தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 januari 2015

மனச்சாட்சிக்கு விரோதமாக நடக்க முடியாது: அனந்தி- புலிகள் மஹிந்தவிடம் பணம் பெற்றதாகக் கூறப்படும் கருத்து பொய்: சிவாஜிலிங்கம்!



பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவித்தமை தொடர்பாக வடமாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
நேற்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.
முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டத்தின்போது கூடுதலான இன அழிப்புக்கு உள்ளானோம்.
இந்த நிலையில், பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைத்திரிபால,அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோது போரை நிறுத்துமாறு ஒரு சொல்லைக் கூட பயன்படுத்தவில்லை.
எனவே மைத்திரியும் இன அழிப்பில் சம்பந்தப்பட்ட ஒருவர். இவருக்கு வாக்களியுங்கள் என்று மக்களைப் போய் கேட்க முடியாது.
என்னால் மனச்சாட்சிக்கு விரோதமாக இவர்களுக்கு ஆதரவளிக்க முடியாது என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,  கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் பணம் பெற்றனர் என கூறப்படும் கருத்துக்களில் உண்மையில்லை என வடமாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்திருக்கின்றார்.
மேலதிக செய்திகளை வாசிக்க
http://www.newstamilwin.com/show-RUmtyBTYKblx2.html

Geen opmerkingen:

Een reactie posten