகள் சிலரும் உழல் மோசடிகளுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த அரசாங்கம் நான்கு ஆண்டுகளில் 1200 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஊழல்களுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பெருந்தெருக்கள், கட்டிட நிர்மானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாரியளவில் மோசடிகள் செய்யப்பட்டுள்ளன.
ஊழல் மோசடியாளர்கள் எவ்வாறு பணத்தை மோசடி செய்துள்ளனர், எவ்வாறான மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKcis7.html
ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் தேர்தலில் போட்டியிட தடை! பிரதான கட்சிகள் தீர்மானம்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 02:46.32 AM GMT ]
ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
குறிப்பிட்ட ஒரு நபருக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு இருந்தால் அவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலீடாக படித்த, மதிநுட்பமானவர்களை தேர்தலில் களமிறக்குவது என பிரதான கட்சிகள் தீர்மானித்துள்ளன.
எதிர்வரும் காலங்களில் ஊழல் மோசடிகளில் ஈடுபட முடியாத வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.
தற்போது ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக விசாரணை நடாத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரதேச சபை உறுப்பினர்கள் முதல் அமைச்சரவை அமைச்சர்கள் வரையில் சகல அரசியல்வாதிகளுக்கும் ஒழுக்கக் கோவையொன்று உருவாக்கப்பட உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKcitz.html

Geen opmerkingen:

Een reactie posten