[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 05:10.23 AM GMT ]
கடந்த சில நாட்களாக கொட்டிய கடும் மழை காரணமாக கந்தளாய் தொடக்கம் கிண்ணியா வரையான பகுதிகளின் வெள்ள நீர் குறிஞ்சாக்கேணி பாலம் வழியாக கடலுக்குள் பாய்ந்தது.
பாலத்தினை மூழ்கடித்து வெள்ளநீர் பாய்ந்து கொண்டிருந்த நிலையில், பிரதேச மக்கள் உழவு இயந்திரங்களின் ஊடாக பாலத்தைக் கடந்து கொண்டிருந்தனர்.
இதன்போது உழவு இயந்திரமும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு அதில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பிய சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் தற்போது வெள்ளம் வடிந்து வரும் நிலையில் குறிஞ்சாக்கேணி பாலம் முற்றாக சேதமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக கிண்ணியா , புகாரியடி பிரதேசத்தில் இருந்து குறிஞ்சாக்கேணி வரையான அரைக் கிலோ மீட்டர் தூரத்தைச் சென்றடைவதற்கு காக்காமுனை ஊடாக ஆறுகிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலையில் பொதுமக்கள் அவதியுற்றுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbks1.html
வாக்குச்சாவடிகளில் இரகசிய கண்காணிப்பு கமராக்கள்
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 05:43.39 AM GMT ]
அரசாங்கம் இந்த கமராக்களை மிகவும் சூட்சுமான முறையில் பொருத்தியிருப்பதாக நம்பிக்கையான வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படியான கண்காணிப்பு கமராக்கள் வேறு வாக்குச்சாவடிகளிலும் பொருத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கின்றனரா என்பதை கண்காணிக்கவே இந்த கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbks3.html
ராஜபக்ஷவினர் அமெரிக்க பிரஜைகள்: அனுரகுமார திஸாநாயக்க
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 06:02.04 AM GMT ]
ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு இந்த நாட்டை ஒன்றாக வைத்திருக்கும் தேவையில்லை என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, டளஸ் அழகபெரும, சந்திம ராசபுத்ர இந்த நாட்டில் வாழ வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள் அல்ல.
அவர்கள் அமெரிக்க பிரஜைகள், அவர்களுக்கு அங்கு வீடுகள் உள்ளன. இவர்கள் இலங்கைக்கு வந்து 9 வருடங்களாகிறது.
எனினும் அமெரிக்க குடியுரிமை இரத்துச் செய்யப்படவில்லை. காரணம் வருடாந்தம் இவர்கள் அமெரிக்காவுக்கு சென்று தமது குடியுரிமையை புதுப்பித்து வருகின்றனர்.
இதனால் ஒப்பந்தம் ஒன்றையே நிறைவேற்றி வருகின்றனர். அதில் கிடைக்கும் பணத்தில் அமெரிக்காவில் வீடுகளை போன்ற சொத்துக்களை கொள்வனவு செய்கின்றனர்.
இதனால் ராஜபக்ஷவின் வெற்றி இவர்களுக்கு அவசியமானது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbks5.html
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதே எமது முதல் இலக்கு: ரவி கருணாநாயக்க
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 06:23.53 AM GMT ]
அதுமட்டுமில்லாமல் அதிகாரமிக்க பாராளுமன்ற ஆட்சி முறைமையை ஏற்படுத்துவதுடன் பொலிஸ் பிரிவு சுயாதீனமாக இயங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று தலவாக்கலையில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பமே அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்களான ப.திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் உட்பட பலர் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்த காலத்தில் அதிகாரமற்றவர்களாகவே இருந்தனர்.
ஜனாதிபதி நினைத்திருந்தால் அவர்களுக்கு அதிகாரமிக்க பதவிகளை வழங்கியிருக்கலாம். ஆனால், அவர் அதனை செய்யவில்லை. இந்நிலையில் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் இன்று திடமான எதிரணி உருவாகியுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றவுடன் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை மாற்றுவதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான வீ.இராதாகிருஷ்ணன், ப.திகாம்பரம், பெ. இராஜதுரை ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக மலையக மக்களுக்கு தனி வீடுகளுக்கான 10 பேர்ச் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
இன்று பெருந்தோட்ட மக்களின் வருவாய்க்கு அதிகமாக, பொருட்களின் விலைகள் காணப்படுகின்றன. எனவே பால்மா, அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கவுள்ளோம்.
பதுளையில் தபால் ஊழியர் ஒருவரை அமைச்சர் செந்தில் தொண்டமான் தாக்கியதாக முறைபாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் ஏன் இன்னும் அவரை கைது செய்யவில்லை என கேள்வி எழுப்புகிறேன்.
இலங்கையின் பொலிஸ் பிரிவானது சுயாதீனமாக செயற்பட முடியாத நிலையில் உள்ளமையை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbks7.html
புலம்பெயர் தமிழர்களின் பெயரை பயன்படுத்தி சந்திரிக்காவின் வங்கி கணக்கில் டொலர் வைப்பு
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 06:31.19 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதியின் இந்த வங்கி கணக்கு குறித்து அரச ஊடகங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு சார்பான ஊடகங்கள் மூலம் பெரும் பிரச்சாரத்தை முன்னெடுக்க ராஜபக்ஷ தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புலம்பெயர் தமிழர்கள் முன்னாள் ஜனாதிபதிக்கு உதவி வருவதாக காட்ட அரசாங்கம் முயற்சித்து வருவதாக அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, சந்திரிக்காவின் வங்கி கணக்கில் மாத்திரம் ஏன் வைப்பிலிட வேண்டும் தனது வங்கி கணக்கையும் தேடி அதிலும் வைப்பிலிடுமாறு கூறியுள்ளார்.
அத்துடன் தேர்தல் முடிந்த பின்னர் தவறான வங்கி கணக்கில் வைப்பு செய்ததாக கூறி அந்த பணத்தை திரும்ப பெறக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbkty.html
இலங்கை முன் நாள் ஜனாதிபதி சந்திரிக்காவின், மக்கள் வங்கி கணக்கில் 5,000 அமெரிக்க டாலரை ஒரு புலம்பெயர் தமிழர் வைப்பில் இட்டுள்ளார். இதோ அதற்கான ஆதாரம் என்று கூறி, அவரது வங்கி ஸ்டேட்மன்டை(Bank Statement) மக்களுக்கு காட்ட மகிந்த அரசு திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. இது தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள பரபரப்பு செய்தி என்ன என்று பார்ப்போம்.
5,000 டாலரை சந்திரிக்கா கணக்கில் இட்ட புலம்பெயர் தமிழர் !
தற்போது எதிரணியில் நின்று மகிந்தருக்கு தொல்லை மேல் தொல்லை கொடுத்துவரும், சந்திரிக்காவின் கொட்டத்தை அடக்கி அவரை செயலிழக்கச் செய்ய மகிந்த ராஜபக்ஷ ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார். அது என்னவென்றால், அரசாங்கமே சந்திரிக்காவின் வங்கிக் கணக்கில் 5,000 அமெரிக்க டாலர்களை வைப்பில் இடும். அது புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர் ஒருவரால் அனுப்பப்பட்டது போன்றே அவரது கணக்கில் வைப்பில் இடப்படும். இதன் பின்னர் அவரது பாங்க் ஸ்டேட்மன்டை பிரதி எடுத்து மக்களுக்கு காண்பித்து, சந்திரிக்கா புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்கள், மற்றும் புலிகளோடு தொடர்பில் இருக்கிறார் என்று சிங்களவர் மத்தியில் காட்டுவது.
இத்திட்டம் சில வாரங்களுக்கு முன்னர் போடப்பட்டவேளை ஆழும் கட்சியில் இருந்த நபர் ஒருவர், தற்போது எதிரணிக்கு தாவியுள்ளார். இவரே சந்திரிக்காவுக்கு குறித்த தகவலை வெளிப்படுத்தியும் உள்ளார். இதனால் அலேட் ஆன சந்திரிக்கா தனது வங்கிக் கணக்கை உடனடியாக மூடிவிட்டார் என்றும், வெளிநாட்டு தனியார் வங்கி ஒன்றில்(அமெரிக்க) கணக்கை புதிதாகத் திறந்துள்ளார் என்றும் கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. தேர்தல் நெருங்கிவரும் வேளை, சிங்கள மக்கள் எதிரணிக்குபோடும் வாக்குகளை தடுக்க மகிந்த & கோவினர் எந்த ஒரு கீழ்தரமான செயலிலும் இறங்குவார்கள் என்று நிரூபித்து வருகிறார்கள்.
http://www.athirvu.com/newsdetail/1801.html
Geen opmerkingen:
Een reactie posten