[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 05:22.18 AM GMT ]
தேர்தலை அண்மிக்கும் நாட்களில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரி பக்கம் மாறும் நிலைமைகள் தொடரும் அரசியலின் அதிரடி மாற்றத்தை லங்காசிறி வானொலியின் தேர்தல் கள சிறப்பு ஆய்வில் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbms6.html
பழிவாங்கும் ராஜபக்சவை தோற்கடிப்பதே எமது நோக்கம்! சந்திரிகா
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 06:35.02 AM GMT ]
மாத்தளை மாவட்ட எம்.பி.யும் பிரதி அமைச்சருமான நந்திமித்திர ஏக்கநாயக்க எதிரணியுடன் இணைந்து கொள்ளும் ஊடகவியலாளர் மாநாடு அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.
பழிவாங்கல் அரசியல் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச பிரசார கூட்டங்களில் எம்மீது பழி போடுகிறார். பழிவாங்கல் அரசியல் தொடர்பில் நான் அவ்வரசிற்கு கூற வேண்டிய தேவைப்பாடும் கிடையாது.
எம்மிடம் ஒரு போதும் அரசியல் பழிவாங்கல் இருந்ததில்லை. நாம் அவ்வாறு செயற்பட போவதுமில்லை. எனது ஆட்சி காலத்தில் கட்சி சார்ந்த அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்ய நான் ஒரு போதும் அனுமதி வழங்கவில்லை. இவ்வாறு அரசியலை நாம் செய்ய கற்றுக்கொள்ளவில்லை.
எனினும் ஜனாதிபதி கதிரைக்கு மஹிந்த ராஜபக்சவை அமர வைத்தது நானே. எனினும் சுமார் 9 வருடம் எனக்கு செய்யாத அநியாயம் இல்லை. 7 வருடம் என்னை நாட்டிற்கு வர இடமளிக்கவில்லை.
இவ்வாறு என்னை பழிவாங்கியது ராஜபக்சவினரே. எனவே பழிவாங்கல் அரசியல் ராஜபக்ச குடும்பத்தினரிடமே உள்ளது.
இந்நிலையில் நாட்டு மக்களை பழிவாங்கும் ராஜபக்சவை தோற்கடிப்பதே எமது நோக்கம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmt4.html
வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது: மைத்திரிபால
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 06:38.24 AM GMT ]
தன் நிர்வாகத்தில் வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது என்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வடக்கின் இராணுவ முகாம்கள் அனைத்தும் நீக்கப்படும் என்று பொய்யான பரப்புரையை அரசாங்க தரப்பினர் மேற்கொண்ட வருகின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களுக்கு ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, இவ்வாறான பொய்யான பிரசாரங்களை செய்து வருகின்றனர். இவை முற்றாக பொய் என தெரிவித்தார்.
அதே வேளை கட்டான பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இந்நாட்டின் இன்று நடுத்தர வர்க்கத்தினர் அழுத்ததிற்கு உள்ளாகியுள்ளனர்.
மைத்திரியின் ஆட்சியில் அவர்களை அழுத்ததிலிருந்து விடுதலை பெற செய்வோம் என்று தெரிவித்தார்.
வடக்கில் இராணுவ முகாம் அகற்றப்பட மாட்டாது! மத நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும்: புத்தளத்தில் மைத்திரி
வடக்கில் இருக்கும் எந்த இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஆனால், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து பணியாற்றக் கூடிய சூழல் உருவாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
புத்தளத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இன, மொழி மத பேதமின்றி புதிய அரசாங்கம் ஒன்றின் தேவை குறித்து மக்கள் பேசி வருகின்றனர். அதற்காக மக்கள் ஒன்றுப்பட்டுள்ளனர்.
பொது விடயங்கள் காரணமாக சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கி மக்கள் அரசாங்கம் மாற வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனர்.
வடக்கு கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், கட்சிகள், முஸ்லிம்கள் கட்சிகள் மாத்திரமின்றி ஜாதிக ஹெல உறுமய கட்சியும் போன்ற தென் பகுதி கட்சிகளும் பொது எதிரணிக்கு ஆதரவு வழங்கி எமது அணியுடன் இணைந்துள்ளன.
நாட்டின் இன்றைய அரசாங்கத்தை போல் நாட்டின் வரலாற்றில் எந்த நாடும் பொது மக்களின் பணத்தை கொள்ளையிடவில்லை.
நாட்டில் மேற்கொள்ளப்படும் பாரிய அபிவிருத்தித்திட்டங்களில் 50 வீதம் கொள்ளையிடப்பட்டு வருகிறது. கடந்த 10 வருடங்களில் எந்தளவு பணத்தை அரசாங்கத்தில் இருப்பவர்கள் கொள்ளையிட்டு இருப்பார்கள் என்பதை உங்களால் கணக்கிட முடியாது எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten