[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 01:43.15 PM GMT ]
அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்றும் சமவுரிமைக்கான இயக்கம் கேட்டுள்ளது.
சமவுரிமைக்கான இயக்கத்தின் அழைப்பாளர் ரவீந்திர முதலிகே இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில்,
இடம்பெயர்ந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதனைதவிர வடக்கு பிரதேசம் தேசிய பாதுகாப்பின்கீழ் வைக்கப்பட்டுள்ளமையை நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என்பன தேசிய மொழிகளாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும். அதேநேரம் தமிழ் முஸ்லிம் இந்தியன் தமிழர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்தைக் கொண்டு அழைக்கப்பட வேண்டும் என்றும் முதலிகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழர்கள் அவர்களின் தாய்மொழியில் கடமைகளை ஆற்ற அனுமதிக்கப்பட வேண்டும். போரில் தமிழர்கள் இழந்த உடமைகளுக்கான நட்டஈடுகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.
இதேவேளை வடக்கில் இருந்து படையினர் குறைக்கப்பட வேண்டும் என்றும் முதலிகே கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKcir0.html
பாடசாலை அதிபர்களுக்கான இராணுவ பயிற்சி இடைநிறுத்தம்: கல்வியமைச்சர் தகவல்
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 02:01.55 PM GMT ]
குறித்த சுற்றுநிருபம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் சுற்றுநிருபத்தின் அடிப்படையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 4000 பாடசாலை அதிபர்களுக்கு இராணுவ முகாம்களில் வைத்து தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதனை பலரும் இராணுவமயத்திட்டம் என்று வர்ணித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKcir1.html
இனப்பிரச்சினைக்கான தீர்வு! மங்களவின் கூற்றை ஆதரிக்கும் சுமந்திரன்
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 02:58.03 PM GMT ]
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, இனப்பிரச்சினை தீர்வுக்காக எடுத்த அதிக முயற்சி தொடர்பிலேயே சுமந்திரன் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண ஏற்கனவே நல்லிணக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
திம்பு யோசனை, மங்கள முனசிங்கவின் யோசனை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் யோசனை போன்றவை அதில் அடங்குகின்றன.
இந்தநிலையில், இனப்பிரச்சினை தீர்வுக்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் கண்டுபிடிப்பு அவசியம் இல்லை என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மங்கள சமரவீரவின் இந்தக்கருத்துக்கு தாம் முழுமையாக உடன்படுவதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனைகளை ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKcir2.html
Geen opmerkingen:
Een reactie posten