மாயமான ஏர் ஏசியா கடலில் தரையிறக்கிய விமானி புதிய புதிர்….
0
கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தை, அதன் விமானி இரியாண்டோ, வானிலை மோசமானதால் வேறு வழியே இல்லை என்ற நிலையில், கடற்பரப்பில் விமானத்தை பத்திரமாக இறக்கியிருக்கிறார். எனினும், மோசமான கடல் அலைகளே விமானத்தை சேதப்படுத்தியிருக்கலாம் என்று நிபுணர்கள் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை காரணமாக விமானம் விழுந்து நொறுங்கியிருந்தால் அவசர காலத்தில் இருப்பிடத்தைத் தெரிவிக்கும் டிரான்ஸ்மிட்டர் செயல்பட்டிருக்கும். ஆனால், விமானம் விழுந்து நொறுங்கவோ, வெடித்துச் சிதறவோ இல்லை.
மோசமான வானிலையின் காரணமாக இனி செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலையில், 162 பயணிகளையும் காப்பாற்ற தனியொரு விமானியால் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலையில்தான், அவர் அவசர காலத்தில் கடற்பரப்பில் விமானத்தை இறக்கியுள்ளார்.
மோசமான வானிலையின் காரணமாக இனி செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலையில், 162 பயணிகளையும் காப்பாற்ற தனியொரு விமானியால் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலையில்தான், அவர் அவசர காலத்தில் கடற்பரப்பில் விமானத்தை இறக்கியுள்ளார்.
விமானம் கடலில் இறக்கப்படும் போது எந்த அதிர்வும் விமானத்துக்கு ஏற்படவில்லை. அதனால்தான் டிரான்ஸ்மிட்டர் செயல்படவில்லை. ஆனால், கடற்பரப்பில் இருந்த மோசமான அலையின் சீற்றம் காரணமாகவே விமானம் சேதமடைந்து விபத்து நேரிட்டது என்று விமானப் போக்குவரத்துத் துறை நிபுணர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
விமான விபத்தின் பின்னணி
விமான விபத்தின் பின்னணி
ஏர் ஏசியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர்பஸ் விமானம், இந்தோனேசியாவின் சுரபாயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புறப்பட்டது. இதில் 155 பயணிகள், விமானிகள் உள்பட 7 ஊழியர்கள் என மொத்தம் 162 பேர் இருந்தனர்.
இந்த விமானம் புறப்பட்ட 42 நிமிடங்களில் விமானத்திலிருந்து தகவல் துண்டிக்கப்பட்டு, அது மாயமானது.
அதனைத் தொடர்ந்து மூன்று நாள்களாக நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையில், அந்த விமானத்தின் நொறுங்கிய பாகங்களும், அதிலிருந்தவர்களின் உடல்களும் மிதந்த நிலையில் இந்தோனேசியாவையொட்டிய ஜாவா கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மூன்று நாள்களாக நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையில், அந்த விமானத்தின் நொறுங்கிய பாகங்களும், அதிலிருந்தவர்களின் உடல்களும் மிதந்த நிலையில் இந்தோனேசியாவையொட்டிய ஜாவா கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டன.
சீரூடை அணிந்த நிலையில் விமானப் பணிப் பெண் ஒருவர் உள்பட விபத்தில் பலியான 7 பேரது உடல்கள் மீட்கப்பட்டன.
மற்ற உடல்களையும், விமானத்தின் கருப்புப் பெட்டி உள்ளிட்ட பிற பாகங்களையும் மீட்க ஏராளமான மீட்புக் குழுவினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற உடல்களையும், விமானத்தின் கருப்புப் பெட்டி உள்ளிட்ட பிற பாகங்களையும் மீட்க ஏராளமான மீட்புக் குழுவினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், அந்தப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை, சூறைக் காற்று, மேகமூட்டம் காரணமாக மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய தேடுதல், மீட்புத் துறைத் தலைவர் பம்பாங் சோயெலிஸ்ட்யோ கூறினார்.
கனடா தமிழர்களின் அறுவடைத் திருவிழாவாக மார்க்கம் மாநகரசபை கொண்டாடவுள்ள தைப்பொங்கல் விழா- 2015
தமிழர்களின் தைப்பொங்கல் விழாவினை முதன் முதலாக தமிழர் மரபு நாள் என்று கனடா மார்கக்ம் நகரசபை உறுப்பினர் (வார்ட்7) திரு லோகன் கணபதி அவர்கள் கனடிய நீரோட்டத்தில் பிரகடனப்படுத்தி கடந்த மூன்று வருடமாய் தமிழர்களின் பாரம்பரியகலாச்சார விழாவாக தைப் பொங்கல் அன்று மார்க்கம் நகரசபை கொண்டாடி வருவது அனைவரின் வரவேற்பையும், உரிய அங்கீகாரத்தையும் தந்து தமிழுக்கும் தமிழர்களுககும் பெருமை சேர்ப்பதாகும். அவவ்கையில் இந்த ஆண்டும் இங்குள்ள அனைத்துத் தமிழ் சமூகங்களும், பல்லின மக்களும் கலந்து கொண்டு மகிழும் வண்ணம் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் எதிர்வரும் 04.01.2015 அன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை மார்கக்ம் தியேட்டர் கலையரங்கில் மிகச் சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாத் தலைவரும், மார்க்கம் நகசைபை உறுப்பினர் திரு லோகன கணபதி அவர்கள் விழா உறுப்பினர்களுடன் கலந்து இந்த ஆண்டு நடைபெற உளள் விழா பற்றிய தகவலை இங்கு வெளிவரும் அனைத்து ஊடகங்களின் ஒருங்கிணைப்பில் கீழகண்ட வகையில் தந்துள்ளார்.
பல்லின மக்கள் வாழும் கனடிய நாட்டில் பல லட்சக்கணக்கான தாயகத் தமிழர்களும், தெற்காசியத் தமிழர்களும தங்களது மொழி, கலை இலக்கிய, ஆன்மீகப் பண்பாட்டு மரபுகளை பேணி காத்து ஒற்றுமையுணர்வுடன் பிற இனமும் பாராட்டும் வண்ணம் பல்வேறு விதங்களில் தங்களது கல்வி அறிவு, ஆற்றல், திறன், ஆகியவற்றை அடையாளப்படுத்தி முத்திரை பதித்துள்ளார்கள் அவர்களின் சாதனைகளுக்கு மேலும் பெருமை சேர்த்திடும் வகையில் மார்க்கம் நகரசபை உறுப்பினர் திரு லாகன் கணபதி அவர்கள் எடுத்துக கொண்ட முயற்சியினால் 2011ம் ஆண்டு டிசம்பர் 13 அன்று முதன் முதலாக மார்க்கம் நகரசபை ஜனவரி உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடும் முதல் பண்டிகையான தைப் பொங்கல் தினத்தை தமிழர் மரபுரிமை நாள் என்று பிரகடனப்படுத்தி ஒவn;வாரு ஆண்டும் பொங்கல் விழா எடுத்து அனைவரையும் மகிழ வைக்கின்றது. மார்க்கம் நகர சபை தொடங்கி வைத்த இந்நிகழ்வு இன்று பிற நகரசபைகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழர் மரபுரிமை தினத்தை கோலாகலமாய் கொண்டாட முற்பட்டுள்ளது.
தமிழர்களின் மரபுரிமை தினம் என்பது தமிழர்களின் பண்பாடடு; மரபுகளை கனடா வாழ் அனைத்து மக்களும் அறிந்துகொளளும் ஒரு பொன்னான வாய்ப்பாகவும், அதே சமயம் எதிர்கால இளம் சந்ததயினரும் தங்களது மொழி, பண்பாட்டு வாழ்வியல் நெறிமுறைகளை அறிந்து பேணி பாதுகாத்திட வழி வகுக்கின்றது.
திரு லோகன் கணபதி அவர்கள் இந்த ஆண்டு நடைபெற உள்ள தைப்பொங்கல் தின கொண்டாடடதிற்கு இங்குள்ள அனைத்துத் தமிழர்களும் திரளாக பங்குகொள்ள வேண்டும் என்பதோடு, குறிப்பாக இங்குள்ள தமிழர் ஊர் சங்கங்கள், இசை, நடனம் போன்றவற்றை பயிற்றுவிக்கும் மையங்கள், தமிழ் சங்கங்கள் போன்றவற்றையும் தொடர் கொண்டு பங்கேற்க வைத்தும், இங்குள்ள அரசியல் பிரமுகர்கள் வர்த்தக வியபார அதிபர்களின் நல் ஆதரவுடன் வெற்றிகரமாய் நடத்திட அனைவரின் ஒத்துழைப்பையும் நாடுகிறார். தமிழர்களின் பண்பாட்டு மரபிற்கேற்ப பொங்கல் வைத்து பல விதமான கலை நிகழ்சச்pகளää; சிற்றுண்டி உபசாரம் என இந்த ஆண்டு விமரிசையாக கொண்டாடவுள்ள தைப்பொங்கல் விழா நிச்சயம் தமிழர்களுக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
Geen opmerkingen:
Een reactie posten