தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 januari 2015

உடன்படிக்கைகள் இல்லை! வேலைத்திட்டம் மட்டுமே உள்ளது: மைத்திரிபால

வெளிநாட்டில் பணிபுரிந்த இராணுவ அதிகாரிகள் தேர்தல் பணிகளுக்கு அழைப்பு
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 06:36.30 AM GMT ]
பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய வெளிவிவகார அமைச்சு பல நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் பாதுகாப்பு சம்பந்தமான அதிகாரிகளாக நியமித்துள்ள இராணுவ அதிகாரிகள் பலர் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ராஜபக்ஷவினருக்கு ஆதரவான இந்த அதிகாரிகள் பலர் இலங்கை வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலி்ல் தோல்வியடைந்த பின்னர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கைது செய்து சிறையில் அடைத்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, பிரிகேடியர் கிறிஸ்ஷான் சில்வா, பிரிகேடியர் விஜேசிறி ஆகியோர் இதில் பிரதான அதிகாரிகளாவர்.
இராணுவம் 100 வீதம் மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கான முனைப்புகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbktz.html
மைத்திரியின் வெற்றி நிச்சயம்! சுயாதீன சோதிடர்கள் சங்கம்
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 06:44.20 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் என சுயாதீன சோதிடர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சோலிஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சங்கத்தின் சோதிடர்களான நாத்தாண்டியே பீ.டி. பெரேரா, காமினி புளத்சிங்கள, கே.ஏ.யூ. சரத்சந்திர ஆகியோர் இதனை கூறியுள்ளனர்.
2014 ஆம் ஆண்டின் இறுதி ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும் எனவும் பெண் ஒருவர் இதற்கு தலைமையேற்பார் என்றும் எதிர்பாராத நபர் ஒருவர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவார் எனவும் நாம் கூறிய சோதிட எதிர்வுகூறல் உண்மையாகியுள்ளதாக நாத்தாண்டியே பீ.டி. பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் சிறிசேன கட்டாயம் வெற்றி பெறுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இங்கு கருத்து வெளியிட்ட காமினி புளத்சிங்கள மற்றும் கே.ஏ.யூ. சரத்சந்திர ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பல ராஜயோகங்கள் இருப்பதாக கூறியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbkt0.html
திருமலையில் தேர்தல் அதிகாரிகள் மீது தாக்குதல்
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 06:51.31 AM GMT ]
திருகோணமலை நகரில் தேர்தல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு 8 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் திரைகள் சிலவற்றை கண்காணிப்பதற்காக உதவி தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் மேற்கொண்டவர்கள் தேர்தல் அதிகாரிகளின் கையடக்கத் தொலைபேசிகளையும் கையகப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்ட இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbkt1.html

ஜனாதிபதி மஹிந்தவிற்காக அமைச்சா் ஆறுமுகன் தொண்டமான் பிரச்சார நடவடிக்கையில்
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 07:23.52 AM GMT ]
மலையகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்யும் முகமாக கடைசி நாளான இன்று  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இன்று பிரச்சார நடவடிகைகள் இடம்பெற்றன.
குறிப்பாக கொட்டகலை, ஹட்டன், நோர்வூட் பொகவந்தலாவ, மஸ்கெலியா, நல்லதண்ணி, அப்கட், அக்கரப்பத்தனை மற்றும் தலவாக்கலை ஆகிய இடங்களுக்கு சென்று பிரச்சார நடவடிக்கைகள் ஈடுப்பட்டனர்.
இப் பிரச்சார நடவடிக்கையில் அமைச்சர் உள்ளிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbkt3.html
உடன்படிக்கைகள் இல்லை! வேலைத்திட்டம் மட்டுமே உள்ளது: மைத்திரிபால
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 07:24.12 AM GMT ]
எவருடனும் தனக்கு எந்த உடன்படிக்கைகளும் கிடையாது எனவும் வேலைத்திட்டம் மாத்திரமே இருப்பதாகவும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
திம்பிரிகஸ்யாயவில் உள்ள பொது வேட்பாளரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டை பிரிக்கும் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
நான் ஆட்சிக்கு வந்தால் நாட்டை பிரிக்க போவதாகவும் ஈழ பிரிவினை மீண்டும் தலைதூக்கும் எனவும் எனது அரசியல் எதிரணியினர் குற்றம் சுமத்துகின்றனர். எனினும் இந்த குற்றச்சாட்டில் எந்த உண்மையுமில்லை.
ஒன்றுபட்ட இலங்கையை பாதுகாப்பேன். ஜனாதிபதியாக தெரிவான பின்னர் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை நான் ஏற்பேன். ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நான் உட்பட எமது அணியினர் வன்முறைகளுக்கு அனுசரணை வழங்காது அமைதியான முறையில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டோம்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 72 மணிநேரமே இருக்கின்றது. வன்முறையற்ற சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அரசியல் எதிரணியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் பொது வேட்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbkt4.html

Geen opmerkingen:

Een reactie posten