[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 06:09.03 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகைக்கு வந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இரகசியமான முறையில் சந்தித்தார் என காட்ட மஹிந்த தரப்பு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பில் அரச தொலைக்காட்சிகளில் எதிர்வரும் 7 ஆம் திகதி செய்திகளை ஒளிப்பரப்ப ராஜபக்ஷவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பயன்படுத்தும் கார் போன்ற வேறு ஒரு காரை தயார் செய்து வாகன இலக்கங்களையும் அவரது வாகன இலக்கங்கள் போல் மாற்றி, அந்த கார் அலரி மாளிகைக்குள் செல்லும் பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகும் காட்சியை எதிர்வரும் 7 ஆம் திகதி அரச தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இது பற்றி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து கேட்டு அவர் அதனை உண்மை என்பது போல் தெரிவிக்கும் காணொளியும் ஒளிப்பரப்பட உள்ளது.
அரச தொலைக்காட்சிகளில் பணிப்புரியும் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு அதிகாரிகள் இந்த திட்டத்தை வகுத்து கொடுத்துள்ளதாக அரசாங்கத்தில் இருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொய் பிரசாரம் மற்றும் சேறுபூசும் பிரசாரங்கள் மூலம் தனது வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்படியான தோல்வியான முயற்சியை மேற்கொண்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
தொடர்புபட்ட செய்தி
மகிந்த ராஜபக்ஷவின் இரகசிய திட்டங்களை கசிய விடும் அமைச்சர்கள்!
மகிந்த ராஜபக்ஷவின் இரகசிய திட்டங்களை கசிய விடும் அமைச்சர்கள்!
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblp5.html
ஈழத் தமிழர்களின் தெரிவு மஹிந்தயோ மைத்திரியோ அல்ல: ஈழத்தமிழர்களின் சர்வதேச சபை
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 06:27.54 AM GMT ]
எனவே, இருவரும் தமிழர்களை பொறுத்தவரை அவர்களின் தெரிவாக அமைய மாட்டார்கள் என்று ஈழத்தமிழர்களின் சர்வதேச சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஈழத்தமிழர்கள் தமது நீண்டகால நலனைக்கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.
அத்துடன் ஈழத்தேசத்தின் பாதுகாப்பு தொடர்பில் தமது வெளிப்பாட்டை சர்வதேசத்தின் முன்னால் கொண்டு செல்லும் அளவில் செயற்பட வேண்டும் என்றும் சபை கோரியுள்ளது.
சபையின் இணைத்தலைவர் பேராசிரியர் ஆர்.ஸ்ரீரஞ்சன் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நிலைமைகள் இன்று மாறியுள்ளன. சர்வதேச அரசியல் மாறியுள்ளது. எனினும் இலங்கையின் சிங்கள அரசியல் இன்னும் மாறவில்லை.
தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் தொடர்கின்றன. சிங்கள பௌத்த தமிழர் எதிர்ப்பு கொள்கை தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் சர்வதேசத்துக்கு தெளிவான செய்தி கிடைத்திருக்கிறது.
ஆதாரமாக செய்மதிப் படங்களும் கிடைத்துள்ளன. எனினும் சர்வதேசம், தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை அங்கீகரிப்பதில் தோல்வி கண்டுள்ளது.
தமிழர் தேசத்தில் சிங்களவர்களின் ஆதிக்கம் தொடர்கிறது. இதன் மூலம் தமிழர்களின் மூலவளங்கள் கைப்பற்றப்பட்டு உறிஞ்சப்படுகின்றன.
இந்தநிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலி;ல் போட்டியிடுவோர் சிங்கள பௌத்தர்களின் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றனர்.
தேர்தல் விஞ்ஞாபனங்கள் அதனை உறுதப்படுத்துகின்றன. தேர்தல் விஞ்ஞாபனங்களில் ஈழத்தமிழர்களுக்கான பொறிமுறை எதுவும் கூறப்படவில்லை.
எனவே சிங்கள தேசத்தின் கட்டுக்குள் தொடர்ந்தும் தமிழ் மக்கள் இருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
எனவே எதிர்வரும் தேர்தலில் ஈழத்தமிழர்கள் தமது நீண்டகால நலன் மற்றும் சர்வதேச சமூகத்துக்கு தமிழ்தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான செய்தியை கூறும் வகையில் செயற்படவேண்டும் என்று ஈழத்தமிழர்களுக்கான சர்வதேச சபையின் அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக்கோரிக்கையில் பின்வரும் அமைப்புக்கள் கையொப்பம் இட்டுள்ளன.
இங்கிலாந்தின் பேராசிரியர் ஆர் ஸ்ரீரஞ்சன்( இணைத்தலைவர்)
பெல்ஜியம் தமிழ் கலாசார நிலையம்
கனேடிய தமிழர்களின் தேசிய சபை
டென்மார்க்கின் டெனிஸ் தமிழ்சங்களின் சம்மேளனம்
இத்தாலியின் ஈழத்தமிழர் சபை
பிரான்ஸின் மொய்சொன் டு தமிழ்ஈழம்
ஜேர்மனியின் ஈழத்தமிழர் சபை
நியூஸிலாந்தின் தமிழர் தேசிய சபை
நெதர்லாந்தின் டிச் ஈழத்தமிழர் பேரவை
நோர்வேயின் ஈழத்தமிழர் சபை
சுவிஸின் ஈழத்தமிழர்களின் சபை
பெல்ஜியம் தமிழ் கலாசார நிலையம்
கனேடிய தமிழர்களின் தேசிய சபை
டென்மார்க்கின் டெனிஸ் தமிழ்சங்களின் சம்மேளனம்
இத்தாலியின் ஈழத்தமிழர் சபை
பிரான்ஸின் மொய்சொன் டு தமிழ்ஈழம்
ஜேர்மனியின் ஈழத்தமிழர் சபை
நியூஸிலாந்தின் தமிழர் தேசிய சபை
நெதர்லாந்தின் டிச் ஈழத்தமிழர் பேரவை
நோர்வேயின் ஈழத்தமிழர் சபை
சுவிஸின் ஈழத்தமிழர்களின் சபை
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblp6.html
Geen opmerkingen:
Een reactie posten