தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 januari 2015

தமிழர் ஒருவரை மேல் மாகாண ஆளுனராக நியமித்த சதி திட்டம் அம்பலம்

தமிழ்த் தலைமைகளை குறை கூறும் தவம்…

ஆயுதத் தலைமைகள் குழி தோண்டிப் புதைத்த தமிழ் முஸ்லிம் நல்லுறவையும் சௌஜன்யத்தையும், மீண்டும் துளிர்விடும் போது, வேரோடு சேர்ந்து பிடிங்கி எரியும் பேச்சுக்களை தமிழர் தலைமைகள் பேசுவது, அவர்களின் பெரும்பான்மை ஆதிக்கவாத மனநிலையை மிக தெளிவாக பறைசாற்றுகிறது. இவ்வாறான பேச்சுக்களும் பண்பாடற்ற மொழிகளும், தந்தை செல்வாவின் முகாமிலிருந்து வெளிவருவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
முஸ்லிம்களின் தலைமைகளில், தமிழ் முஸ்லிம் நல்லுறவு பற்றிப் பேசும் முற்போக்கு சக்திகளையும் மௌனிக்க செய்யும், பருவமுறாத பேச்சுக்களை தமிழர் தலைமைகள் தவிர்ந்து கொள்ள வேண்டும். இன்னும் வடக்கு – கிழக்கு இணைப்பும், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் மட்டும் எனும் ஏக இனக்கொள்கை என்பவற்றை முஸ்லிம்களின் மீது திணிக்கும் ஆயுத தலைமைகளின் அடியொற்றிய அரசியலை கைவிட வேண்டும். வடக்கு – கிழக்கு முஸ்லிம்களினதும் தாயகம் என்கின்ற யதார்த்தத்தை ஏற்று, முஸ்லிம்களோடு அரசியல் உறவு கொண்டு தமிழ் பேசும் மாநிலமாக கிழக்கை கட்டியெழுப்ப முன் வரவேண்டும்.
http://www.jvpnews.com/srilanka/95262.html
கருணா, பிள்ளையான் கதையால் ஏமாந்த அப்பாவி மக்கள்
January 24, 20158:37 am
களுவன்கேணி பிரதான வீதி எப்போது புணரமைத்து மக்களின் போக்குவரத்துக்கு விடப்படும் என இப்பாதையால் நடக்கும் ஒவ்வொரு பிரயாணிகளின் மனதில் எழுப்படும் கேள்வியாகும்.

களுவன்கேணி பிரதான வீதியானது யுத்தத்தின் பின்னராக கிழக்கு மாகாண சபை முதல் முதலாக தாவிக்கப்பட்டு முதலமைச்சராக இருந்த சந்திரகாந்தன் ஆட்சிக் காலத்தில் புணரமைத்துதருவதாக உறுதிமொழி வழங்கி முதல்கட்ட வேலைகள் இடம்பெற்றது.

முதல் கட்டவேலைகள் இடம்பெற்ற காலத்தில் இப் பிரதான வீதியை யார் புணரமைப்பது என்ற அரசியல் பின்னணியுடன் கூடிய நிலைப்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டது.

எது எவ்வாறாயினும் கிழக்கு மாகாணத்தில் இரண்டாம் முறையாக நடைபெற்ற மாகாண தேர்தலை ஒட்டிய பிரச்சாரத்தில் இவ் வீதி துரஸ்டவசமாக மாட்டிக்கொண்டது. களுவன்கேணி மக்களின் வாக்குகள் அளிக்கப்படவேண்டும், இரண்டாவது முறையாகவும் என்னை நீங்கள் முதலமைச்சராக கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு வந்தால் வீதி விரையில் புணரமைக்கப்படும் என சந்திரகாந்தனால் மக்களிடம் வாக்குறுதி அளிக்கப்பட்டது. மாகாண சபை கைகூடவில்லை, வீதிக்கான புணரமைப்பு பணிகள் ஸ்தம்பிதம் அடைந்தது.

களுவன்கேணி வீதி முன்னைய காலத்தில் தார் இடப்பட்டு புணரமைக்கப்பட்ட ஒரு பிரதான வீதி. களுவன்கேணி பிரதான வீதியினூடாக பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் மீன் வியாபாரிகள் என போக்குவரத்து செய்வது இப்பாதையினூடகவே நடைபெறுவது வழமை.

வீதி புணரமைத்து தரப்படும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு வழங்கிவிட்டு முதல் கட்டமாக கல்லுடன் கூடிய துசி படிந்த கலவையை அடிப்படை வேலையாக செய்ததின் காரணமாக வேலைகள் ஸ்தம்பிதம் அடைந்ததினால் வீதியால் செல்லமுடியவில்லை.

வீதியில் கொட்டப்பட்டுள்ள கல்லுடன்கூடிய துசி படிந்த கலவை மண் போக்குவரத்து செய்யும்போது பெரும் ஆசோகரியத்தை தருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ் வீதியுடாக கார்ப்பிணி பெண்கள், பாடசாலை மாணவர்கள், நகரத்தில் இருந்து வரும் ஆசிரியர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் நோயளிகள் என பல்வேறு பிரிவினர்களின் போக்குவரத்துக்கு பெரும் சிரம்தைக் கொடுப்பதாக மக்கள் மீண்டும் விசனம் தெரிவிக்கன்றார்கள். இவ் வீதிக்கான புணரமைப்பு பணிகளை முன்னெடுத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கோட்டுக்கொள்கின்றனர் களுவன்கேணி வாழ் பொதுமக்கள்.

கடந்த வருடம் (2014.10.03) பாதையை புணரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்து களுவன்கேணி வீதியை மறித்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது ஆர்ப்பட்டாம் நடைபெற்ற இடத்திற்கு முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் முரளிதன், ஏறாவூர் பற்று பிரதேச செயலளர் உதயசிறிதர் ஆகியோர் ஆர்ப்பட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகைதந்து மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுத் என வாக்குறுதி அளித்தமை குறிப்பிடத்தக்கது.kaluvankeny 01 kaluvankeny 02 kaluvankeny 03 kaluvankeny 04 kaluvankeny
http://www.jvpnews.com/srilanka/95265.html

தமிழர் ஒருவரை மேல் மாகாண ஆளுனராக நியமித்த சதி திட்டம் அம்பலம்

இவர் தென் கொரியாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதரர், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளரார், ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் இயக்குநர் சபை, நிதியமைச்சின் முன்னாள் ஆலோசகரர் ஆகவும் பணியாற்றியுள்ளார்.
ஆய்வு: இலங்கையில் புதிய அரசின் செயல்பாடுகளாக பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
இவை ஒன்றும் பெரிய மாற்றங்கள் அல்ல. சர்வதேச அளவில் கூட இவ்வகையான மாற்றங்கள் இடம்பெறுவது வழக்கமே. அமெரிக்காவில் கூட ஐனாதிபதி மாறினால் புதிய ஐனாதிபதி தனக்கு நம்பிக்கைக்குரிய நியமனங்களையே செய்வார்.
அந்த வகையில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் புதிய நியமனங்கள் அனைத்தும் வெறும் மாற்றமே அன்றி முன்னேற்றம் அல்ல. இதனையிட்டு தமிழர்கள் சந்தோசப்படவேண்டியதில்லை.
இது இவ்வாறிருக்க வடக்கில் தமிழ் பேசும் ஒருவரையே ஆளுனராக நியமிக்கும் படி தமிழ் தேசிய கூட்டமைப்பு நீண்டகாலமாக கேட்டு வந்தது. ஆனால் மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஆளுனர் சந்திர சிறியை அகற்றிவிட்டு ஒரு சிங்களவரையே நியமித்துள்ளது. இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோள் செவி மடுக்கப்படவில்லை.
ஆனால் தமிழ் சமுகத்தினர் ஐ.ஏ சந்திரசிறி போய்விட்டார் என்று சந்தோசப்பட்டுகொண்டிருக்கின்றது. ஆனால் தொடர்ந்தும் ஒரு சிங்களவரே ஆளுனராக நியமிக்கப்பட்டார் என்று கண்டுகொண்டதா ?
இதேபோன்றுதான் மேல் மாகாணத்தில் சிங்களவர் அல்லாத ஒருவரை அதுவும் தமிழர் ஒருவரை ஆளுனராக நியமித்ததன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரை ஆளுனராக நியமிக்கும் வேண்டுகோள் புறக்கணிக்கப்படவுள்ளது.
தமிழ் பகுதியில் தமிழர் ஆளுனராக வேண்டும் என்றால், சிங்கள பகுதியில் சிங்களவர் தானே ஆளுனராக நியமிக்கப்படவேண்டும். ஆனால் இங்கு மேல்மாகாணத்திற்கு தமிழர் ஒருவரை ஆளுனராக நியமித்ததையம் தமிழ தேசிய கூட்டமைப்பு எதிர்க்கவேண்டுமே. தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாயை அடைப்பதற்கு ஒரு வழியாகவே இந்த தமிழர் சிங்கள பகுதியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் வடக்கு மாகாணசபையில் இராணுவ பின்புலம் அல்லாத புதிய ஆளுநராக எச்.எம்.ஜி.எஸ். பலிஹக்கார அண்மையில் நியமிக்கப்பட்டார் என்று தமிழர்கள் மகிழ்ச்சி கொள்ளுகின்றனர்.
ஆனால் இவர் கடந்த மஹிந்த ராஐபக்ச தலமையில் ஐநாவில் கடுமையாக தமிழர்களுக்கு எதிராக உழைத்தவர். மேலும் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான மனித உரிமை விசாரணை தொடர்பில் குறித்த முன்மொழிவை நீர்த்துப்போக செய்ய அரும்பாடு பட்டவர். அந்த அளவுக்கு எச்.எம்.ஜி.எஸ். பலிஹக்கார சிங்கள் அரசின் ஒரு உத்தமர்.
வடக்கில் சிங்களவர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனும் அவசியத்தின் பெயரிலேயே தமிழர் ஒருவருக்கு சிங்கள பகுதியில் ஆளுனர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கிழக்கிலும் சிங்களவர் ஒருவரே நியமிக்கப்படுவார். இது எதிரியின் எதிர்வு கூறல். இந்த நியமனங்கள் அனைத்துமே உள்நோக்கம் கருதியது குறிப்பு எப்படி பார்த்தாலும் இந்த ஆளுநர் நியமனங்கள் அனைத்தும் மைத்திரிபால அரசுக்கு சாதகமே. காரணம் தற்போது நியமனம் பெற்ற தமிழர் கூட நீண்டகாலமாக சிங்கள் அரசுடன் தான் பணியாற்றிவருகின்றார். அவர் தமிழ் மொழியை விட சிங்கள மொழியை நன்கு பேசுவார் என்பதிலும் ஐயமில்லை. மேலும் நாடு தளுவிய ரீதியில் அனைத்து ஆளுனர்களும் சிறிலங்கா அரசின் அடிவருடிகளே.Gavner
http://www.jvpnews.com/srilanka/95275.html

Geen opmerkingen:

Een reactie posten