தீர்மானத்தை பகிரங்கமாக அறிவித்தும் விட்டது. ஆனால் கூட்டமைப்பின் இத்தீர்மானத்தை சிலர் விமர்சித்தும் வாதப் பிரதிவாதங்களை முன்வைத்தும் வருகின்றார்கள்.
ஆனால் விமர்சனம் செய்பவர்கள், மற்றும் கூட்டமைப்பின் இந்தத் தீர்மானத்தை எதிர்ப்பவர்களைப் பார்த்தோமானால் அரசுக்கு விசுவாசமானவர்கள் மற்றும் இந்த அரசை எப்படியாவது வெற்றியடைய வைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் என்பது மட்டும் நன்றாகவே தெரிகின்றது.
வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் உட்பட வடகிழக்கிற்கு வெளியில் வாழும் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு ,ஆதங்கம், நோக்கம்,ஆசை என்பது ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதே.
அதில் மாற்றுக் கருத்துக்கு துளியளவும் இடமில்லை. ஆனால் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒருசில தமிழ் பேசும் தலைகள் அரசுக்கு ஆதரவாக நின்றாலும் அந்தத் தலைகளுடன் மக்கள் இல்லை.
எவர் வந்து அரசுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டாலும் மக்கள் இந்த அரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அந்தளவு மக்கள் இந்த ஆட்சியின் மீது வெறுப்படைந்துள்ளார்கள் என்பதுதான் உண்மை. மக்களின் விருப்பத்தைத்தான் தமிழ் கூட்டமைப்பு தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது.
தமிழ் மக்களுக்கான முடிவுகளை தமிழ் மக்கள்தான் எடுக்க வேண்டும் என்று தந்தை செல்வா சொல்லியிருந்தார். அதைத்தான் புலிகளின் தலைவரும் சொல்லியிருந்தார்.
அப்படித்தான் வாழ்ந்து காட்டினார்கள்.தமிழ் மக்களின் தலைமைகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மறைந்த ஊடகவியலாளான சிவராம், நடேசன் அவர்களின் அயராத முயற்சியின் பயனாக உருவானதுதான் தமிழ் கூட்டமைப்பு.
அந்த வகையில்தான் கடந்த காலத் தேர்தல்களில் தமிழர்கள் ஒற்றுமையாக செயல்படவும் வாக்களிக்கவும் முடிகின்றது. ஆனால் அந்த ஒற்றுமையைக் குழப்பவும் தமிழ் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குழப்பவும் சிலர் கிளம்பி விட்டார்கள். இந்த அரசை வெல்ல வைக்கும் உள்நோக்கம் கொண்டு செயல்படுகின்றார்கள்.
சிலர் சொல்வது போன்று தமிழ் மக்கள் தமிழ் வேட்பாளரை நிறுத்தி தமிழ் மக்கள் தமது எதிர்;பைக் காட்ட வெண்டுமாம். அதில் என்ன இராஜதந்திரம் உள்ளது.
இராஜதந்திரம் என்பது மக்களை அடகு வைப்பதல்ல. மாறாக தமது மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியவாறு வெயல்படுவது. அதைத்தான் தமிழ் கூட்டமைப்பு செய்துள்ளது.
தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல தமிழ், முஸ்லிம். சிங்கள மக்களுக்கும் நன்மை பயக்கும் தீர்மானத்தை தமிழ்; கூட்டமைப்பு வரலாற்று ரீதியாக நிறைவேற்றியுள்ளது.
ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்
நாட்டின் ஒட்டு மொத்த ஆட்சி அதிகாரங்களும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருப்பதை சிங்கள மக்களும் விரும்பவில்லை.
சிங்கள புத்தி ஜீவிகள் கூட இந்த அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உள்ளார்கள். மைத்திரி சிங்கள மக்களையும் சிங்கள கடும் போக்காளர்களையும் மீறி தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யமாட்டார் என்பது வேறுகதை.
இருந்தாலும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தற்போதைய அரசு போன்று செயல்படமாட்டார் என்ற எதிர்பார்ப்பு நிறையவே உள்ளது.
அத்துடன் சிறையில் வாடும் தமிழ் இளைஞர்கள் ஒரு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பெறக் கூடிய அதிக வாய்ப்புள்ளது.வடக்கில் காணி அபகரிப்புக்கள் குறைவதற்கான வாய்ப்புள்ளது.
சிங்களக் குடியேற்றங்கள் குறைவதற்கான அதிக வாய்ப்புள்ளது. அத்துடன் சர்வதேச விசாரணை ஒன்று நடக்கக் கூடிய அதிக வாய்ப்புள்ளது. இப்படியாக மக்களின் சில எதிர்பார்ப்புக்களாவது நிறைவேறக் கூடிய அதிக வாய்ப்புள்ளது.
தமிழர்கள் முஸ்லிம்கள் மீதான இனவிரோதத் தாக்குதல்கள் என்பது இன்று நேற்று உதித்ததல்ல.1919 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகின்ற ஒரு கடினமான போக்கு இந்தக் கடினமான போக்கை நாளை வருகின்ற மைத்திரியிடமிருந்து முற்று முழதாக எதிர்பார்க்க முடியாது.
ஆனால் நம்மிடம் இருக்கின்ற கோவணத்தையாவது காப்பாற்ற வேண்டாமா இந்த அரசு தொடர்ந்து ஆட்சியிலிருக்குமானால் அடுத்து வரும் 6 வருடங்களுக்கும் சிறுபான்மை மக்கள் மிகவும் அதிகமான சொல்லொண்ணாக் கஷ்டங்களுக்கு உள்ளாக்கப்படலாம்.
மக்களின் நிலைப்பாடே கூட்டமைப்பின் நிலைப்பாடு
ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தமிழ் முஸ்லிம் மக்கள் மிக அதிகமாக விரும்புகின்றார்கள். மூன்றாம் முறையாக மஹிந்தர் ஜனாதிபதியாகக் கூடாது என்பதில் குறியாக உள்ளார்கள்.
பொதுவாக சிறுபான்மையினம் ஆட்சி மாற்றத்தையே விரும்புகின்றது. தமிழ் மக்களின் ஏகோபித்த முடிவாகவும் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் விருப்பத்தையே கூட்டமைப்பின் தீர்மானமாக பொது எதிரணி வேட்பாளர் மைத்திரியை ஆதரிப்பதாக தீர்மானித்துள்ளது.
கூட்டமைப்பின் இந்தத் தீர்மானத்தை தமிழ் மக்களும் புலம்பெயர் மக்களும் புத்திஜீவிகளும் வரவேற்றுள்ளார்கள். இந்த நிலையில் சில சில்லறைகள் இந்த அரசை வெல்ல வைப்பதற்காக தமிழ் மக்கள் இந்தத் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்கின்றார்கள். இது மஹிந்தரை வெல்ல வைப்பதற்காக மஹிந்தருக்க அதரவாக செயல்படுகின்றார்கள்.
வடக்கில் அடக்கு முறையின் உச்சகட்டம்
மிகவும் மோசமான யுத்தத்தினால் இடம் பெயர்ந்துள்ள லட்சக் கணக்கான தமிழ் மக்கள் இன்னும் மீள்குடியேறற்ம் செய்யப்படவில்லை, வீடுகள் வாழ்வாதாரங்கள் இன்னும் செய்யப்படவில்லை.
மக்களின் காணிகள் இன்னும் இராணுவப் பிடியில் உள்ளது. வடக்கில் இன்னும் இராணுவச் சோதனைச் சாவடிகள், இராணுவச் சோதனைகள் தீரவில்லை.வடக்கு வாழ் மக்களை இந்த அரசு தனது இராணுவப் பிடிக்கள் வைத்துக் கொண்டு இராணுவ ஆட்சி நடத்துகின்றது.
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டள்ளதாக அரசு சொன்னாலும் தமிழ் மக்கள் மீதான யுத்தத்தை இன்னும் இந்த அரசு முடிக்கவில்லை.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களின் வழிபாட்டத் தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தும் அரசின் படைகளுக்கும் குழுக்களுக்கும் ஊக்கமளித்து வேடிக்கை பார்க்கின்றது.
இந்த நிலையை தேர்தலைப் பகிஷ்கரிக்கச் சொல்பவர்கள் விரும்புகின்றார்களா. தமிழ் மக்களுக்கு நல்லது நடக்க இவர்கள் விரும்பவில்லையா?
உச்ச நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களும் சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலையுள்ளது.இந்த அரசில் நாடாளுமன்றம் மதிப்பிழந்து போயுள்ளது.
பணத்தைக் காட்டி எதிர்க்கட்சி எம்பிக்களை விலைபேசி தன்பக்கம் இழுத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்று அதனைப் பயன்படுத்தி நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அரசியலைப்புச் சட்ட திருத்தங்களைச் செய்து ஒட்டு மொத்தக் குடும்ப ஆட்சி நடக்கின்றது.ஆனால் இன்று மைத்திரியின் வருகைக்குப் பின்பு நாடாளுமன்றம் பெரும்பான்மை இழந்த வெறிச்சோடிக் கிடக்கின்றது.
நீதித் துறை அரசின் கட்டுப்பாட்டில்
அரசியலமைப்பின் 17 ஆவது சட்டதிருத்தத்தை மாற்றியதன் மூலம் உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், நீதிச் சேவை ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு, லஞ்ச ஆணைக்குழு,அகிய சகல துறைகளிலும் அரசின் அதிகாரமும். நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரமும் தலைவிரித்தாடுகின்றது.
இது நாட்டுக்கும் மக்களுக்கும் மிகப் பெரிய கேடுகளையும் ஆபத்தையும் விளைவித்து வருகின்றது. இந்த அமைப்பு முறைகள் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தகவல் பரிமாறும் சுதந்திரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றது.
தமிழர்களுக்கு விரோதமான அரசு
இந்த அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே செயல்படகின்றது. விசேடமாக தமிழர்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகின்றது.
இந்தத் தேர்தல் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அதிகாரம் முறைமை ஒழிக்கப்பட்டு 18 ஆவது சட்ட திருத்தத்தை நீக்கி, சட்டம், ஒழுங்கு நிலைநிறுத்தும் உன்னதமான நோக்கில்தான் மைத்திரியை ஆதரிப்பதென தமிழ் தேசியக் கூட்டணி தீர்மானித்துளள்து.
இது தப்பா? இந்த தீர்மானத்தைத்தான் சிலர் அரசியல் தந்திரம் தெரியாமல்.வெற்றியின் யுக்தி தெரியாமல் இந்தத் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டுமாம்.
மைத்திரியின் ஆட்சியில் தமிழ் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கும். தமிழ் மக்களுக்கு நன்மைகள் கிடைக்கக் கூடிய பேச்சுவார்த்தைகளை கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளரிடம் பேசியுள்ளதாக அறியப்படுகின்றது.
ஆனால் சிங்கள மக்களிடம் இனவெறியை இந்த அரசு ஏற்படுத்தி மைத்திரிக்கான ஆதரவைத் தட்டிப்பறிக்கப் பார்க்கின்றது. அதனால்தான் கூட்டமைப்பு சில விடயங்களை பகிரங்கமாக சொல்ல முடியாமல் உள்ளது.
யுத்தம் முடிந்த பின்னரும் இலங்கையின் உண்மை நிலைகளை உலகத்திற்கு மறைத்து மனித உரிமைகளை நிலை நிறுத்தி நாட்டில் இனவேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் சரிசமமாக வாழும் நிலையை மைத்திரி உருவாக்கித் தருவார் என்பதை நம்புவோம்.
நாட்டில் என்றுமில்லாத அளவுக்கு மஹிந்தரை தோற்கடிப்பதற்காக தமிழ் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் உட்பட 49 கட்சிகள் ஆதரவோடு மைத்திரி களமிங்கியுள்ளார்.
இந்தத் தேர்தலில் மஹிந்தரை தோற்கடிக்கவில்லையென்றால் நாட்டுக்கு விடிவு கிடைக்காது. என்பதுடன் தமிழ் மக்கள் உட்பட கூட்டமைப்பு .மற்றும் பொது எதிரணி அரசியல்வாதிகள் மிக அதிகமாக மஹிந்த அரசினால் பழிவாங்கப்படும் அதிக வாய்ப்புள்ளது.
சிறுபான்மை மக்களுக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு
இந்தத் தேர்தலை சிறுபான்மை மக்கள் தங்களுக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பாகவும் ஒரு இறுதிச் சந்தர்ப்பமாகவும் மைத்திரியை வெல்ல வைக்க என்றுமில்லாதவாறு அணிதிரண்டு வாக்களிக்க வேண்டும்.
இந்த வாய்ப்பை தவற விடுவார்களானால் மஹிந்த குடும்பத்தின் ஆட்சியை எதிர்க்க யாருமே முன்வரமாட்டார்கள் என்பதுடன் இந்த வாழ்வா, சாவா என்ற போராட்டத்தில் மைத்திரியை வெல்ல வைத்து வெற்றிகாண சகல தமிழ் முஸ்லிம் மக்களும் இந்த ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.
எஞ்சியுள்ள கோவணத்தையாவது காப்பாற்றுவோம். மக்களைக் குழப்புவதற்காக வட கிழக்கில் இந்தத் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று சில தமிழ் விரோத சக்திகள் வெயல்படுகின்றது.
இந்த சக்திகளின் தமிழ் விரோத செயல்பாடுகளை தவிடு பொடியாக்கி தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
எம்.எம்.நிலாம்டீன்
mmnilamuk@gmail.com
mmnilamuk@gmail.com
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbkt2.html
Geen opmerkingen:
Een reactie posten