தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 januari 2015

மைத்திரி தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவுள்ளார்: பொன்.செல்வராசா



வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் நிவாரண உதவி!
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 09:19.38 AM GMT ]
வடகிழக்கு மாகாணங்களில் பல உதவிகளை செய்யும் அன்பே சிவம் அமைப்பானது, அம்பாறை மாவட்ட மக்களது துன்பதுயரங்களிலும் பங்கெடுத்து வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருவது பாராட்டத்தக்கவிடயமாகும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் தமிழர் பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க அருள் மிகு சுவிஸ் சூரிச் சிவன் கோயில் சைவத்தமிழ் சங்கம் ,சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கம் சொலத்தூண், கிறங்கன் அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயம், சொலத்தூண் மக்கள் இணைந்து அன்பே சிவம் அமைப்பின் ஊடாக அம்மக்களுக்கான நிவாரணங்களை கிழக்கு மாகாணசபை உறுப்பினரூடாக வழங்கி வைத்தார்கள்.
அதனை ஏற்றுக்கொண்ட கி.மா சபை உறுப்பினர், அம்பாறை மாவட்டத்தில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று கிராமங்களுக்கு ஒரேநாளில் உலர் உணவு பொருட்ளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், வி.கமலதாசன், காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் பாஸ்கரன், பா.புவிராஜ், மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய த.கலையரசன்,
எமது மாவட்டத்திலே அண்மையில் பெய்த கன மழை காரணமாக அனைத்து தாழ் நிலப்பிரதேசங்களும் நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது.
அதன் காரணமாக அப்பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்திருந்தார்கள். இதனை கருத்தில் கொண்ட புலம் பெயர் அமைப்புக்கள் பல இந்த மக்களின் துன்பதுயரங்களில் பங்கு கொண்டு அவர்களுக்கு உடனடி நிவாரணங்களை அங்குள்ள எமது உறவுகளிடம் பெற்று இங்குள்ள மக்களுக்கு அனுப்பி வைத்தார்கள்.
அதனடிப்படையில் அன்பே சிவம் அமைப்பானது அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4 இலட்சம் ரூபாயினை அனுப்பிவைத்து மக்களின் குறைபாடுகளை ஓரளவு தீர்த்து வைத்தார்கள். இவர்கள் அந்த நிதியினை மிகவும் கஸ்டத்தின் மத்தியில் புலம்பெயர் மக்களிடம் சென்று பெற்றே அதனை அனுப்பி வைத்திருக்கின்றார்கள்.
அவர்களால் அனுப்பப்படும் அந்த தொகையினை நாங்கள் உரியவர்களுக்கு ஒப்படைக்க வேண்டியது எங்களது கடமையாகும். அதற்கிணங்க உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதனை பெற்று வழங்கி வருகின்றோம்.
புலம்பெயர் தேசத்தில் எமக்காக அல்லும் பகலும் பாடுபட்டு உழைத்துக் கொண்டு வரும் மக்களை இந்த இடத்தில் நினைவு கோருவது மிக முக்கியமான விடயமாகும்.
இன்று இந்த நாட்டிலே தேர்தல் காலம் என்பதனால் நாங்கள் தேர்தல் நோக்கம் கருதி இதனை மக்களுக்கு கொடுக்கின்றோம் என சிலர் நினைக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. காரணம் எங்கள் மக்கள் நிவாரணங்களுக்காக வாக்குப்பலத்தினை பிரயோகிப்பவர்கள் அல்ல. அவர்கள் தன்மானத்திற்காகவும் உரிமைக்காகவும் என்று அவர்களது வாக்குப்பலத்தினை பிரயோகிப்பவர்கள் என்பதனை உரியவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு தமிழ்மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது பற்றி எமது கட்சித்தலமை பகிரங்கமாகவே அறிவித்திருக்கின்றது. அதனை கருத்தில் கொண்டும் எமது எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் எமது மக்கள் செயற்படுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblw7.html
தேர்தல் பிரச்சாரத்தில் சாதாரண தர மாணவர்கள்! கபே அமைப்பு குற்றச்சாட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 09:30.08 AM GMT ]
ஆளும் கட்சி, சாதாரண தர மாணவர்களை ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஈடுபடுத்தியதாக கபே குற்றம் சுமத்தியுள்ளது.
புத்தம் முந்தல் பிரதேசத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களே இவ்வாறு பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நடன கருத்தரங்கு என்ற பெயரில் இவ்வாறு மாணவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
நேற்று பகல், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரச்சாரத்திற்காக இந்த மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டனர்.
முந்தல் பிரதேச செயலகத்தின் இளைஞர் விவகார அதிகாரியினால் என்.ஏ.8530 இலக்கமுடைய வாகனத்தில் மாணவர்கள் கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblxy.html
ஜனாதிபதி மஹிந்த 54 வீதமான வாக்குகளைப் பெற்றுக் கொள்வார்: சத்லங்கா அமைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 09:33.09 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 54 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்வார் என சத் லங்கா அமைப்பு என்ற அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னணி வகிப்பதாக கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது சத் லங்கா அமைப்பின் உறுப்பினர் கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கல்கலைக்கழகத்தின் புவியியல் பீட பேராசிரியர் ஆர்.எம்.கே ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
நிலையான தொலைபேசிகளின் உரிமையாளர்கள் 41629 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 54.7 வீதமான வாக்குகளைப் பெற்றுக் கொள்வார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 40.02 வீத வாக்குகளைப் பெற்றுக்கொள்வார்.
தொலைபேசி வாடிக்கையாளர்களிடம் ஐந்து கேள்விகள் கேட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு தொடர்பில் 95 வீதமான நம்பிக்கை உண்டு என பேராசிரியர் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblxz.html

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 09:41.22 AM GMT ]
ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்களின் பிரச்சார சுவரொட்டிகள், பதாதைகள் உள்ளிட்டவற்றை அகற்றுமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணையாளர் அலுவலகம் அறிவுரை வழங்கியுள்ளது.
அதே வேளை தேர்தல் பிரச்சார காரியாலயம் 6 ஆம் திகதியுடன் நீக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுவீடாக விநியோகிக்கும் விசேட தினமாக இன்றை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தற்போதும் 90 சதவீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகித்து நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினமும் தங்களுக்கான வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள், 8 ஆம் திகதிக்கு முன்னதாக தங்களின் பிரதேச தபால் நிலையங்களுக்கு சென்று அதனை பெற்றுக் கொள்ள முடியும்.
அதேநேரம் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக அழைக்கப்பட்டிருந்த சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுக்கள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளன.
பொதுநலவாய ஒன்றியம் உட்பட பல நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதிகளை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய நேற்று ராஜகிரிய தேர்தல் காரியாலயத்தில் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
திடமான இலங்கைக்கான தொழில்வல்லுநர்களால் யாழ்ப்பாணத்தில், ஜன. 02 , 2015 இல், ஏற்பாடு செய்யப்பட்ட மொமன்டம் - திடப்படுத்தப்பட்ட தேசம், தொடர்ந்த முன்னேற்றம் - தனியார் துறை மன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பிரதம அதிதீயாக கலந்துகொண்டார்.
ஜனாதிபதி ராஜபக்ஷ் அவர்கள் ஜனவரி 3 ம் திகதி பலாங்கொடையில் கலந்துகொண்ட பிரச்சார கூட்டத்தில்
நுவரெலியா மாவட்ட கினிகத்தேனை பிரச்சார கூட்டத்தில்
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblx0.html

மைத்திரி தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவுள்ளார்: பொன்.செல்வராசா
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 10:00.35 AM GMT ]
மைத்திரி தமிழர்களின் நண்பன் என்றோ தமிழர்களுக்கு அனைத்தும் தருவார் என்றோ நாங்கள் கூறவில்லை. ஆனால் சிங்கள மக்களில் தமிழ் மக்களுக்காக பரிந்துரை செய்பவர்களில் சிலர் இவரை ஆதரிக்கின்றார்கள். எனவே எங்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்று கூறலாம் என த.தே.கூட்டமைப்பின் பா.உ பொன்.செல்வராசா தெரிவித்தார்.
.புதிய ஜனநாயக முன்னணியின் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் தொகுதிகளின் அடிப்படையில் பிரச்சாரக் கூட்டங்கள் நடாத்துகின்றது.
அந்தவகையில் முதலாவது பிரச்சாரக் கூட்டம் கல்குடா தொகுதியில் நேற்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான துரைராஜசிங்கம் அவர்களின் தலைமையில் வாழைச்சேனை வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பாக்கியசெல்வம் அரியநேத்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை, மார்க்கண்டு நடராசா, கோவிந்தன் கருணாகரம், இந்திரகுமார் பிரசன்னா மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கிருஸ்ணபிள்ளை செயோன் மற்றும் பொதுமக்கள் ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
ஒரு நாட்டில் சட்டத்தின் ஆட்சி வருகின்ற போதுதான் இந்த நாட்டில் நல்லாட்சி நிலவும், இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் தலைவர்கள் அரசாங்கத்தில் இருந்து அனுபவித்தது ஏராளம் அது போல் தமிழ் மக்கள் அரசாங்கத்தில் இருந்து அனுபவித்ததை விட முஸ்லிம் மக்கள் அனுபவித்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
அவ்வாறு இருந்த முஸ்லிம் மக்கள் மஹிந்த அவர்கள் மீண்டும் ஜனாதிபதியாக வரக்கூடாது என்பதில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்கள். ஏனெனில் இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதாலேயே அவர்கள் எதிராக இருக்கின்றார்கள்.
சட்டத்தின் ஆட்சி இங்கு இருந்திருந்தால் முஸ்லிம் மக்கள் இன்று எதிராக இருந்திருக்க மாட்டார்கள். கல்குடா தொகுதி என்பது காலம் காலமாக தமிழர்களும் முஸ்லிம்களும் அமைச்சுப் பதவிகளைப் பெற்று அபிவிருத்தி செய்து வந்த தொகுதி. அந்தத் தொகுதியில் முஸ்லிம்கள் இன்று எதிராக நிற்கின்றார்கள் என்றால் அவர்களின் பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்ட போது யார் கைது செய்யப்பட்டார்கள்.
பொதுபலசேனா பள்ளிவாயல்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் போது ஏன் அவர்கள் கைது செய்யப்படவில்லை. றிசாட் அவர்களின் அமைச்சினுள் பொதுபல சேனா அட்டகாசம் செய்தபோது அவர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இவையெல்லாம் இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சியில்லை என்பதற்கு உதாரணமாக விளங்குகின்றன.
இன்று ஜனாதிபதி நான் உங்களில் ஒருவன் என்று கூறுகின்றார். அவ்வாறு கூறுவதற்கு அவருக்கு அருகதையிருக்கின்றதா?.
 இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர். பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் காணிகளை சுவீகரித்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் ஜனாதிபதி எந்த அருகதையில் நான் உங்களில் ஒருவன் என்று கூறுகின்றார்.
எனவே அரசு இப்படிப்பட்ட அடாவடித்தனத்தையே இன்றும் செய்து கொண்டிருக்கின்றது. நாம் எப்படி மஹிந்தவிற்கு வாக்களிக்க முடியும். அதற்காக தேர்தலையும் பகிஸ்கரிக்க முடியாது. 2005ம் ஆண்டு தேர்தலை நாங்கள் பகிஸ்கரித்தமையால் தான் அதன் விளைவுகளை நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.
அன்று நாம் இந்தத் தேர்தலைப் பகிஸ்கரிக்காமல் இருந்திருந்தால் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் பறிபோயிருக்காது.
கோடிக்கணக்கான சொத்துக்கள் உடைமைகளை மக்கள் இழந்திருக்க மாட்டார்கள். அப்படியான ஒரு பகிஸ்கரிப்பினை நாங்கள் செய்ய முடியுமா?
இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் தேவை என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உணர்ந்திருக்கின்றது. தமிழ் மக்கள் உணர்ந்தபின்னர் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உணர்ந்தது. ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதை நினைக்கின்றதோ அதனைத் தான் தமிழர்கள் நடாத்திக் கொண்டு வருகின்றார்கள்.
சென்ற தேர்தலில் பரப்புரைகளை செய்யாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறிய ஒரு வார்த்தையை கேட்டு மட்டக்களப்பு மக்கள் சரத் பொன்சேகா அவர்களுக்கு வாக்கினை அள்ளிக் குவித்தார்கள் அதில் ராஜபக்சவிற்கு எதிராக வாக்களித்ததில் பட்டிருப்பு தொகுதி சரித்திரம் படைத்தது.
எமது தமிழ் மக்களை எந்த முட்டுக் கொடுக்கின்ற அரசியல்வாதிகளாலும் மாற்றிவிட முடியாது. அவ்வாறு அவர்களால் முடியுமாக இருந்தால் சென்ற தேர்தலில் அவர்கள் வெற்றிபெற்றிருப்பார்கள். அந்த நாட்களில் தமிழ் அமைச்சர்கள் செய்யாத அபிவிருத்தி வேலைகள் இருக்கின்றனவா, அவர்கள் மேற்கொண்ட அபிவிருத்தி வேலைகளை தமிழ் மக்களின் அபிலாசைகளையும் கருத்திற் காண்டு மேற்கொண்டிருந்தால் அவர்களின் காலத்தின் பின்னர் ஏன் யுத்தம் இடம்பெற வேண்டும்.
எனவே அபிவிருத்தி வேலை மட்டும் தான் தமிழ் மக்களின் அபிலாசைகள் என்றால் ஏன் இந்தப் போர் மூண்டது.
எனவே அபிவிருத்தி மட்டும் எமது அபிலாசைகள் அல்ல அபிலாசைகள் வேறு அபிவிருத்தி வேறு எமது உரிமை என்பது வேறு இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சி அமைக்கும் அரசாங்கங்களும் அமைச்சர்கள் எமது மக்களையும் எங்களையும் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
தமிழர்களைப் புறக்கணிக்க என்னென்ன முறைகளை கையாள முடியுமோ, அவற்றைக் கையாண்டு தட்டிக்கழிக்கின்ற ஒரு முறையை பின்பற்றுகின்றார்கள். பல பேச்சுவார்த்தைகளுக்குச் சென்றோம் அவர்கள் தானாகவே விலகிக் கொண்டார்கள்.
ஒப்பந்தங்களை செய்தார்கள் பயன் இல்லை. 3 தடவையல்ல 30 தடவையும் ஜனாதிபதியாக வரமுடியும் என்ற 18வது சட்டத்தினை உருவாக்கினார். அந்தளவிற்கு மூன்றில் இரண்டு பலத்தினை வைத்து அரசாங்கத்தினை அடிபணிய வைத்து ஒரு சர்வாதிகார ஆட்சியை மஹிந்த ஆண்டார் என்பதற்கு இவற்றை விட உதாரணம் வேண்டுமா.
இவர் தனது கட்சியின் செயலாளர் தனக்கு எதிராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய தேர்தலுக்கு அவரை தேர்தல் முகவராக தெரிவு செய்திருந்தார். ஆனால் அதில் ஏமாற்றம் வந்தது. சிலவேளைகளில் தமிழ் மக்களுக்கு இது ஒரு நல்ல காலமாக இருக்கலாம். அவற்றை கவனமாக பரிசீலிக்க வேண்டிய பொறுப்பு எமது கையில் இருக்கின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தினை நலுவவிடாதீர்கள் இதனை நலுவ விட்டால் 2005ம் ஆண்டு தேர்தலில் நலுவவிட்டதால் பட்ட பாடுகளை உதாரணமாகக் கொண்டு செயற்பட வேண்டும். மைத்திரி தமிழர்களின் நண்பன் என்றோ தமிழர்களுக்கு அனைத்தும் தருவார் என்றோ நாங்கள் கூறவில்லை.
ஆனால் சிங்கள மக்களில் தமிழ் மக்களுக்காக பரிந்துரை செய்பவர்களில் சிலர் இவரை ஆதரிக்கின்றார்கள். எனவே எங்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்று கூறலாம். இந்த நம்பிக்கை நட்சத்திரத்தினை நாம் இழந்துவிடக் கூடாது ஒரு வாய்ப்பினை கொடுத்துப் பார்ப்போம்.
எனவே எதிர்வரும் தேர்தலில் அன்னத்திற்கு புள்ளடி இட்டு அமோக வேற்றியடையச் செய்வோம். அந்த வெற்றி இந்த நாட்டில் வாழுகின்ற மக்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாரிய பங்களிப்பினை செய்திருக்கின்றது என்பதை உணர்த்தும் வகையில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblx1.html

Geen opmerkingen:

Een reactie posten