[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 07:36.31 AM GMT ]
இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளை வெள்ள நிவாரண உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.
நாட்டின் பல மாவட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த 20 ஆயிரம் குடும்பங்களுக்கான நிவாரண உதவிப் பொருட்களுடன் கொழும்பிலிருந்து புறப்பட்ட வாகனத் தொடரணி குறித்த மாவட்டங்களைச் சென்றடைந்துள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார், திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய எட்டு மாவட்டங்களில் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த 20 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த நிவாரண உதவிப் பொருட்கள் நாளை காலை முதல் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
அரிசி, பருப்பு, சீனி, தேயிலை, பதப்படுத்தப்பட்ட மீன், பால்மா, பிஸ்கட் மற்றும் குழந்தைகளுக்கான பால்மா அடங்கலான உலர் உணவுப் பொதியொன்றும், சவர்க்காரம், பற்பசை, நுளம்புச் சுருள்கள், டெட்டோல,; பவுடர், சீப்பு மற்றும் பெண்களுக்கான சானிடரி நாப்கின்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய சுகாதாரப் பொதியொன்றும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், படுக்கை விரிப்புக்கள், துவாய் மற்றும் நுளம்பு வலை ஆகிய அத்தியாவசியப் பொருட்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியேற்பட்டதுடன், தற்காலிகமாக வேறு இடங்களில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மல்வத்து ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக மன்னார் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் கிராமம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியது. மேலும், மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்திலும் கிட்டங்கி வீதி உட்பட பல வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியதுடன், பல குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பாடசாலைகளிலும், பொது மண்டபங்களிலும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் வெள்ளம் காரணமாக பலர் வீடுகளை விட்டு வெளியேறி இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்க நேரிட்டது.
கந்தளாய் - சேருவில மற்றும் திருகோணமலை - மட்டக்களப்பு ஆகிய வீதிகள் வெள்ளப்பெருக்கினால் தற்காலிகமாக மூடப்பட்டன. மேலும், கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகளும் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த எட்டு மாவட்டங்களிலும் அண்மையில்; ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்கள் பல்வேறு இடர்களைச் சந்திக்க நேர்ந்ததுடன், பல குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் பல நாட்கள் தங்க நேரிட்டது.
அவர்களின் துயர் துடைக்கும் வகையிலேயே லைக்கா ஞானம் அறக்கட்டளை நிவாரண உதவிப் பொருட்களை வழங்குவதற்கு தீர்மானித்தது. லைக்கா மொபைல் நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா, பிரதித் தலைவர் பிரேம் சிவசாமி மற்றும் ஞானம் அறக்கட்டளையின் தலைவர் ஞானாம்பிகை அல்லிராஜா ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த வெள்ள நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
லைக்கா ஞானம் அறக்கட்டளையானது இதற்கு முன்னரும் மக்களுக்கு தேவையேற்படும் பல்வேறு சந்தர்ப்பங்களில் உதவிக்கரம் நீட்டியுள்ளது. இலங்கையின் 8 மாவட்டங்களில் கிளைகளைக் கொண்டுள்ள லைக்கா ஞானம் அறக்கட்டளை, இதுவரை சுமார் 3 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியிலான உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbkt5.html
குழந்தைகளைத் தாக்கிய இராணுவ மிருகங்கள்: மூச்சு விடத் தவிக்கும் குழந்தை
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 07:45.30 AM GMT ]
இதை கண்ட இந்தப்பிள்ளைகளின் மாமனாரான சந்திரகுமார் என்பவர் இராணுவத்தினரிடம் இந்தச்சம்பவத்துக்கு நியாயம் கேட்டபோது அவர் மீது இராணுவம் மிகமோசமான தாக்குதலை நடாத்தியது.
இதனால் அவரின் தலையில் காயங்கள் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது. இந் நிலையில் அப்பகுதி மக்கள் இராணுவத்தின் இந்த அடாவடித்தனத்துக்கு எதிராக திரண்டனர்.
இந் நிலையில் பாரதிபுர இராணுவ அதிகாரிகள், தாக்குதல் நடத்திய இராணுவச்சிப்பாய்க்கு மூளை சுகமில்லை பைத்தியம் என கதையை முடிக்க முற்பட்டுள்ளனர்.
மகிந்த ராஜபக்சவின் அடாவடித்தன இராணுவத்தின் இந்த மிலேச்சத்தனத்தால் அப்பகுதி ஏழை மக்கள் கொதிப்பும் அச்சமும் அடைந்துள்ளனர்.
முன்பு 90களில் கிளிநொச்சி ரயில் நிலையத்தில் இப்படித்தான் இராணுவச்சிப்பாய் துப்பாக்கிப்பிரயோகம் செய்த நிலையில் அந்த இராணுவத்துக்கு பைத்தியம் என கதையை முடித்தது அரசாங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
(இரண்டாம் இணைப்பு)
கிளிநொச்சியில் இரு சிறுவர்கள் மீது இராணுவ சிப்பாய் தாக்குதல்!
கிளிநொச்சியில் இரு சிறுவர்கள் மீது இராணுவ சிப்பாய் தாக்குதல்!
கிளிநொச்சி- பாரதிபுரம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் மீதும் சிறுவர்களின் மாமன் மீதும் படைச்சிப்பாய் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் குறித்த இரு சிறுவர்களும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் காயமடைந்த சிறுவர்களின் தயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நேற்றய தினம் மாலை 3.30மணியளவில் எனது பிள்ளைகளான பி.பிருந்தா(6வயது) பி.கிருஷாந்த் (வயது2) இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வீதியினால் வந்த படைச்சிப்பாய் ஒருவர் என் மகளுக்கு அடித்தார். பின்னர் மகனுக்கும் அடித்து கீழே தள்ளியதுடன் காலால் மிதித்துக் கொண்டு நின்றுள்ளார். இதனை வீட்டுக்கு முன்னால் நின்றிருந்த பிள்ளைகளின் மாமனார் பார்த்துவிட்டு எதற்காக பிள்ளைகளை அடிக்கிறீர்கள்? என கேட்டதற்கு அவர் மீது தகர வாளியினால் அடித்துள்ளார்.
இதனால் அவர் தலையில் படுகாயமடைந்தார். பின்னர் எங்கள் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் ஊடாக உடனடியாக படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்கள் வந்து குறித்த சிப்பாயை பிடித்து இழுத்துச் சென்றனர். பின்னர் சிறுவர்களையும், தம்பியையும் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றோம்.
மேலும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கும் சென்று முறைப்பாடு கொடுத்திருந்தோம். இந்நிலையில் நேற்றய தினம் இரவு எங்கள் வீட்டிற்கு வந்த படையினர் நாங்கள் கொடுத்த முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தினர். அதேபோன்று என் தம்பியையும் அவர்கள் அச்சுறுத்தினர். இதனால் இன்று நாங்கள் முறைப்பாட்டை வாபஸ் பெற்றோம்.
ஆனால் அடித்த படைச்சிப்பாய்க்கு மனநோய் எனக்கூறி தாங்கள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பியிருப்பதாக கூறியிருக்கின்றார்கள். எனக்கு கணவர் இல்லை. தனியாக வாழ்கிறேன். என் 2 வயது மகன் மூச்சு விட முடியாத நிலையில் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbkt6.html
பண மோசடி செய்த கணவன் மனைவி கைது
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 07:53.56 AM GMT ]
இவர்கள் ராகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள், கொச்சிக்கடை பிரதேசத்தை சேர்ந்தவர்களிடம் இவ்வாறு பணத்தை மோசடி செய்துள்ளனர்.
பணத்தை திருப்பி கொடுக்காத காரணத்தில் பணத்தை கொடுத்தவர்கள் அது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து இவர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில், ராகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று மகர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbkt7.html
கூட்டமைப்பின் முடிவுக்கு முன்னரே மக்கள் மைத்திரியை தீர்மானித்து விட்டனர்: பா.அரியநேத்திரன்
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 07:59.33 AM GMT ]
தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கும் முன்னரே வடகிழக்கு மக்கள் அவரை ஆதரிப்பதாக தீர்மானித்து விட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறியுள்ளார்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தொகுதி மக்களுக்கு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரமானது களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான நடராசா, கருணாகரம், கிருஸ்ணபிள்ளை, துரைராஜசிங்கம், துரைரெட்ணம், பிரசன்னா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை, மற்றும் கட்சி உயர்மட்ட உறுப்பினர்கள் தொண்டர்கள் இளைஞர் அணித்தலைவர் கி.சேயோன் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,
இந்த நாட்டிலே 1982ஆம் ஆண்டு முதன்முறையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து 6 தடவைகள் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது, 7வது தேர்தலை சந்திக்கின்றோம். இந்த நாட்டிலே 65 வருடகாலமாக தமிழ் மக்களின் விடுதலைக்காக சமாதானத்திற்காக நிம்மதிக்காக பல முயற்சிகளை முன்னெடுத்தும் 6 தடவைகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் எதுவும் செய்யவில்லை.
இரண்டு தடவைகள் ஆட்சில் இருந்த மகிந்த ராஜபக்ச மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தும் தமிழர்களுக்கான தீர்வினை வழங்காது அதனைத் தட்டிக்கழித்திருக்கிறார்.
நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் அதனைச் செய்திருக்க முடியும். இவ்வாறான நிலையில் 7 வது தடவையாக ஜனாதிபதித் தேர்தல் வந்திருக்கின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ போட்டியிட்டார். எதிரணியில் சரத் பொன்சேகா போட்டியிட்டார்.
அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலதடவை ஆராய்ந்து சரத் பொன்சேகவை ஆதரிப்பது என இறுதி முடிவுக்கு வந்தது. அது என்னவெனில் இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்களும் சுமார் 40 ஆயிரம் மாவீரர்களையும் மண்ணில் படுகொலை செய்த அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்கவே முன்வந்தோம்.
அந்த முடிவினை வடகிழக்கு மக்கள் தனித்துவமான இனத்தைச்சார்ந்தவர்கள் தனித்துவமான நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவுக்குப் பின்னால் வந்து வாக்களித்தார்கள்.
இதன் பின்னர் என்ன செய்தியைச் சொன்னது என்றால் தென்பகுதி மக்கள் மகிந்த ராஜபக்சவை ஆதரித்து இருக்கு அதேவேளை வடகிழக்கு மக்கள் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கவில்லை என்ற செய்தியாகும்.
இதனால் மகிந்த அரசிடம் சர்வதேசம் சொன்னது யுத்தத்தினை வென்றீர்கள். சமாதானம் வந்துள்ளது என்கிறீர்கள் தமிழ் மக்களின் மனங்களை வென்றுள்ளதாக மார்பு தட்டிப் பேசுகின்றீர்கள் இவ்வாறான நிலையில் வடகிழக்கு மக்கள் உங்களை ஆதரிக்கவில்லை என்னும் செய்தியாக இருந்தது.
எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என தமிழ்க் கூட்டமைப்பு பலதடவை கூடி ஆராய்ந்த போது மூன்று விதமான கருந்து வந்தது.
அதில் ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக ஒருவரை வேட்பாளராக நிறுத்துதல், மற்றையது தேர்தலை பகிஸ்கரித்தல் இறுதியாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தல் ஆகிய முடிவுகளே சொல்லப்பட்டதே தவிர யாரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க வேண்டும் என கூறவில்லை.
வடகிழக்கு மக்களின் கருத்தும் இதுவாக இருந்தது. ஆதலால் கட்சியின் அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை கருத்துக்கேட்டு ஏகோபித்த முடிவாகவே எமது தலைமை இம்முடிவை எடுத்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்க முன்னரே வடகிழக்கு மக்கள் மைத்திரிபாலவை ஆதரிப்பதாக தீர்மானித்து விட்டார்கள்.
அதன் பின்னர் தான் நாங்கள் சொல்ல வேண்டிய கருத்தை அறிவித்து இருக்கின்றோம். இந்தத் தேர்தலில் வெளிப்படையாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்தமையால் தென்னிலங்கை மக்களிடையே இனவாதம் விதைக்கப்படலாம் என்ற கருத்துகளும் பலர் எங்களிடம் கூறியிருந்தார்கள்.
வெளிப்படையாக அறிவிக்காவிட்டால் இன்று சர்வதேச அரங்கில் எங்களது பிரச்சினை சென்றிருக்கிறது. சர்வதேச ரீதியாக தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தும் ஓங்கி நின்றிருக்காது.
இந்த நேரத்தில் தேர்தலின் பின்னர் எமது பிரச்சனை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் போது இது எமக்கு சாதகமாக அமையும். அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்லை, முன்னாள் போராளிகள் வீட்டில் நிம்மதியாக வாழ முடியாத நிலை, வடகிழக்கில் எத்தனையோ கணவன்மார் கொலை செய்யப்பட்டமையால் பலர் விதவைகளாக இருக்கின்றார்கள்.
வடகிழக்கில் அத்துமீறிய குடியேற்றங்கள் இடம்பெறுகிறது. இவற்றையெல்லாம் செய்துவிட்டு தமிழ் மக்களிடம் வாக்குக்கேட்டு வருகிறார். இந்த அட்டுழியங்களை செய்த மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbkuy.html
எமது கட்சி மைத்திரியை தன்னிச்சையாக ஆதரிக்கவில்லை, மாறாக எமது மக்கள் மகிந்த ராஜபக்சவை மூன்றாவது முறை ஜனாதிபதியாக்கக் கூடாது என்பதில் தீவிரத்துடன் உள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கட்சிக்குள் குழப்பமா? மைத்திரியை ஆதரிப்பது ஏன்? வெளிவராத் தகவலுடன் எம்.எ.சுமந்திரன் பா.உ
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 01:32.14 AM GMT ]
மேலும் மைத்திரியின் ஆட்சியில் பங்கெடுப்பதா? இல்லையா? என்பது பற்றியும், லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விபரிக்கிறார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbkr2.html
Geen opmerkingen:
Een reactie posten