தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 januari 2015

மைத்திரி, சந்திரிக்கா மற்றும் பொன்சேகாவுக்கு கொலை அச்சுறுத்தல்

வரலாற்றில் என்றுமில்லாத வகையில் கட்சி தாவல்கள்: அமைச்சர் டியூ. குணசேகர
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 10:11.36 AM GMT ]
அரசாங்கம் மற்றும் எதிரணியில் இருந்து பலர் கட்சி தாவ உள்ளதாக அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.
இன்று இரவு, நாளை மற்றும்  நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களில் இரண்டு பிரதான கட்சிகளை சேர்ந்தவர்கள் கட்சிகளுக்கு தாவ உள்ளனர்.
அத்துடன் இலங்கை வரலாற்றில் நடைபெற்ற தேர்தல்களில் நடக்காத விதத்தில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சரவை அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள் கட்சி தாவியுள்ளனர்.
 இந்த கட்சி தாவல்களின் முடிவு எங்கே என்பதை நான் அறியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளுக்கு தாவுவதன் காரணமாக மக்களின் நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்படாது எனவும் டியூ. குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblx3.html
பதவி விலகுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 10:14.43 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என புதிய தேசிய முன்னணியின் தலைவர் ஜே. கண்டம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாடே தனது மூன்று விருப்ப தெரிவுகள் நாடு என்றால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சர்வாதிகாரத்திற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன.
இதன் காரணமாக இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாகவும் கண்டம்பி கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblx4.html
மகிந்தவை குடும்பத்தினரே அழித்தனர்: மேர்வின் சில்வா
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 10:25.54 AM GMT ]
எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு பின்னர் எதிர்க்கட்சி வரிசையில் அமர போவதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கிறிபத்கொட நகரில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ உன்னதமான மனிதர். அவரது குடும்பத்தினரே அவரை அழித்தனர். நான் 8 ஆம் திகதியின் பின்னர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வேன்.
வாக்குச் சாவடிகளுக்கு சென்று விரும்பியவர்களுக்கு வாக்களியுங்கள் என மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblx5.html
இராணுவத் தளபதியின் பெயரில் 50 மோட்டார் சைக்கிள்கள் பதிவு!
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 10:37.05 AM GMT ]
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் நேற்று இராணுவ தளபதியின் பெயரில் ஐம்பது மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், வவுனியா, மட்டக்களப்பு ,முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஆதாரங்கள் மூலம் தெரியவருகின்றது.
இது தொடர்பாக சில இராணுவ அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. என்ன நோக்கத்திற்காக திடீரென மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஏன் முக்கியமாக வட மாகாணத்திற்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளதாக  ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblx6.html
மைத்திரி, சந்திரிக்கா மற்றும் பொன்சேகாவுக்கு கொலை அச்சுறுத்தல்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 10:37.37 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் தான் அடுத்த வரும் சில தினங்களில் கடும் உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்க நேரிடும் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பக்கமுன பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
எங்கள் பிணங்கள் மேல் இருந்து கொண்டு மகிந்த ராஜபக்ஷ வன்முறையிலும் சண்டித்தனத்திலும் வெற்றி பெற முயற்சித்தால் அது எப்போதும் நடக்காது.
எங்களை கொன்று விட்டு தேர்தலில் அவர் வெற்றி பெற்றால் அது வரலாற்றில் எழுதப்படும்.
ஜனாதிபதி வேட்பாளர், முன்னாள் ஜனாதிபதி, இராணுவ தலைவர் ஆகியோரை கொலை செய்து விட்டு மகிந்த ராஜபக்ஷ பதவிக்கு வந்தார் என்று வரலாற்றில் எழுப்படும்.
எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நாங்கள் எமது உயிர்கள் குறித்து மிக அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம்.
தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்டு இதுதானா ஜனநாயகம் என்று கேட்டேன்.
தாக்குதல்கள் நடத்தும் போது பொலிஸாரும் அதிரடிப்படையினரும் எதும் செய்ய முடியாதவர்களாக இருக்கின்றனர் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblx7.html


Geen opmerkingen:

Een reactie posten